மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் - meelparvai.net
நவீன காலனித்துவ மூலோபாய திட்டமிடல்களின் படி புதிய உலக ஒழுங்கில் தேசங்கள் மீதான நேரடி ஆக்கிரமிப்புக்கள் இடம் பெறுவதில்லை.
துருவ மயப்படுத்தப் பட்டுள்ள மேலைத்தேய முதலாளித்துவ மேலாதிக்க சக்திகளின் அரசியல் பொருளாதார இராணுவ நலன்களிற்கேற்ப தேசங்களின் ஆட்சி அதிகாரங்கள் வடிவமைக்கப் படுகின்றன.
சோஷலிச கம்யூனிச அதிகார மையங்களுடன் அணி சேர்ந்தோ அல்லது சேராமல் தனியாகவோ அல்லது பிராந்தியங்களில் கூட்டாகவோ ஒத்துழைக்க மறுக்கும் தேசங்களில் அரசியல் பொருளாதார இராணுவ இஸ்திரத் தன்மைகளை ஆட்டங் காணச் செய்கின்ற மூலோபாய நகர்வுகள் மேலாதிக்க சக்திகளினால் முடுக்கி விடப் படுகின்றன.
ஐகிய நாடுகள் பொதுச் சபை, பாதுகாப்புச் சபை, மனித உரிமைகள் அமைப்பு, சர்வதேச நீதி மன்றம், சர்வதேச நாணய நிதியம் , உலக வங்கி உற்பட அத்தனை சர்வதேச அமைப்புக்களும் நவயுக ஏகாதிபத்திய மேலாதிக்க சக்திகளால் தமது நலன்களுக்கேற்ப நகர்த்தப் படுகின்றன.
ஜனநாயக அரசியல் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் தமக்கு ஆதரவான உள்நாட்டு சக்திகளை தோற்றுவித்து போஷிப்பதும், அல்லது தமது நிகழ்ச்சி நிரலுக்கு இசைவாகும் உள்நாட்டுக் கிளர்ச்சிக் குழுக்களை போஷித்து பழம் பெறச் செய்வதும், அரசியல் தலைமைகளை , கட்சிகளை, இனவாத, மதவாத, மொழி வாத சக்திகளை போஷிப்பதும் மேலாதிக்க சக்திகளின் இராஜ தந்திரமாகும்.
ஆபிரிக்க நாடுகளில் உள்ள கனிய வளங்கள், மத்திய கிழக்கில் உள்ள எண்ணெய் வளங்கள், மத்திய ஆசிய நாடுகளில் உள்ள கனிய வளங்கள் என்பவற்றை ஏகாதிபத்திய சுரண்டல் நோக்கங்களிற்காக இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுகின்ற, இராணுவ முஸ்தீபுகள் முதலாம் இரண்டாம் உலகப் போரினானை விடவும், பனிப்போரினை விடவும் கொடிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.
இங்கு தேசங்கள் நேரடியாக ஆக்கிரமிக்கப் படுவதில்லை பிராந்திய சக்திகள் ஒன்றுக் கொன்று மோதவிடப் படுகின்றன, கிளர்ச்சிக் குழுக்கள் போஷிக்கப்படுகின்றன, தேசங்களை துண்டாடுவதற்கான புதிய கிளர்ச்சிக் குழுக்கள் தோற்றுவிக்கப்பட்டு போஷிக்கப் படுகின்றன, பின்னர் சர்வதேச சமூகங்களின் தலையீடுகள் என்ற பெயரில் மேலாதிக்க சக்திகள் சுரண்டல் சூதாட்டங்களில் ஈடுபடுகின்றன.
மேலைத்தேய ஏகாதிபத்திய மேலாதிக்க சக்திகள் தமது நலன்களிற்கு ஏற்ப நகர்த்துகின்ற சர்வதேசப் பயங்கரவாதத்திற்கு “இஸ்லாமிய பயங்கராவதம்” என்று பெயரிட்டுள்ளார்கள். அதற்கெதிரான போராட்டம் என்ற பெயரில் தமது நலன்களிற்கு ஏற்ப தேசங்களை சின்னாபின்னப் படுத்தி தமது அரசியல் பொருளாதார இராணுவ நலன்களினை காத்து வருகின்றார்கள்.
கடந்த நூற்றாண்டில் மேற்படி மேலைத்தேய சிலுவை ஏகாதிபத்திய சக்திகளின் கட்டுக் கோப்பு வல்லரசுகளினதும் அரசியல் தலைமைகளினதும் கட்டுக்கோப்பில் இருந்து பறிக்கப்பட்டு சியோனிஸ இலுமினாட்டிகள் எனும் இரகசிய குழுக்களின் பூரண நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது, பல் தேசியக் கம்பனிகளும், வல்லரசுகளும், அரசுகளும், சர்வதேச நிறுவனங்களும் அவற்றின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே நகர்த்தப் படுகின்றன.
-நன்றி-
meelparvai.net
Original artical www.meelparvai.net
No comments:
Post a Comment