Monday, February 18, 2013

மொபைல் போன் பேட்டரி பராமரிப்பும் பாதுகாக்கும் வழிகளும்


மொபைல் போன் பேட்டரிகள் ஆங்காங்கே சூடாவதும் வெடிப்பதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. 

இப்படிப்பட்ட சூழ்நிலைகள் ஒரு சிலவே என்றாலும் நமக்கு ஏற்படாமல் இருக்க மேற்கொள்ளப்பட வேண்டிய சில நடவடிக்கைகளைக் காணலாம்.


* மொபைல் போன்களுக்கு போன் நிறுவனங்கள் தரும் ஒரிஜினல் பேட்டரிகளையே பயன்படுத்த வேண்டும். சார்ஜரும் அப்படியே இருக்க வேண்டும்.

* அதிக வெப்பம் உள்ள இடம் அருகேயும் தீ பிடிக்கக் கூடிய இடத்திற்கு அருகேயும் மொபைல் போனை வைத்திருப்பது பேட்டரிகளுக்கு ஆபத்து.

* பேட்டரியை உயரமான இடத்திலிருந்து கீழே போடுவது, அதன் மீது தட்டுவது போன்ற செயல்கள் கூடாது.

* அதிக வெப்ப சூழ்நிலையில் போனை வைத்திருக்கக் கூடாது.

Sunday, February 17, 2013

128 GB யுடன் புதிய ஐபேட்


ஆப்பிள் சென்ற வாரம் தன் ஐபேட் வரிசையில், புதியதாக ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஸ்டோரேஜ் திறன் 128 ஜிபி. இதில் ரெடினோ டிஸ்பிளே உள்ளது. 

ஏற்கனவே ஐபேட் 4 மாடலில், 16, 32, 64 ஜிபி கொள்ளளவு திறனுடன் வடிவமைக்கப்பட்டவை இருந்தன. இப்போது 128 ஜிபியுடன் வந்துள்ளது. தன்னுடைய புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் IOS வெளியான மறுநாள், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது

வரை 12 கோடி ஐபேட் சாதனங்கள் விற்பனையாகி உள்ளன. மக்கள் இதனை மிகவும் நேசிக்கத் தொடங்கி விட்டனர். கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், அவர்கள் ஐபேட் சாதனத்தையே வேலை பார்க்கவும், பொழுது போக்கவும் பயன்படுத்துகின்றனர். 

இதில் பயன்படுத்தவென 3லட்சம் அப்ளிகேஷன்கள் தற்போது கிடைக்கின்றன என்று ஆப்பிள் நிறுவன துணைத் தலைவர் ஷில்லர் கூறியுள்ளார். பிப்ரவரி 5 முதல் வர்த்தக ரீதியாக உலகெங்கும் இது கிடைக்கும். வைபி மட்டும் உள்ள ஐபேட் 799 டாலர்; சிம் வசதி கொண்டது 929 டாலர்.

Friday, February 15, 2013

ஜம்இய்யதுல் உலமா Vs ஹலால் சான்றிதழ்

(அஷ்-ஷேய்க் யூ.கே. அப்துர் ரஹீம் (நளீமி))

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா நடைமுறைப்படுத்திவரும் ஹலால் சான்றிதழ் வழங்கும் விடயம் வேண்டுமென்றே சில இனவாதக் குழுக்களால் ஊதிப் பெருப்பிக்கப்பட்டு ஓர் இனத்துக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு துரும்புச் சீட்டாகப் பயன்படுத்தக் கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது பாராளுமன்றத்திலும் சர்ச்சைக்குள்ளாக்கப்படும் அளவுக்கு இது சென்றுவிட்டிருக்கிறது.

இந்நிலையில் பெரும்பான்மையின சகோதர மக்களுக்கு மத்தியில் பரப்பப்பட்டுவரும் வீண் சந்தேகங்களைப் போக்கும் வகையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அண்மையில் நடாத்திய பத்திரிகையாளர் மாநாட்டிலும் அதன் உதவித் தலைவர் மௌலவி எம்.எம்.ஏ முபாறக் அவர்கள் விடிவெள்ளிக்கு வழங்கியிருந்த செவ்வியிலும் உலமா சபையானது ஹலால் சான்றிதழ் வழங்கும் நடைமுறையை மீள்பரிசீலனை செய்ய அல்லது விட்டுக்கொடுக்கத் தயாராக உள்ளது என்ற கருத்து வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

Sunday, February 10, 2013

கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள்

  1. உங்கள் கணினியின் RAM எனப்படும் Random Access Memoryன் அளவை அதிகப்படுத்தவும். ஒரு சாதாரண கணினிக்கு 1GB போதுமானது. அதன் நினைவகத்தின் அளவை அதிகரிக்க அதிகரிக்க வேகமும் அதிகரிக்கும். இப்போது RAM ன் விலை மிகவும் மலிவுதான்.
  2. கணினியில் ஏற்கனவே நிறுவியிருக்கக்கூடிய தேவையற்ற மென்பொருட்களை நீக்கிவிடுங்கள். புதிதாகக் கணினி வாங்கியிருந்தால் கூட அத்துடன் ஏராளமான தேவையற்ற மென்பொருட்களையும் நிறுவி இருப்பார்கள். அவற்றில் சில மென்பொருட்கள் மட்டுமே நமக்குப் பயன்படும். மீதி அனைத்தையும் நிராகரித்து நீக்கிவிடவும். பழைய கணினியிலும் தேவையற்ற மென்பொருட்கள் இருப்பின் அனைத்தையும் நீக்கிவிடவும். அவற்றிற்குரிய Copy இருந்தால் அதை மட்டும் CD / DVD ல் ஏற்றி burn செய்துகொள்ளவும்.

Saturday, February 9, 2013

All information about iPhone

What device do I have?

You can probably distinguish between iPhone, iPod touch and iPad. But it gets more difficult to differentiate between the different generations of the device. And even within the same device it is sometimes important to know what bootrom version you have. 


Visual differences


1. iPad
There is currently only one generation. They differ only by their options (with or without 3G and memory size). For jailbreaking and unlocking these options are not of importance, except that you sometimes have to select the correct firmware version. The firmware (with or without 3G) does differ. 

2. iPhone
The first generation iPhone (sometimes called 2G version) can be detected by the two colors (plastic and metal) on the back side. The iPhone 4 can be clearly detected by the metal frame on the outer edges. The 3G and 3GS are pretty similar from the outside.

3. iPod touch
The first generation iPod touch has round edges, but a flat backside. Newer models (2nd, 3rd, 4th generation) have a slightly round backside (not completely flat).


Model numbers
You can see the model number in Settings, General, About, Model.

Friday, February 1, 2013

வெள்ளிக்கிழமை

இறை நம்பிக்கை கொண்டவர்களே!
வெள்ளிக் கிழமையன்று தொழுகைக்காக அழைக்கப்படும் போது அல்லாஹ்வை நினைவு கூர்வதன் பக்கம் விரைந்து செல்லுங்கள்.
கொடுக்கல் – வாங்கலை விட்டு விடுங்கள். இது உங்களுக்கு மிகச் சிறந்ததாகும் – நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால்! பின்னர் தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டால் பூமியில் பரவிச் செல்லுங்கள்.
அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! மேலும் அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூர்ந்த வண்ணம் இருங்கள். உங்களுக்கு வெற்றி கிடைக்கக் கூடும்.   அல் - குர்ஆன் (62:9-10)