Showing posts with label iPad. Show all posts
Showing posts with label iPad. Show all posts

Sunday, February 17, 2013

128 GB யுடன் புதிய ஐபேட்


ஆப்பிள் சென்ற வாரம் தன் ஐபேட் வரிசையில், புதியதாக ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஸ்டோரேஜ் திறன் 128 ஜிபி. இதில் ரெடினோ டிஸ்பிளே உள்ளது. 

ஏற்கனவே ஐபேட் 4 மாடலில், 16, 32, 64 ஜிபி கொள்ளளவு திறனுடன் வடிவமைக்கப்பட்டவை இருந்தன. இப்போது 128 ஜிபியுடன் வந்துள்ளது. தன்னுடைய புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் IOS வெளியான மறுநாள், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது

வரை 12 கோடி ஐபேட் சாதனங்கள் விற்பனையாகி உள்ளன. மக்கள் இதனை மிகவும் நேசிக்கத் தொடங்கி விட்டனர். கம்ப்யூட்டர்களைக் காட்டிலும், அவர்கள் ஐபேட் சாதனத்தையே வேலை பார்க்கவும், பொழுது போக்கவும் பயன்படுத்துகின்றனர். 

இதில் பயன்படுத்தவென 3லட்சம் அப்ளிகேஷன்கள் தற்போது கிடைக்கின்றன என்று ஆப்பிள் நிறுவன துணைத் தலைவர் ஷில்லர் கூறியுள்ளார். பிப்ரவரி 5 முதல் வர்த்தக ரீதியாக உலகெங்கும் இது கிடைக்கும். வைபி மட்டும் உள்ள ஐபேட் 799 டாலர்; சிம் வசதி கொண்டது 929 டாலர்.

Friday, January 18, 2013

ஆப்பிள் சாதனங்களில் தமிழ்


விண்டோஸ் பயன்படுத்தப்படும் சாதனங்களில் தமிழ் பயன்படுத்த பல வகை எழுத்துருக்களும், அவற்றை இயக்க பல ட்ரைவர் தொகுப்புகளும் உள்ளன. 

ஆனால், ஆப்பிள் நிறுவனத்தின் சாதனங்களான மேக் கம்ப்யூட்டர், ஐபோன் மற்றும் ஐபேட் ஆகியவற்றில் தமிழ் பயன்படுத்த, யாரும் அவ்வளவாக முயற்சி எடுக்கவில்லை. 

இந்த வகையில் கம்ப்யூட்டரில் வெகு காலமாக தமிழைப் பயன்படுத்துவதில் ஆய்வு மேற்கொண்டு வரும், மலேசியாவைச் சேர்ந்த முரசு அஞ்சல் நிறுவனர் முத்து நெடுமாறன், மொபைல் போன் மற்றும் ஐ பேட் சாதனங்களில் தமிழ் பயன்படுத்த "செல்லினம்' என்ற ஒரு தமிழ் மென் பொருளை உருவாக்கித் தந்துள்ளார். 


இவரே 1994 ஆம் ஆண்டு வாக்கில், விண்டோஸ் சாதனங்களில் பயன்படுத்த முரசு அஞ்சல் என்னும் மென்பொருளை உருவாக்கி, உலகெங்கும் வாழும் தமிழர்கள் பயன்படுத்தும் வகையில் தன் இணைய தளத்தில் தந்தார். இதில் என்ன சிறப்பு எனில், தமிழுக்கென இவர் தரும் அனைத்து மென்பொருள் தொகுப்புகளும், எழுத்துரு கோப்புகளும் முற்றிலும் இலவசமாகவே தரப்பட்டு வருகின்றன. 

Wednesday, January 9, 2013

ஆப்பிள் IOS 6.0.2 புதிய பதிப்பு

ஆப்பிள் நிறுவனம் தன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஐ.ஓ.எஸ். 6.0.2 பதிப்பினை மேம்படுத்தி வெளியிட்டுள்ளது. ஐபோன் 5 மற்றும் ஐபேட் மினிக்கான சிஸ்டம் இது. 

இதில் இயங்கிய வைபி இயக்கத்தில் இருந்த ஒரு பிழை திருத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சில வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. மேலே கூறப்பட்ட சாதனங்களை இயக்குபவர்கள், ஆப்பிள் தளம் சென்று தங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மேம்படுத்திக் கொள்ளலாம். 

மேலும் தகவல்களுக்கு http://support.apple.com/kb/HT1222 என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். 

இங்கு Software Update சென்று Settings என்பதில் கிளிக் செய்து சிஸ்டம் சாப்ட்வேர் தொகுப்பினை அப்டேட் செய்து கொள்ளலாம். அல்லது ஐ ட்யூன்ஸ் (iTunes) வழியாகவும் அப்டேட் செய்திடலாம்.