அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால். நாம் இஸ்லாத்தின் அறிவுரைகளை கடைபிடிக்கும் போது, இவ்வுலக வாழ்வு கஷ்டத்திலிருந்து நிம்மதியின் பால், அழிவிலிருந்து ஈடேற்றத்தின் பாலும் மாறிவிடும். அது மட்டும் மல்ல நம் வாழ்க்கை ஒரு புத்துணர்வாக மாறுவதை நாம் காணலாம். எப்போதும் அர்த்தமின்றி அதிகம் பேசுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.
அல்லாஹ் கூறுகிறான்
தர்மத்தைப் பற்றி அல்லது நன்மையானவற்றை பற்றி அல்லது மனிதர்களுக்கிடையில் சமாதானம் ஏற்படுவதை பற்றி ஏவியதைதவிர அவர்கள் பேசும் இரகசியங்களில் பெரும்பாலானவற்றில் யாதொரு நன்மையுமில்லை. {அன்னிஸா 4:14}
நாம் பேசுகின்ற பேச்சுக்கள் அனைத்தும் நன்மையை பெற்றுதரக்கூடியதாகவும், சுருக்கமானதாகவும், விளக்கமானதாகவும், கருத்தாழமிக்கதாகவும் அமைந்திருப்பது அவசியமாகும். ஏனெனில் மலக்குகள் எப்பொழுதும் நாம் பேசுகின்ற பேச்சை பதிவு செய்து கொண்டிருக்கின்றார்கள்.

