புனித இஸ்லாம் எமக்குக் கடமை யாக்கியுள்ள “இபாதத்கள்” எனும் வணக்க வழிபாடுகளில் ‘துஆ’ என்பதும் இணைந்திருக்கின்றது என்ப தில் யாரிடமும் மாற்றுக் கருத்து கிடை யாது. இஸ்லாத்தின் ஐம்பெருங் கடமை களில் ஒன்றான தொழுகையுடன் இந்த ‘துஆ’ மிக நெருங்கியுள்ளதைக் காண லாம்.
ஏனென்றால், அரபு மொழியில் தொழுகை ‘அஸ்-ஸலாத்’ எனப்படுகிறது. அதிகமான மார்க்க சட்ட வல்லுநர்கள், அல்குர்ஆன் விரிவுரையாளர்கள் இந்த “அஸ்ஸலாத்” என்ற வார்த்தைக்கு ‘அத்துஆ’ என்ற அர்த்தத்தையே அதிகமாக வழங் குவதனை அவர்களில் நூல்களில் காணக் கிடைக்கிறது.
இந்த 'துஆ'வும் நாம் கவனத்துடன், கண்ணியத்துடன், பேணுதலாக கடைப் பிடிக்க வேண்டிய ஒரு இபாதத்தாக உள்ளது. எம் பெருமான் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள் “துஆவாகிறது அதுவே இபாதத் (வணக்கம்)” என்றார் கள். (நூல்: திர்மிதி) இன்னுமொரு அறி விப்பில் அனஸ் இப்னு மாலிக் (றழி) அவர்கள் அறிவிப்புச் செய்கின்றார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘துஆ அது இபாதத்களின் மூளை’யாகும் (திர்மிதீ) எப்படி மனித உடலில் ‘மூளை’ பிர தான இடத்தை வகிக்கின்றதோ அதே போன்று இந்த ‘துஆ’ ஏனைய எல்லா இபாதத்துகளிலும் மிகப் பிரதான இடத் தைப் பெற்றுள்ளது என்பதையே இந்த நபிமொழி உணர்த்துகின்றது.
‘துஆ’வை விடுவது அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டை விட்டு விட்டு பெருமை அடிப்பதன்
அடையாளத்தைக் காட்டுகின்றது. இதனை எமக்கும் உணர் த்தும் வண்ணம் வல்லவன் அல்லாஹ் வான்மறையில் “மேலும், உங்களது ரப்பு கூறுகிறான் “நீங்கள் என்னையே அழை(த்துப் பிரார்த்தி)யுங்கள்.
அடையாளத்தைக் காட்டுகின்றது. இதனை எமக்கும் உணர் த்தும் வண்ணம் வல்லவன் அல்லாஹ் வான்மறையில் “மேலும், உங்களது ரப்பு கூறுகிறான் “நீங்கள் என்னையே அழை(த்துப் பிரார்த்தி)யுங்கள்.
நான் உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பேன். நிச்சயமாக, என்னை வணங்குவதை விட்டும் பெருமை யடிப்பவர்கள், இழிவடைந்தவர்களாய் நரகம் நுழைவார்கள்” (சூறதுல் முஃமின்) என எமக்கு உணர்த்துகின்றான். அது மாத்திரமன்றி, அல்லாஹ் மீது பொறுப்பு சாட்டுதல் (தவக்குல்) மீது ஒரு சிறந்த ஆதாரமாக இந்த துஆ அமையப் பெற்றுள்ளது.
ஏனெனில் ஒரு துஆப் பிராத் தனை புரியக் கூடியவன் அல்லாஹ்வின் பால் உதவிதேடியவனாக இரு கரமேந்து கின்றான். தனது சகல வேண்டுதல்களை யும் அவனிடம் மாத்திரமே பொறுப்புச் சாட்டுகின்றான். இப்படியானவன் அல்லாஹ் விடம் பிரார்த்தித்தால் நிச்சயம் அவனு டைய பிரார்த்தனைக்கு பதிலளிப்பேன் என்று அல்லாஹ்வே கூறுகிறான்.
நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் “உங்களில் எவருக்கு துஆவின் வாசல் திறக்கப்படுகிறதோ அவருக்கு அருள்களின் பல வாயில்கள் திறக்கப்பட்டு விடுகின் றன. அல்லாஹ்விடம் ஏதாவது ஒன்று கேட்கப்பட்டால் அவனிடம் மிக உவப் பானதாக உள்ள ஆரோக்கியத்தைக் கொடுக் கின்றான்.
நிச்சயமாக துஆப் பிரார்த்திப் பது அவனுக்கு ஏற்பட்ட, ஏற்படாத அனைத்து தீங்குகளை விட்டும் பிரயோசனம் அளிக் கும். எனவே, நபி (ஸல்) அவர்கள் திரு வாய் மலர்ந்தார்கள் அல்லாஹ்வின் அடி யார்களே! நீங்கள் அதிகமாக அல்லாஹ் விடம் துஆப் பிரார்த்தனை செய்யுங் கள்” (நூல்: திர்மிதி) எமக்கு ஏற்படுகின்ற பயம், அச்சம், பீதி, பயங்கரம் போன்ற சந்தர்ப்பங்களில் எமது பலமான ஆயுதத் தைத் தான் பயன்படுத்த வேண்டியுள்ளது.
ஐயூப் நபி (அலை) அவர்களுக்கு பயங்கரவமான ஒருவகை நோய் பீடித் துக் கொண்டது. அவர்களை விட்டும் மக்கள் ஒதுங்கி வாழ ஆரம்பித்தனர். அவர்களுடனான தொடர்பை துண்டித் துக் கொண்டனர். அவர்களின் மனைவி யைத் தவிர மற்றவர்கள் யாவரும் நபி யின் அருகில் நெருங்கவுமில்லை. இப்படி யான நிலையில் நபி ஐயூப் (அலை) அவர்கள் பொறுமையை மேற்கொண்டார் கள்.
சோதனை இன்னும் இன்னும் மேலிடு கையில் இவ்வாறு துஆ செய்தார்கள் என புனித அல்குர்ஆனில் அல்லாஹுத் தஆலா குறிப்பட்டுக் காட்டுகின்றான். “(நபியே!) ஐயூபையும் (நினைவு கூறு வீராக) “நிச்சயமாக ஒரு துன்பம் என் னைத் தொட்டுவிட்டது.
நீயோ கிருபை யாளர்களிலெல்லாம் மிக்க கிருபையாள னாக இருக்கிறாய்” என்று தனது ரப்பை (இறைவனை) அவர் அழைத்த பொழுது, அவருக்கு நாம் பதிலளித்து, அவருக்கி ருந்த துன்பத்தையும் நீக்கி விட்டோம். அவருடைய குடும்பத்தாரையும், அவர் களுடன் அவர்கள் போன்றவர்களை யும் அவருக்கு நாம் கொடுத்தோம். (இது) நம்மிடமிருந்துள்ள கிருபையாக வும், வணக்கசாலிகளுக்கு நினைவூட்டு தலாகவும் இருக்கின்றது.
(அல்-அன்பியா: 83,84)
இந்த துஆ எனும் பிரார்த்தனையாகி றது வாழ்வில் ஏற்படுகின்ற சஞ்சல்ங் களை நீக்கக் கூடியதாகவும், மனக் கவலைகளை அகற்றக் கூடியதாகவும், நெஞ்சத்தை விரிவுபடுத்தக் கூடியதாக வும், எமது எல்லா காரியங்களையும் இலேசுபடுத்தக் கூடியதாகவும், அமை யப் பெற்றுள்ளது.
மேலும் துஆவின் மூலம் அடியான் தனது இரட்சகனிடம் தனிமையில் மன்றாடி, தனது இயலாத தன்மையையும், பலகீனத்தையும் அவனி டம் முன்வைக்கின்றான். அத்துடன் தனது எஜமானாகிய றப்பிடம் தமது தேவைகள் அத்தனையையும் வேண்டுகின்றான்.
இத னால் அடியான் அல்லாஹ்வின் கோபத்தை விட்டும் பாதுகாப்புப் பெற காரணமாக அமைகின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள், “யார் அல்லாஹ் விடம் தனது தேவைகளை கேட்கவில் லையோ- அவர் மீது அல்லாஹ் கோப மடைகின்றான்” (அஹ்மத், திர்மிதி)
அல்லாஹ்விடம் துஆ இறைஞ்சுவ தற்கான ஒழுங்குகள்:
1. துஆவை ஆரம்பிக்கும் போது அல்லாஹ்வை அதிகமாக புகழ்வதும், நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்வதுமாகும்.
ஒரு அடியான் தனது துஆவில் அல்லா ஹ்வை எவ்வாறு புகழ வேண்டும் என அருமை நபி (ஸல்) அவர்கள் எவ் வளவு அழகாகக் கற்றுத் தருகின்றார் கள் என்பதை கீழ்வரும் ஹதீஸிலிருந்து நாம் தெரிந்து கொள்ள முடியும்.
புழாழத் இப்னு உபைத் (ரழி) அவர் கள் கூறுகிறார்கள், நாம் நபி (ஸல்) அவர்களுடன் உட்கார்ந்து கொண்டிருந் தோம். அப்போது ஒரு மனிதர் பள்ளி யினுள் நுழைந்து தொழ ஆரம்பித்தார். தொழுதவண்ணமே அவர் “யா அல்லாஹ்! என்னை மன்னிப்பாயாக! எனக்கு அருள் புரிவாயாக!” யா அல்லாஹ்! என்னை மன்னிப்பாயாக! எனக்கு அருள்புரிவா யாக!” என்று இறைஞ்சினார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள்: “ஏ! தொழுகை யாளியே! நீ அவசரப்பட்டு விட்டாய், நீ தொழுது முடித்துவிட்டால் சற்று நேரம் அமர்ந்து அல்லாஹ்வை எந்த வகையில் புகழ உன்னால் முடியுமோ அவ்வாறு புகழ்வாயாக! அதன் பின்பு என்மீது ஸலவாத்துச் சொல்வாயாக! பின்பு அல்லாஹ்விடம் துஆ செய்வாயாக!” எனக் கற்றுக் கொடுத்தார்கள். பின்பு ஒரு மனிதர் தொழுதார்.
அவர் தொழுததன் பின்பு அல்லாஹ்வை புகழ்ந்தார், நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்தும் கூறினார். இந்த மனிதரும் நபி (ஸல்) அவர்கள் “ஏ! தொழுகையாளியே! நீ அல்லாஹ்விடம் இப்பொழுது துஆ கேளும். உமக்கு அல்லாஹ் பதிலளிப்பான்” எனக் கூறினார்கள். (திர்மிதி) அல்லாஹ்வை தனது துஆவில் புகழ்வதை நபி (ஸல்) அவர்கள் அதிகம் விரும்புபவர்களாக இருந்தார்கள்.
2. தனது பாவத்தை நினைத்து பட் சாதாபப்பட்டு, இதன் பின்பு பாவம் செய்யமாட்டேன் என உறுதி கொள்வது.
இந்த விடயத்தில்தான் அடியானின் உண்மையான அடிமைத்தனம் வெளிப் படுகின்றது. நபி யூனுஸ் (அலை) மீனின் வயிற்றில் சிரமத்திற்கு மத்தியில் இருந்த சமயம் இதனையே மேற்கொண்டார்கள்.
புனித அல்குர்ஆனில் (மீனின் வயிற் றின்) இருள்களில், (நெருக்கடியான யூனுஸ் (அலை) அவர்கள் உன்னைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் (வேறு ஒருவனும்) இல்லை; நீ மிகத்தூய்மை யானவன், நிச்சயமாக நான் அநியாயக் காரர்களில் உள்ளவனாகி விட்டேன்” என்று (பிரார்த்தனை செய்து) அழைத் தார். (அல்-அன்பியா: 87)
3. துஆவின் போது வுழு செய்துகொள் வது, கிப்லாவை முன்னோக்குவது, தனது கைகளை உயர்த்திக் கேட்பது. இந்நிலை யில் துஆகேட்பது உள்ளச்சத்தையும், முழுமையாக அல்லாஹ்வின் பக்கம் முகம் திருப்புவதற்கும் உறுதுணையாக அமைகின்றது.
அப்துல்லாஹ் இப்னு ஸைத் (றழி) அவர்கள் கூறுகிறார்கள், “நபி (ஸல்) அவர்கள் மழைதேடித் தொழுவதற்காக வேண்டி, தொழுமிடத்திற்கு சென்றார்கள். துஆ செய்தார்கள், மழை வேண்டி பிரார்த்தித்தார்கள், பின்பு கிப்லாவை முன்னோக்கினார்கள் மேலும் தனது மேனி யில் இருந்த போர்வையை பிரட்டினார் கள்”. மேலும் அபூமுஸா அஷ்அரீ (றழி) அவர்களின் ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் ஹுனைன் யுத்தத்திலிருந்து திரும்பிய சமயம்.
தண்ணீரைக் கொண்டு வரச் செய்தார்கள். பின்பு வுழூ செய் தார்கள். பின் தனது கைகளை உயர்த்தி துஆ செய்தார்கள். அந்த துஆவில் “உபைத் இன்னு ஆமீர் (என்ற நாயக தோழர்) ஐ மன்னிக்கும்படி வேண்டி னார்கள். (புஹாரி, முஸ்லிம்)
4. சப்தத்தை தாழ்த்தி துஆ செய்வதும், கெஞ்சி மன்றாடிக் கேட்பதும்
துஆவின் ஒழுக்கங்களில் அல்லாஹ் எம்மிடம் எதிர்பார்ப்பது இதுதான். அல் குர்ஆனில் இதனை வலியுறுத்தி “(முஃ மின்களே!) உங்கள் இறைவனை மிக்கப் பணிவாகவும், இரகசியமாகவும், நீங்கள் (பிரார்த்தித்து) அழையுங்கள். நிச்சயமாக அவன் வரம்பு மீறுவோரை நேசிக்க மாட்டான்” (அல்-அஃராப்: 55) எனக் கூறுகின்றான்.
நபி (ஸல்) அவர்கள் “ஏ மக்களே! துஆ வின் போது உங்களுக்குப் பாதகமாக துஆ கேட்கவேண்டாம்’ நிச்சயமாக நீங்கள் உங்களைப் புரியாத, செவிட்டுத் தன்மையுடைய ஒருவனை அழைக்கவில்லை. நிச்சயமாக நீங்கள் அழைப்பவன் நன்கு கேள்வித்தன்மையுள்ளவன், மிக சமீபத் தில் உள்ளவன். அவன் உங்கள் பிரார்த் தனைகளை அங்கீகரிப்பவன்” என அருளினார்கள். (புஹாரி)
5. துஆ ஏற்கப்படும் நேரங்களை பெறுமதியாகக் கருதுதல்
ஹதீஸ்களின் கருத்துகளின்படி துஆ ஏற்கப்படுகின்ற சில குறிப்பான நேரங் கள் உள்ளன. அவைகளை பெறுமதி யாகக் கருதி அந்த நேரத்தில் அதிக மாக துஆவில் ஈடுபடவேண்டும். அவ ற்றுள், ஐவேளை பர்ளான தொழுகைக் குப் பின்னால் உள்ள நேரம், அதான் கூறும்போது, அதானிற்கும் இகாமத்திற் கும் இடைப்பட்ட நேரம், இரவின் பிந்திய பகுதி, ஜும்ஆவுடைய தினம் முழுவதும், அரபாவுடைய நாள், மழை பொழியக் கூடிய நேரம், நபிலான மற் றும் பர்ளான தொழுகையின் போது, ஸ¤ஜூ துடைய சந்தர்ப்பத்தில், அல்லாஹ்வின் பாதையில் போர்புரியும் போது, பட்டாளத் தின் பின்னால் இருந்து கொண்டிருக்கும் போதும் துஆக்கள் அங்கீகரிக்கப்படக் கூடிய நேரங்களாகும். மேலும் இதுதவிர இன்னும் பல சந்தர்ப்பங்கள் உள்ளன. அவற்றில் மிக கவனத்துடன் துஆவில் ஈடுபடவேண்டும்.
6. துஆ கேட்பதற்கு முன்னர் ஹராமான வற்றை விட்டும் தவிர்ந்திருத்தல்
இது துஆ ஏற்கப்படுவதற்கு மிக முக்கியமான காரணமாகும். இந்த விட யத்தில் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் கவனம் செலுத்துவது மிக அவசியமாகும். நபி (ஸல்) அவர்கள் இந்த விடயத்தை வலியுறுத்தி கூறிவைத்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ¥த்தஆலா தூய்மையானவன். தூய்மையான முறையில் மேற்கொள்ளப் படுபவற்றையே அவன் ஏற்கிறான். மேலும் அவன் இறைத்தூதர்களுக்கு என்ன விட யத்தை ஏவினானோ அதையே இறை விசுவாசிகளுக்கும் ஏவுகின்றான். எனவே, அவன் கூறினான் “ஏ! இறைத் தூதர் களே! சிறந்த (நல்ல )வற்றையே புசியுங் கள்!’ மேலும் சிறந்த அமல்களை புரியுங் கள்.
மேலும் கூறினான், ஏ! விசுவாசி களே! நாம் உங்களுக்கு அளித்தவற் றில் நல்லவற்றையே புசியுங்கள்! பின்பு நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரைப் பற்றி குறிப்பிட்டார்கள்: ‘அவர் மிக தூரத் திலிருந்து பயணம் செய்து வருகிறார்.
மிகவும் களைப்புடன் வரும் அவர் பறட் டைத் தலையுடன் மேனியிலே புழுதி படிந்தவராக வருகிறார். (மிக சிரமத்து டன் பிரயாணித்து வரும் பிரயாணியின் துஆவை அல்லாஹுத்தஆலா ஏற்கின் றான் என்ற வகையில்) தனது இரு கைகளையும் வானத்தின் பக்கம் உயர் த்தி “யாரப்! யாரப்!” என துஆ செய் கின்றார். ஆனால், அவரது உணவு ஹரா மாக உள்ளது. அவரது குடிப்பு ஹரா மாக உள்ளது.
அவரது ஆடை ஹரா மாக உள்ளது. ஏன் அவரது உடலே ஹராத்தால் வளர்ந்துள்ளது. இவ்வாறான வரின் துஆவை அல்லாஹ் எங்கே ஏற்றுக் கொண்டு பதிலளிக்கப் போகிறான். (அறிவிப்பாளர்: அபூஹ¥ரைரா (ரலி), ஆதாரம்: முஸ்லிம்)
ஆக துஆவிற்காக இறைவனிடம் கையேந்தும் முன்னர் எம்மை ஹராத்தை விட்டும் பரிசுத்தப்படுத்திக் கொள்ள வேண் டியது மிகவும் ஒரு அவசியமான விட யமாகும். எமது கொடுக்கல் வாங்கல், வியாபாரம், சம்பாத்தியம் அத்தனையும் ஹலாலானதாக அமையப் பெறுவது எமது ‘துஆ’ அங்கீகரிக்கப்பட காரணமாகும்.
எமது கண்மணி நாயகம் (ஸல்) அவர் கள் துஆவின் முறைகளையும் அதை எவ்வாறு கேட்க வேண்டும் என்பதை யும் எச்சந்தர்ப்பத்தில் கேட்க வேண்டும் என்பதையும் அழகாக சொல்லித் தந்தி ருக்கின்றார்கள். அவற்றை நாம் கற்றறிந் தவர்களிடம் தெரிந்து மனனமிட்டு பேணு தலாக ஓதி வர முயற்சி எடுக்க வேண்டும்.
வல்லவன் அல்லாஹ் எம் அனைவ ருக்கும் துணை புரிந்தருள்வானாக
No comments:
Post a Comment