Showing posts with label தமிழ். Show all posts
Showing posts with label தமிழ். Show all posts

Sunday, December 27, 2015

புதிதாய் பிறந்த குழந்தைகளின் மீதான கவனிப்பு

கல்வியறிவு மருத்துவம் மற்றும் ஏனைய வசதிகள் அதிகரித்துக் காணப்படும் இன்றைய காலத்திலும் பல்வேறு சிக்கல்களின் காரணமாக புதிதாய் பிறந்த குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். அவற்றில் பெரும்பாலானவை தகுந்த கவனிப்பின் மூலம் தவிர்க்கப்படக் கூடியவை. அதற்காகப் பெற்றோரும் உறவினர்களும் கவனிக்க வேண்டிய அம்சங்களாவன,

இயலுமானவரை தாயும் சேயும் சேர்ந்திருத்தல் வேண்டும். தாய் குழந்தையை அரவணைப்பதன் மூலம் பின்வரும் நன்மைகளைப் பெறலாம்.
  • தாய்ப்பாலூட்டல் இலகுவாக்கப்படுகின்றது. 
  • தாய்க்கு பால் சுரப்பு அதிகரிப்பதுடன் குழந்தையும் பசியேடுக்கையில் தாய்ப்பாலை பருகமுடிகின்றது.
  • தாய்க்கும் குழந்தைய்க்கும் இடையிலான பாசப்பிணைப்பு அதிகரிக்கின்றது.

Monday, December 14, 2015

வயது வித்தியாசமின்றி அனைவரையும் தாக்கும் பாரிசவாதம்

நாளாந்த கருமங்களில் ஈடுபடும் போது பின்வரும் ஏதேனும் மாற்றங்களை உணர்கின்றீர்களா?
  • உடலினோரு அங்கமோ (முகம், கை, கால்) பாதி உடலோ உணர்வற்ற தன்மை திடீரென ஏற்படுதல்
  • சடுதியானதொரு தடுமாற்றம் அல்லது பேசுவதற்று முயற்சி செய்யும் போது நாக்கு பிறழாத தன்மை அல்லது மற்றவர்கள் பேசுவதை கிரகித்து உள்வாங்க முடியாத தன்மை.
  • ஒரு பக்கப் பார்வையோ, இரு கண்களின் பார்வையிலோ திடீரென பார்வை குறைபாடு ஏற்படுதல்.
  • நன்றாக வேலை செய்து கொண்டிருக்கும் பொழுது திடீரென உருவாகும் சமனிலை குழப்பம் அல்லது உடல் கட்டுப்பாட்டுடன் இயங்குவதில் ஏற்படும் குழப்பம் அல்லது தலைச்சுற்று , சாதாரணமாக நடக்கமுடியாமை அல்லது தள்ளாட்டம்.
  • எந்தவொரு காரணமும் இன்றி உருவாகும் தாங்கமுடியாத தலைவலி

இவற்றில் எந்தவொரு மாற்றம் தென்படினும் உடனடியாக

Friday, November 27, 2015

சர்வதேசப் பயங்கரவாதத்திற்கு “இஸ்லாமிய பயங்கரவாதம்” என்று பொய்யாக பெயரிட்டுள்ளார்கள்.

மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் - meelparvai.net

நவீன காலனித்துவ மூலோபாய திட்டமிடல்களின் படி புதிய உலக ஒழுங்கில் தேசங்கள் மீதான நேரடி ஆக்கிரமிப்புக்கள் இடம் பெறுவதில்லை.
துருவ மயப்படுத்தப் பட்டுள்ள மேலைத்தேய முதலாளித்துவ மேலாதிக்க சக்திகளின் அரசியல் பொருளாதார இராணுவ நலன்களிற்கேற்ப தேசங்களின் ஆட்சி அதிகாரங்கள் வடிவமைக்கப் படுகின்றன.

சோஷலிச கம்யூனிச அதிகார மையங்களுடன் அணி சேர்ந்தோ அல்லது சேராமல் தனியாகவோ அல்லது பிராந்தியங்களில் கூட்டாகவோ ஒத்துழைக்க மறுக்கும் தேசங்களில் அரசியல் பொருளாதார இராணுவ இஸ்திரத் தன்மைகளை ஆட்டங் காணச் செய்கின்ற மூலோபாய நகர்வுகள் மேலாதிக்க சக்திகளினால் முடுக்கி விடப் படுகின்றன.

ஐகிய நாடுகள் பொதுச் சபை, பாதுகாப்புச் சபை, மனித உரிமைகள் அமைப்பு, சர்வதேச நீதி மன்றம், சர்வதேச நாணய நிதியம் , உலக வங்கி உற்பட அத்தனை சர்வதேச அமைப்புக்களும் நவயுக ஏகாதிபத்திய மேலாதிக்க சக்திகளால் தமது நலன்களுக்கேற்ப நகர்த்தப் படுகின்றன.

Sunday, August 9, 2015

கையடக்கத் தொலைபேசிகளும், அவை பயன்படுத்தப்பட வேண்டிய முறைகளும்!

(சை. பைஜுர் ரஹ்மான்) 
நாம் இன்று காணக்கூடிய தொலைத் தொடர்பு சாதனங்கள் அல்லாஹ்வினால் எமக்களிக்கப்பட்ட மிகப் பெரிய அருட்கொடைகளாக இருக்கின்றன என்பதை நாமறிவோம். அத்தகைய சாதனங்களை நாம் அல்லாஹ்வுக்கு வழிப்படும் அம்சங்களிலும், அவனுடைய மார்க்கத்திற்குப் பணி புரியக்கூடிய வழிகளிலும், பெற்றோர் உறவினர் மத்தியிலான தொடர்பினை வலுப்படுத்தக்கூடிய விடயங்களிலும் பயன்படுத்துகின்ற போது, நாமும் அவற்றை சரிவரப் பயன்படுத்தியோர் கூட்டத்தில் ஆகிவிட முடியும். 

நபியவர்களின் காலத்திலோ, ஸஹாபாக்கள் மற்றும் அவர்களைப் பின்தொடர்ந்து வந்தோர் காலத்திலோ இத்தகைய சாதனங்கள் காணப்படவில்லை என்பதைக் காரணங்காட்டி எவரும் அவற்றை தான் விரும்பியமாதிரி உபயோகித்துவிட முடியாது. இஸ்லாம் எக்காலத்திற்கும் உகந்த மார்க்கமாக

Sunday, October 26, 2014

அம்மார் பின் யாஸிர் (ரழி),

தாயார் பெயர் சுமைய்யா(ரழி) தந்தை பெயர் யாஸிர்(ரழி). யாஸிர்(ரழி) தன் தொலைந்து விட்ட சகோதரரைத் தேடியலைந்து மக்கா வந்து சேர்கிறார். மக்ஸுமி கோத்திரத்தில் அடிமைப் பெண்ணாயிருந்த சுமையா (ரழி) அவர்களை அபூஹுதைஃபா அவர்கள் யாஸிர்(ரழி) அவர்களுக்கு மனமுடித்து வைக்கிறார். இவர்களின் புதல்வரே அம்மார்(ரழி). இணைவைப்பாளர்களுக்கு இடையில் ஏகத்துவப் பிரச்சாரம் துவக்கப்படாத அந்நாளில் ஏகத்துவத்தின் மகிமையை உணர்ந்த யாஸிர்(ரழி) சுமைய்யா(ரழி) தம்பதியினர் இஸ்லாத்தில் இணைந்தனர். ஆரம்பத்தில் இஸ்லாத்தில் இணைந்தவர்களில் ஆறாவது நபர் சுமைய்யா(ரழி) ஆவார். குரைஷிகள் இஸ்லாத்தில் இணைந்தோரை துன்புறுத்தினர் அபூஜஹ்ல் போன்ற இணைவைப்பாளர்களில் முக்கியமானோர் மூதாதையர்களின் மூடப் பழக்க வழக்கங்களையும், இணைவைப்பையும் நியாயப்படுத்தி ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட ஏழைக் குடும்பத்தினரை அடிமைகளை கொடுமைப் படுத்தினர். அம்மாரின் குடும்பமும் இக்கொடுமைகளை சந்திப்பதில் விதிவிலக்கு பெறவில்லை. சித்தரவதையின் உச்ச கட்டமாக அம்மாரின் தாயார் சுமையா(ரழி) அபூஜஹலால் மர்மஸ்தானத்தில் ஈட்டியால் குத்திக் கொல்லப்பட்டு இஸ்லாத்தில் முதல் ஷஹீதான பெண் என்ற பெருமையடைந்தார். அது போலவே யாஸிர்(ரழி) அவர்களும். இணைவைப்பாளர்களால் இரக்கமின்றி கொல்லப்பட்டு ஷஹீதானார்கள்.


Friday, October 24, 2014

துஆ என்பது புனித இபாதத்

புனித இஸ்லாம் எமக்குக் கடமை யாக்கியுள்ள “இபாதத்கள்” எனும் வணக்க வழிபாடுகளில் ‘துஆ’ என்பதும் இணைந்திருக்கின்றது என்ப தில் யாரிடமும் மாற்றுக் கருத்து கிடை யாது. இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமை களில் ஒன்றான தொழுகையுடன் இந்த ‘துஆ’ மிக நெருங்கியுள்ளதைக் காண லாம்.

ஏனென்றால், அரபு மொழியில் தொழுகை ‘அஸ்-ஸலாத்’ எனப்படுகிறது. அதிகமான மார்க்க சட்ட வல்லுநர்கள், அல்குர்ஆன் விரிவுரையாளர்கள் இந்த “அஸ்ஸலாத்” என்ற வார்த்தைக்கு ‘அத்துஆ’ என்ற அர்த்தத்தையே அதிகமாக வழங் குவதனை அவர்களில் நூல்களில் காணக் கிடைக்கிறது.

இந்த 'துஆ'வும் நாம் கவனத்துடன், கண்ணியத்துடன், பேணுதலாக கடைப் பிடிக்க வேண்டிய ஒரு இபாதத்தாக உள்ளது. எம் பெருமான் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள் “துஆவாகிறது அதுவே இபாதத் (வணக்கம்)” என்றார் கள். (நூல்: திர்மிதி) இன்னுமொரு அறி விப்பில் அனஸ் இப்னு மாலிக் (றழி) அவர்கள் அறிவிப்புச் செய்கின்றார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘துஆ அது இபாதத்களின் மூளை’யாகும் (திர்மிதீ) எப்படி மனித உடலில் ‘மூளை’ பிர தான இடத்தை வகிக்கின்றதோ அதே போன்று இந்த ‘துஆ’ ஏனைய எல்லா இபாதத்துகளிலும் மிகப் பிரதான இடத் தைப் பெற்றுள்ளது என்பதையே இந்த நபிமொழி உணர்த்துகின்றது.

‘துஆ’வை விடுவது அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டை விட்டு விட்டு பெருமை அடிப்பதன்

Thursday, October 23, 2014

அறிவுரைகள் சில...

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். நாம் இஸ்லாத்தின் அறிவுரைகளை கடைபிடிக்கும் போது, இவ்வுலக வாழ்வு கஷ்டத்திலிருந்து நிம்மதியின் பால், அழிவிலிருந்து ஈடேற்றத்தின் பாலும் மாறிவிடும். அது மட்டும் மல்ல நம் வாழ்க்கை ஒரு புத்துணர்வாக மாறுவதை நாம் காணலாம். எப்போதும் அர்த்தமின்றி அதிகம் பேசுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.

அல்லாஹ் கூறுகிறான் 
தர்மத்தைப் பற்றி அல்லது நன்மையானவற்றை பற்றி அல்லது மனிதர்களுக்கிடையில் சமாதானம் ஏற்படுவதை பற்றி ஏவியதைதவிர அவர்கள் பேசும் இரகசியங்களில் பெரும்பாலானவற்றில் யாதொரு நன்மையுமில்லை. {அன்னிஸா 4:14} 
நாம் பேசுகின்ற பேச்சுக்கள் அனைத்தும் நன்மையை பெற்றுதரக்கூடியதாகவும், சுருக்கமானதாகவும், விளக்கமானதாகவும், கருத்தாழமிக்கதாகவும் அமைந்திருப்பது அவசியமாகும். ஏனெனில் மலக்குகள் எப்பொழுதும் நாம் பேசுகின்ற பேச்சை பதிவு செய்து கொண்டிருக்கின்றார்கள்.

Monday, October 13, 2014

அல்லாஹ்வின் அற்புதங்கள் !

பேராசிரியர் ஹாஜி. T.A.M ஹபீப் முஹம்மது M.Sc.,M.Phil.,

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய ஏக இறைவனைக் குறிக்கும் தனிப்பட்ட பொதுப்பெயர் அல்லாஹ். அல்லாஹ்வினால் அருளப்பட்ட சூரா பாத்திஹாவின் முதல் மூன்று திருவசனங்களில் அல்லாஹ்வின் நான்கு அழகிய திருப்பெயர்கள் சிறப்பாக அமையப் பெற்று அல்லாஹ்வின் மகத்துவ மிக்க குணம் (தாத்) மற்றும் தன்மை (ஸிபத்து) ஆகியவற்றை அறிவிக்கின்றன. ரப், மாலிக், அர்ரஹ்மான் மற்றும் அர்ரஹீம் என்பவையே அந்த நான்கு திருப்பெயர்கள். முதல் இரண்டு பெயர்கள் அல்லாஹ்வின் நிர்வாக அடிப்படையிலும், அடுத்த இரண்டும் அல்லாஹ்வின் செயல் ரீதியிலும் அமைந்துள்ளன. சூரா பாத்திஹாவின் பிற்பகுதியில் நாம் கேட்கும் துஆ அமைந்துள்ளது. ஒவ்வொரு வேளை தொழுகையிலும் நாம் முதன் முதலில் உன்னதமான சூரா பாத்திஹாவை ஓதிவிட்டுப் பின்வேறு சூராவின் திருவசனங்களையும் ஓதி அல்லாஹ்வுக்கே ருகூஉ மற்றும் ஸஜ்தா செய்து நன்றியுடன் வணங்குகிறோம். இனி சூரா பாத்திஹாவில் வரும் அல்லாஹ்வின் திருப்பெயர்களின் மகத்துவத்தை ஆராய்வோம்.

முதல் வசனம் : “அல் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்” – இதன் பொருள் “எல்லாப் புகழும் எல்லா உலகும் ஏகனாய் படைத்துப் பராமரிக்கும் அல்லாஹ்வுக்கே ஆகும்,” இவ்வசனத்தில் ரப்புல் ஆலமீன் என்பது வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றிப் படைத்துக் காத்து பராமரிக்கும் துவக்கமும் முடிவும் இல்லாத அல்லாஹ்வின் நிர்வாக நிலை (official position). வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்துப் படைப்புகளும் அறிவியல் அடிப்படையில் அல்லாஹ்வினால் படைக்கப்பட்டுள்ளன. இதனை அறிவியலார் தங்கள் ஆராய்ச்சியின் மூலம் படிப்படியாக வெளிக்கொணர்கின்றனர்.

Sunday, October 12, 2014

புகழ் என்பது எமக்குரியதல்ல...!


புகழில் மயங்காதவர்கள் யாரும் இல்லை. மதுபோதையை விட புகழ் போதை பயங்கரமானது. புகழில் மயங்கும் மனிதன் அடுக்கடுக்காக பாவங்களை செய்கிறான். பணம், பட்டம், பதவி, பொருள் முதலியவற்றால் ஒரு மனிதன் புகழ் அடையும் போது அவனை அறியாமலே அதில் மூழ்கி விடுகிறான். இஸ்லாம் புகழுக்குரியவனாக அல்லாஹ்வையே கூறுகிறது. மற்றவை அனைத்தும் அல்லாஹ்வுக்கு அடிமைப்பட்டவை என்றே இயம்புகிறது.

புகழை ஏற்படுத்தும் மோகங்களில் இருந்து மனிதன் விடுபட்டு விட்டானென்றால் அவனிடம் அடக்கம், பணிவு அல்லாஹ்விடத்தில் கீழ்ப்படிவு எல்லாமே அமைந்து விடும். ஆசைகளிலிருந்து அவன் விடுபடாமல் இருப்பதே துன்பங்களுக்கெல்லாம் காரணமாக அமைகிறது.

பெருமானார் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் ‘மக்கள் சுட்டிக்காட்டிப் பேசும் அளவுக்கு ஒருவன் மார்க்க விஷயத்திலும் உலக விடயங்களிலும் பிரபலமடைந்து விட்டால் அது ஒன்றே அவனுக்கு போதிய தீங்கு விளைவித்து விடும். இதிலிருந்து தப்பியவர்கள் மிகச் சிலர்.

காய்ச்சல் - ஒரு நோய் அல்ல?

ஒருவருக்கு நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகளின் தொற்று ஏற்படும்போது உடல் வெப்பநிலை உயர்கின்றது. இது காய்ச்சல் (Fever) எனப்படுகின்றது. 

உடம்பு நெருப்பாய் கொதிக்கிறது. நாக்கு கசந்து எதுவும் சாப்பிடப்பிடிக்க வில்லை. அலுப்பு , அமைதியின்மை, உடல் வலி , உடல் பாரம், அடித்து போட்டது போல் உடம்பு துவண்டு விடும். இது தான் காய்ச்சலின் அடையாளம். ஒரு சராசரி மனிதனின் உடல் வெப்பநிலை 98.6°F (37°C). இது ஆளாளுக்கு,நேரத்திற்கு நேரம் சிறிது மாறுபடலாம். ஆனால் இது 100.5°F அல்லது அதற்கு மேலே போகும்போது அதைக் காய்ச்சல் , ஜுரம் என்கிறோம். இதனை அனுபவப்படாதவர்களே இல்லை என்னுமளவு சர்வ சாதாரணமாகக் காணப்படுகிறது.

காய்ச்சல் ஒரு நோய் அல்ல அது உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு ஆயுதம் ஆகும். உடலின் ஏனைய இடங்களில் கிருமித்தொற்றுக்கள் ஏற்பட்டுள்ளதை காட்டும் அறிகுறியாகும். நோயுண்டாக்கும் அனேக பாக்டீரியாக்களும் வைரசுகளும் சாதாரண உடல் வெப்ப நிலைக்குத் தாக்குப் பிடிக்கும். ஆனால் உடல் வெப்ப நிலை சிறிது அதிகமாகும்போது இந்த கிருமிகள் பெருகுவது மிகவும் கட்டுப் படுத்தப்படுகிறது. அதிக வெப்பநிலை வைரசுகளுக்கு ஆகாது. அது மட்டுமல்ல காய்ச்சல் நோயெதிர்ப்புத் திறனையும் அதிகப்படுத்தி அதிக வெள்ளையணுக்களையும், antibody-களையும் உருவாக்குகிறது. இதனால், வீரியம் குறைவான காய்ச்சல்களுக்கு, மருத்துவம் செய்யாது விட்டுவிடுவதும் உண்டு. 

Friday, October 10, 2014

நாவை பேணுவோம்...!!!

  • புறம் பேசாதீர்..(அல்குர்ஆன்.49:12)
  • பொய் பேசாதீர்..(அல்குர்ஆன்.22:30)
  • அவதூறு பேசாதீர்..(அல்குர்ஆன்.33:58)
  • நியாயமே பேசுங்கள்..(அல்குர்ஆன்.6:152)
  • நளினமாக பேசுங்கள்..(அல்குர்ஆன்.20:44)
  • உண்மையை பேசுங்கள்..(அல்குர்ஆன்.3:17)
  • ஆதாரமற்றதை பேசாதீர்..( அல்குர்ஆன்.2:111)
  • மிக அழகியதாய் பேசுங்கள்..(அல்குர்ஆன்.17:53)
  • வீண் பேச்சை தவிர்த்திடுங்கள்..(அல்குர்ஆன்.23:3)
  • மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்..(அல்குர்ஆன்2:83)
  • நேர்மையான சொல்லையே சொல்லுங்கள்..(அல்குர்ஆன்.33:70)
  • கனிவான, அன்பான சொல்லையே சொல்வீராக..(அல்குர்ஆன்.17:28)
  • கனிவான, கண்ணியமான பேச்சையே பேசுவீராக..(அல்குர்ஆன்.17.23)
இவ்வளவு முறை குர்ஆனில் சொல்லியும், நாம் நாவை பாதுகாக்கவில்லை என்றால்...??

வல்ல இறைவனே நம் அனைவரையும் பாதுகாக்கட்டும்..!!!!

மெய்யும் பொய்யும்

பொய் சொல்வது தான் சுலபம் என்கிற மாயக்கருத்து நமக்குள் வியாபித்து இருக்கக்கூடும். ஆனால் அது உண்மையா என்றால் பொய் என்பதே பதிலாகக் கிடைக்கும். ஏனெனில், நமது உள்ளம் பொய் சொல்வதற்காக உருவாக்கப்பட்ட ஒன்று அல்ல!

யாரிடத்தில் என்னென்ன பொய்கள் சொல்லி வைத்தோம் என்பதை நாம் நீண்ட பட்டியல் தயாரித்து வைத்திருந்தால் கூட அந்தந்த நபர்களிடம் இருந்து அந்தந்த பொய்யை நீடித்த நாள் வாழ வைப்பது என்பது மிகவும் கடினமான காரியமாகவே இருக்கும்.

அந்த நபர் அங்கு இல்லை என்று நினைத்துக் கொண்டு வேறொரு நபரிடம் உண்மையைச் சொல்லிக் கொண்டிருப்போம். அதே நபரிடம் கூட வேறொரு விஷயத்துக்காக உண்மையைச் சொல்வதே ஆதாயம் என்ற நிலைக்குத் தள்ளப்படுவோம்.

Wednesday, September 10, 2014

அரபு மொழி கற்போம்

டிவி, சினிமாக்கள், சின்னத்திரை, இணையம் என்று சீரழிந்து கொண்டிருக்கிறது நம் சமுதாயம். நாம் இஸ்லாமிய அடிப்படையில் வாழ்கின்றோமா இல்லையா என்பதை நமது குழந்தைகளின் நடத்தைகளை வைத்தே தெளிவாக அறிந்திட இயலும். நமது குழந்தைகளில் பெரும்பாலோர் கார்ட்டூன் படங்களில் வரும் கதாபாத்திரங்களாக மெல்லமெல்ல மாறிக்கொண்டிருக்கின்றனர் என்பது உண்மை. இது ஒரு புறமிருக்க இன்டர்நெட் என்னும் இணையத்தில் அறிவைத் தேடிக்கொள்வதற்கு பதிலாக அசிங்கங்களை தேடுகிறது இளைஞர் கூட்டம். மேலும் திருமணத்திற்குப் பின்னர் தன்மனைவியைக் காதலிப்பதை விட்டுவிட்டு, காதல் - காதலர்தினம் என்று சிற்றின்பத்தில் வீழ்ந்து சீரழிகிறது நம் இளைய சமுதாயம். கேளிக்கைகள்தாம் இன்றைய இளைஞர்களின் இதயத் துடிப்பாகிவிட்டது. வீட்டிலுள்ள முதியவர்களுக்கோ இவைகளைத் தட்டிக்கேட்க முடியாத துர்பாக்கிய நிலை. இத்தகைய அவலங்களை மாற்றி, மண்மூடச்செய்து ஆரோக்கிமான சமூகத்தை உருவாக்கும் ஆற்றல் இஸ்லாத்திற்கு மட்டுமே உண்டு. எனவே அத்தகைய ஆரோக்கியமான சமூக அமைப்பு உருவாக இன்றைய தேவை ஒரு இஸ்லாமியப் பேரெழுச்சி. எங்கும் இஸ்லாத்தை சொல்லுவோம் எமது செயல்களால்....!


Saturday, September 6, 2014

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள் :-

  1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
  2. மனது புண்படும்படி பேசக் கூடாது.
  3. கோபப்படக்கூடாது.
  4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
  5. பலர் முன் திட்டக்கூடாது.
  6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
  7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
  8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
  9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
  10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.

Saturday, January 5, 2013

தமிழில் டைப் செய்வது எப்படி?

சமூக வலைத்தளங்களில் தமிழில் டைப் செய்வதற்கு மிகச் சிறந்த ஒரு முறையை இதோ உங்களுக்காக பகிர்ந்து கொள்கிறேன்.
  1. கீழுள்ள link ஐ click செய்து  InputToolsSetup.rar என்ற file ஐ download செய்யுங்கள்.
  2. InputToolsSetup.rar 
  3. InputToolsSetup.rar file ஐ  winrar அல்லது winzip மூலம் extract செய்து Input ToolsSetup.exe ஐ double click செய்து  install செய்யுங்க .
  4. இனி Desktop இன் அடியிலுள்ள டாஸ்க் பார் இல் TA Tamil (India) என்பதை select செய்யுங்க. 
  5. நீங்க செய்ய வேண்டியது அவ்வளவுதான் 
  6. இனி எங்கு வேண்டுமானாலும் தமிழில் சுலபாமாக தட்டச்சு செய்யலாம்.

.... பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க ...