- அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
- மனது புண்படும்படி பேசக் கூடாது.
- கோபப்படக்கூடாது.
- சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
- பலர் முன் திட்டக்கூடாது.
- எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
- முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
- மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
- சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
- மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
- வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வேண்டும் பாராட்ட வேண்டும்.
- பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
- வாரம் ஒரு முறையாவது மனம் விட்டுப் பேச வேண்டும்.
- மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
- ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
- பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
- ஒளிவு மறைவு கூடாது.
- மனைவியை நம்ப வேண்டும்.
- முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
- மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
- அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
- தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
- உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
- சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
- சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
- குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
- அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
- நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
- சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
- எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
- சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
- எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
- மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
- மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
- பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
- மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
- கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.
This blog contains so many different types of articles, downloadable PDF books and some other links
Saturday, September 6, 2014
மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள் :-
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment