டிவி, சினிமாக்கள், சின்னத்திரை, இணையம் என்று சீரழிந்து கொண்டிருக்கிறது நம் சமுதாயம். நாம் இஸ்லாமிய அடிப்படையில் வாழ்கின்றோமா இல்லையா என்பதை நமது குழந்தைகளின் நடத்தைகளை வைத்தே தெளிவாக அறிந்திட இயலும். நமது குழந்தைகளில் பெரும்பாலோர் கார்ட்டூன் படங்களில் வரும் கதாபாத்திரங்களாக மெல்லமெல்ல மாறிக்கொண்டிருக்கின்றனர் என்பது உண்மை. இது ஒரு புறமிருக்க இன்டர்நெட் என்னும் இணையத்தில் அறிவைத் தேடிக்கொள்வதற்கு பதிலாக அசிங்கங்களை தேடுகிறது இளைஞர் கூட்டம். மேலும் திருமணத்திற்குப் பின்னர் தன்மனைவியைக் காதலிப்பதை விட்டுவிட்டு, காதல் - காதலர்தினம் என்று சிற்றின்பத்தில் வீழ்ந்து சீரழிகிறது நம் இளைய சமுதாயம். கேளிக்கைகள்தாம் இன்றைய இளைஞர்களின் இதயத் துடிப்பாகிவிட்டது. வீட்டிலுள்ள முதியவர்களுக்கோ இவைகளைத் தட்டிக்கேட்க முடியாத துர்பாக்கிய நிலை. இத்தகைய அவலங்களை மாற்றி, மண்மூடச்செய்து ஆரோக்கிமான சமூகத்தை உருவாக்கும் ஆற்றல் இஸ்லாத்திற்கு மட்டுமே உண்டு. எனவே அத்தகைய ஆரோக்கியமான சமூக அமைப்பு உருவாக இன்றைய தேவை ஒரு இஸ்லாமியப் பேரெழுச்சி. எங்கும் இஸ்லாத்தை சொல்லுவோம் எமது செயல்களால்....!
ஆரோக்கியமான சமூக அமைப்பு உருவாக இன்றைய தேவை ஒரு இஸ்லாமியப் பேரெழுச்சி. அவ் வெளுச்சிக்கு அடிப்படை அல்- குரான் இருக்க வேண்டும். ஓதக்கூடிய புத்தகமான அல்குரானை வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் ஒழுகக் கூடிய புத்தகமாக மாற்ற வேண்டும். இதற்கு எம் சிறார்களுக்கு அரபு மொழி அறிவு அவசியம் வேண்டும். எனவே, ஆங்கிலத்துடன் சேர்த்து அரபு மொழி கற்போம், எம் இளையோருக்கும் கற்பிப்போம்.
ஆங்கிலமொழியில் அரபு மொழி கற்பதற்கு கீழ்வரும் PDF files ஐ download செய்யவும்.
Book 1
Book 2
Book 3
Glossary
No comments:
Post a Comment