Monday, July 23, 2012

ஆப்பரேட்டிங் சிஸ்டம் - சில அடிப்படைகள்

ஆப்பரேட்டிங் சிஸ்டம் - சில அடிப்படைகள்


விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் நம் அன்றாடப் பணிகளில் கலந்து, நம்மோடு இணைந்த இக்காலத்தில், அதன் பல இயக்கச் சொற்களை அப்படியே ஆங்கிலத்திலேயே நாம் புழங்கி வருகிறோம். அவற்றில் சிலவற்றின் முழுச் செயல்பாட்டினை இங்கு காணலாம்.


1. Abort (அபார்ட்):

ஒரு புரோகிராம் அல்லது செயல்பாட்டினை, அது இயற்கையாக முடிவதற்கு முன்னரே நிறுத்துவதனை அபார்ட் என்கிறோம். இதனை நாமாகவும் நிறுத்தலாம்; தானாக கம்ப்யூட்டரில் சிக்கல் ஏற்பட்டும் நிறுத்தப்படலாம்.

எடுத்துக் காட்டாக, பிரிண்ட் கட்டளை கொடுத்த பின்னர், நாம் விரும்பினால், அச்சிடுவதனை அபார்ட் செய்திட, புரோகிராமே வழி கொடுக்கிறது. எதனையேனும் தேடச் சொல்லி, கட்டளை கொடுத்து, கம்ப்யூட்டர் தேடி, முடிவுகளைப் பட்டியலிடுகையில், நமக்குத் தேவையான தகவல் கிடைத்தால், செயல்பாட்டினை அபார்ட் செய்திட வழி கிடைக்கிறது. இதனை crash என்பதனுடன் ஒப்பிடலாம். கிராஷ் ஏற்படுகையில், சிஸ்டம் முழுமையும், ஆப்பரேட்டிங் சிஸ்டம் உட்பட, முடங்கிப் போய் நின்று விடுகிறது.


2. Batch File (பேட்ச் பைல்):


வரிசையாக அல்லது குழுவாக அமைக்கப்பட்ட கட்டளைகளின் தொகுப்பு. இந்த கட்டளைகளை அப்படியே மொத்தமாக, இவை உள்ள பைலை இயக்கிச் செயல்படுத்தலாம். எடுத்துக் காட்டாக, டாஸ் அடிப்படையில் இயங்கும் சிஸ்டத்தில், சிஸ்டம் தானாக, AUTOEXEC.BAT என்ற பைலை இயக்கும். இதில் டாஸ் இயக்கம் தொடக்கத்தில் இயங்குவதற்குத் தேவையான கட்டளைகள் இருக்கும். சில ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள், பேட்ச் பைல் என்பதற்குப் பதிலாக command file அல்லது shell script எனப் பயன்படுத்துகின்றனர்.


3. BIOS (பயாஸ்):

இதனை பைஓ.எஸ். என அழைக்க வேண்டும். ஆனால் பயாஸ் என அழைக்கப்படுவதே பழக்கமாகிவிட்டது. டிஸ்க்கில் உள்ள எந்த புரோகிராமோடும் தொடர்பு கொள்ளாமல், ஒரு கம்ப்யூட்டர் என்ன செய்திட வேண்டும் என அமைக்கப்பட்டு, கம்ப்யூட்டரிலேயே பதிந்து தரப்படும் ஒரு புரோகிராம். ஒரு பெர்சனல் கம்ப்யூட்டரின் பயாஸ் புரோகிராமில், கீ போர்டு, டிஸ்பிளே ஸ்கிரீன், டிஸ்க் ட்ரைவ்கள், சீரியல் தொடர்புகள் மற்றும் இது போன்ற பல சில்லரை செயல்பாடுகளை மேற்கொள்ள இந்த புரோகிராமில் கட்டளைகள் இருக்கும்.

இந்த பயாஸ் புரோகிராம் ஒரு சிப்பில் பதிந்து தரப்பட்டிருக்கும். இதனால், டிஸ்க் ட்ரைவ் கெட்டுப் போனாலும், கம்ப்யூட்டருக்கு இந்த தொடக்க நிலை புரோகிராம் கிடைக்கும். இதனால் கம்ப்யூட்டர் ஒன்று, தானாக இயங்க வழி கிடைக்கிறது. மெமரி சிப்பைக் காட்டிலும், RAM வேகமாக இயங்கும் என்பதால், பல கம்ப்யூட்டர்களில், பயாஸ் ROMலிருந்து RAMக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து இயங்கும்படி அமைக்கப்படும். இதனை ஆங்கிலத்தில் shadowing என அழைக்கிறோம்.

இப்போது வரும் கம்ப்யூட்டர்களில் flash BIOS என அமைக்கப்பட்டுக் கிடைக்கிறது. அதாவது பயாஸ் புரோகிராம் பிளாஷ் மெமரியில் பதியப்பட்டு இயக்கப்படுகிறது. இதனால், தேவைப்படுகையில், இதனை அப்டேட் செய்து கொள்ளலாம். பொதுவாக BIOS என்பது அனைத்துக் கம்ப்யூட்டர்களிலும் இப்படித்தான் இருக்க வேண்டும் என பொதுவான வரைமுறையுடன் அமைக்கப்படுகிறது.

BIOS புரோகிராமில் பல வகையான பதிப்புகள் இருந்தாலும், அடிப்படையில் அவை ஒரே கட்டமைப்பைக் கொண்டுள்ளன. கூடுதலாக ஏதேனும் டாஸ் கட்டளைகள் தரப்பட வேண்டும் என்றால், அவை சாப்ட்வேர் மூலம் இணைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டரில் இணைத்துச் செயல்படுத்தும் ப்ளக் அண்ட் ப்ளே சாதனங்களைக் கையாளும் புரோகிராம்களை PnP BIOS அல்லது PnPaware BIOS என அழைக்கின்றனர்.


Clean boot (கிளீன் பூட்):

மிகக் குறைந்த எண்ணிக்கையிலான புரோகிராம்களுடன், ஒரு கம்ப்யூட்டரை இயக்குவதற்கு Clean boot என்று பெயர். பொதுவாக, கம்ப்யூட்டர் ஒன்றை இயக்குகையில், இயக்குபவருக்கான, கம்ப்யூட்டிங் சூழ்நிலையை உருவாக்க, பல பைல்களும், புரோகிராம்களும், ட்ரைவிலிருந்து எடுக்கப்பட்டு, இயக்கப்படும். செய்யப்படுகையில், இந்த கூடுதல் புரோகிராம்கள் அனைத்தும் இல்லாமல், ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குவதற்குத் தேவையானவை மட்டும் இயக்கப்படும்.

இவ்வாறு இயக்குவது, கம்ப்யூட்டர் செயல்பாட்டில் உள்ள பிரச்னைகளை அறிய உதவும். இவ்வாறு இயக்கியபின், டயாக்னாஸ்டிக் டெஸ்ட் எனப்படும் சோதனையை மேற்கொள்ளலாம். இந்த சோதனையில், வழக்கமாக கம்ப்யூட்டர் இயங்கத் தேவையான ஓட்டத்தில் எங்கே பிரச்னை உள்ளது என அறியலாம்.

Friday, July 20, 2012

Today Friday 20th of July 2012, Sha'ban 29 1433 AH

This picture is from All Ceylon Jamiyyathul Ulama's Official website for Halaal Division. 

Saturday, July 14, 2012

அக்டோபரில் விண்டோஸ்8 வெளியீடு - மைக்ரோசாஃப்ட்


அக்டோபரில் விண்டோஸ்8 வெளியீடு - மைக்ரோசாஃப்ட்


 புதிய இயங்குதளத்ததினை வருகிற அக்டோபர் மாதம் வெளியிடுவதாக மைக்ரோசாஃப்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்றைய முன் தினம் உலகளவிலான பங்குதாரர் கண்காட்சி கனடாவில் உள்ள டோரன்டோவில் நடைபெற்றது.


இந்த கண்காட்சியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது புதிய இயங்குதளமான விண்டோஸ்-8 வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறது.


இந்த கண்காட்சி 12ஆம் தேதி வரை நடைபெறும். இந்த இயங்குதளம் கொண்ட பிசி கம்ப்யூட்டர்கள் தயாரிக்கும் வேலைகள் மும்முரமாக நடை பெற்று வருகிறது.


இந்த வேலைகள் ஓரளவு முடிந்து வெளியாகும் தருவாயில் உள்ளது. இருப்பினும் கடைசிகட்ட வேலைப்பாடுகள் நடந்து வருகிறது.


ஏனெனில் வாடிக்கையாளர்கள் இந்த புதிய விண்டோஸ்-8 இயங்குதளத்தினை பயன்படுத்தும்போது, மிக சிறப்பான பயன்பாட்டினை கொடுக்க வேண்டும்.


ஆகஸ்டு மாதம் இந்த விண்டோஸ் இயங்குதளம் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


மைக்ரோசாஃப்டின் இந்த புதிய விண்டோஸ்-8 இயங்குதளம் 2,233 டாலர் இருக்கும் என்றும், விண்டோஸ்-8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் 231 சர்வதேச சந்தைகளில் வெளியிட உள்ளதாகவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

Some Medical Books


1. Macleod's Clinical Examination(.chm file)


2. Kumar & Clark's Clinical Medicine (Saunders, 2009) (.pdf file)


3. Hutchisons Clinical Methods


4. History_and_Examination_at_a_Glance_1st_ed_2003060632059664_JonathanG (.pdf file)


5. Medical mnemonics_2002_09_full_abr_8x11 (.pdf file)