Tuesday, September 2, 2014

இஸ்லாத்திற்கு முரண்படாத கோட்பாடுகள் பாகம் - 01

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபறகாதுஹு...
(54:22) وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ
(மனிதர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டே இந்தக் குர்ஆனை நிச்சயமாக நாம் மிக எளிதாக்கி வைத்தோம். நல்லுணர்ச்சி பெறுபவர்கள் உண்டா? (54:22)
பெருவெடிப்பு கொள்கை (bigbang theory )

விஞ்ஞானம், இந்த உலகத்தின் தோற்றம் பரிணாமத்தின் அடிப்படையில் பெருவெடிப்பு கொள்கையினால் உருவானது என்கிறது. 

பெருவெடிப்பு கொள்கையை பற்றி சற்று பார்ப்போம். இந்த பெரு வெடிப்புக் கோட்பாடுக்கு பல முந்துக் கோட்பாடுகளும் உண்டு. கி. பி. 1912ஆம் ஆண்டில் வெசுட்டோ சிலிப்பர் என்பவர் புவியில் இருந்து அனைத்து நெபுலாக்களும் தூரமாக நகர்ந்து செல்கின்றன என்பதை "டோப்லர் பாதிப்பு" என்ற முறையின் மூலம் அறிந்தார். ஆனால் இவர் பால் வழியின் உள்ளே உள்ள நெபுலாக்களுக்கு மட்டுமே இதைக் கண்டறிந்தார். அதன் பின் பத்து ஆண்டுகள் கழித்து கி. பி. 1922ஆம் ஆண்டில் உருசிய அண்டவியலாளரும் கணக்கியலாளரும் ஆன அலெக்சாண்டர் ஃபிரெய்டு மென் அல்பர்ட் ஐன்ஸ்டீனின்பொதுச் சார்புக் கோட்பாட்டில் இருந்து ஃபிரெய்டு மென் சமன்பாடு என்ற ஒன்றை உருவாக்கினார்.அதையும் நிலையான அண்டக் கொள்கையையும் வைத்து இந்த அண்டமே மொத்தமாக விரிவடையாமல் இருந்திருக்கும் என எடுத்துரைத்தார்.

அதன்பின் கி. பி. 1924ஆம் ஆண்டில் எட்வர்டு ஹபிள் விண்மீன் பேரடைகள் அனைத்தும் ஒன்றை விட்டு ஒன்று விலகியே செல்கின்றன எனக் கூறினார். கி. பி. 1927ஆம் ஆண்டில் பெல்ஜியம் நாட்டின்இயற்பியலாளரும் உரோமன் கத்தோலிக பாதிரியாரும் ஆன ஜியார்சசு லெமெட்ரே, ஃபிரெய்டு மென் சமன்பாட்டை தனியாகச் சமன்படுத்தி (முன் செய்தவர் ஜன்சுடீன் கோட்பாட்டில் இருந்து சமன் செய்தார்)விண்மீன் பேரடைகளுக்கு இடையே உள்ள அகச்சிவப்பு விலகல்களை கண்டறிந்து அனைத்து விண்மீன் பேரடைகளுமே ஒன்றைவிட்டு ஒன்று விலகுகின்றன என கண்டறிந்தார் கி. பி. 1931ஆம் ஆண்டில் ஜியார்சசு லெமெட்ரே இந்த அண்டமே வீங்குகிறது என்னும் வீக்கக் கோட்பாட்டைமுன் வைத்தார்.

பெரு வெடிப்புக் கோட்பாடானது 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வெளியான இரண்டு முக்கிய கண்டுபிடிப்புக்களின் அடிப்படையில் உருவானது. ஒன்று ஐன்ஸ்டீனுடைய பொதுச் சார்புக் கோட்பாடு (General Theory of Relativity). மற்றது அண்டவியற் கொள்கை (Cosmological Principle).

வெடித்த கணமே காலமும் வெளியும் தோன்றியது. இரண்டாம் நொடியில் ஈர்ப்பு விசை தோன்றியது. பிற்பாடு அணுத்துகள்களான குவார்க்குகள் தோன்றின. அணுத்துகள்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதால் புரோட்டானும் நியூட்ரானும் தோன்றின. மூன்று நிமிடங்கள் கழித்து புரோட்டானும் நியூட்ரானும் தன்னுடைய வெப்பத்தை தணித்ததினால் இரண்டும் சேர்ந்து அணுக்கருவை மட்டுமே கொண்ட ஹைட்ரஜனும், ஹீலியமும், இலித்தியமும்உருவாகின. அதன் பிறகு ஐந்து இலட்சம் ஆண்டுகள் கழித்தே எலக்ட்ரான்கள் அணுக்கருக்களால் சிறை பிடிக்கப்பட்டன. அதனால் முறையே ஹைட்ரஜன், ஹீலியம், இலித்தியம் அணுக்கள் உருவாகின. பிற்பாடு முப்பது கோடி ஆண்டுகள் கழித்தே விண்மீன்களும், விண்மீன் பேரடைகளும் உருவாகின. இந்நிகழ்வுகளுக்கு எல்லாம் நடந்து முடிந்த பின்னரே சூரிய மண்டலமும் அதில் உள்ள கோள்களும் தோற்றம் பெற்றன. தற்காலத்தில் இருந்து இவை தோற்றம் பெற்று ஏறத்தாழ ஐநூறு கோடி ஆண்டுகள் ஆகியுள்ளது.

இதில் அடிக் கோடிட்டு காட்ட வேண்டியவைகள் 20 நூற்றாண்டில்தான் இக்கொள்கை தோன்றியது, அதுவரை நம்பப்பட்டுவந்த கொள்கைகள் மறுக்கப்பட்டது, விஞ்ஞானம் முற்றுபெறாத விஷயம் இதில் இன்றைய முடிவு நாளை மாறலாம். இவை அனைத்தும் யூகங்களே.


பெருவெடிப்பின் முடிவில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வான சூரியன், கோள்களின் தோற்றம் நடந்துள்ளது. இதனை குரான் இரத்தின சுருக்கமாக வசனம் 21:30இல் கூறுகிறது. மேலும் வானம் கோள்கள் நிறைந்தது என்றும் வசனம் 85:01இல் கூறுகிறது.

 أَوَلَمْ يَرَ الَّذِينَ كَفَرُوا أَنَّ السَّمَاوَاتِ وَالْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَاهُمَا ۖ وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ ۖ أَفَلَا يُؤْمِنُونَ   
(21:30)
(ஆரம்பத்தில்) வானம் (என்றும்) பூமி (என்றும் தனித்தனியாக) இல்லாமல் இருந்ததை நாமே பிரித்தமைத்து (வானத்திலிருந்து மழையை பொழியச் செய்து அந்த மழை) நீரைக் கொண்டு (உயிருள்ள) ஒவ்வொன்றையும் வாழ்ந்திருக்கச் செய்தோம் என்பதையும் இந்நிராகரிப்பவர்கள் பார்த்தேனும் நம்பிக்கை கொள்ள மாட்டார்களா?(21:30).
(85:1) وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ
கோள்கள் நிறைந்த வானத்தின் மீதும் (85:1)
தொடரும்..... 

No comments:

Post a Comment