Wednesday, September 3, 2014

இஸ்லாத்திற்கு முரண்படாத கோட்பாடுகள் பாகம் - 02

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபறகாதுஹு...

சென்ற பகுதியில் பெருவெடிப்பின் மூலம் உருவான கோள்களின் தோற்றத்தை பார்த்தோம்...

கோள்களின் இயக்கம்:


கோள்கள் நீள்வட்ட பாதையில் சூரியனை சுற்றுகின்றன என்பதை முதலில் கெப்லர் (ஜெர்மன்) என்னும் விஞ்ஞானி கண்டறிந்தார். இதற்கு முன் டாலமியின் புவிமைய கோட்பாடே புழக்கத்தில் இருந்து வந்தது. இக்கோள்கள் தன்சுழலும் அச்சில் இருந்து அண்டவெளியில் அலைகின்றன, இவை குறிப்பிட்டகால வரையறையில் சுற்றுகின்றன என்பதை பின்னாளில் அறியப்பட்டது. (ஆதாரம்: The world book encyclopedia, NASA, Ames Research Center, California. USA). விஞ்ஞானிகளின் யூகங்கள் காலத்தால் மாறுபடும். நிருபிக்கப்பட்ட இவ்உண்மைகளை குரான் இவ்வாறு கூறுகிறது. 
"அவனே இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் படைத்தான். (அவை) ஒவ்வொன்றும் வான்வெளியில் நீந்துகின்றன." –(21:33) மேலும் (36:38,40),
"அவனே சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன". (13:2)
போன்ற வசனங்களிலும் காணலாம்.
பரினாமக்கோட்பாட்டின் படி சூரியனும்,கோள்களும், பால்வெளியும் உருவாகி அவைகள் தங்களுக்குள் ஒரு பாதையை வகுத்து இயங்குவதை பார்த்தோம்... இனி

புவி உயிர்தோன்ற தகுதிஅடைதல்:

பூமி சூரியனில் இருந்து ரொம்ப தூரம் தள்ளி வந்தது. பூமியில் இருந்து சிதறிய ஒரு துண்டு நிலாவாக மாறியது. அது புவியின் ஈர்ப்பினால் பூமியை சுற்ற தொடங்கியது. பூமி நெருப்பு குழம்பு நிலையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமா ஆற, வெப்பநிலையும் குறைந்து கொண்டு வந்தது.

குளிர்ந்து வாயு மூலக்கூறுகள் (2H&O) இணைந்து நீர் (H2O) மழைப்பொழிவு பெருமளவில் நிகழ்ந்து கடல்கள் உருவாயின. மேலும் பூமி விரிவடைந்ததால் நிலத்தட்டுகள் நகர்ந்து ஒன்றிலொன்று மோதி உயர்ந்து மலைகள் தோன்றின... இம்மலைகள் புவிக்கு நிலையான இருப்புநிலைகளாக உள்ளன. கோள்களின் அடிப்படை வாயு மூலக்கூறுகளே, இவ்வாறு நிலம், நீர், காற்று என்ற அடிப்படை உயிர்நிலைகள் தோன்றின.

இந்நிகழ்வுகளை குரான் தெளிவாக கூறுவதை பார்ப்போம்...
78:6. நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?
78:7. இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?
78:12.உங்களுக்குமேல் பலமான ஏழுவானங்களை உண்டாக்கினோம்.
78:13.ஒளிவீசும் விளக்கை(சூரியனை)யும் (அங்கு) அமைத்தோம்.
78:14.அன்றியும், கார்மேகங்களிலிருந்து பொழியும் மழையையும் இறக்கினோம்
79:27. உங்களைப் படைத்தல் கடினமா? அல்லது வானத்தை (படைத்தல் கடினமா?) அதை அவனே படைத்தான்.
79:28. அதன் முகட்டை அவன் உயர்த்தி அதை ஒழுங்கு படுத்தினான்.
79:29. அவன்தான் இரவை இருளடையதாக்கிப் பகலின் ஒளியை வெளியாக்கினான்.
79:30. இதன் பின்னர், அவனே பூமியை விரித்தான்.
79:32. அதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான்.
பெருவெடிப்பினால் உருவான புவியில் உயிர் தோன்ற மூலகாரணிகளான தனிமங்கள் இடிமின்னல், வேதிவினைகளால் தோன்றின, இங்குதான் நம்மை வியப்பில் ஆழ்த்தும் அதிசயம் நிகழ்ந்தது முன்னரே புவியில் இருந்த மீத்தேன்(CH4), அமோனியா(NH3) மற்றும் ஹைட்ரஜன்(H2) போன்ற தனிமங்களின் உதவியினால் அடினோசின் டிரை பாஸ்பேட் (ATP) என்ற உயிர் மூலக்கூறு தோன்றியது. இதுவே பின்னர் ஒருசெல் உயிரிகளாக மாற்றம் பெற்றது.
இதனை சிகாகோ பல்கலைக்கழகத்தில் ஹெரால்ட் யூரேயின் பட்டதாரி மாணவரான ஸ்டான்லி மில்லர் ஒரு பரிசோதனையை மேற்கொண்டார். மீத்தேன் (CH4), அமோனியா (NH3) மற்றும் ஹைட்ரஜன் (H2) வாயுக்கள் மற்றும் நீர் அடங்கிய ஒரு அறையில் (தொல்-புவியின் வளி மண்டலத்தில் அப்புவியின் நீர்நிலை) மின்-அதிர்வுகளை (தொல் பழம் மின் புயல்கள்) ஏற்படுத்தினார். பின்னர் தெளிவுபடுத்தி எடுத்த கலவையில் உயிரின் அடிப்படை இயங்குதலுக்கு இன்றியமையாதவையான பல மூலக்கூறுகள் (அமினோ அமிலங்கள் உட்பட) உருவாகியிருப்பதைக் கண்டார். கார்ல் சாகன் இதே முறையில் அடினோசின் டிரை பாஸ்பேட் (ATP) எனப்படும் உயிர்களின் ஆற்றல் பரிமாற்றத்திற்கு ஆதாரமான மூலக்கூறினை உண்டாக்கி நிருபித்தார்.  ஆக வறண்டு மலடாய் இருந்த இந்த பூமியில் முதலில் தோன்றியது நீர்வாழ் ஒரு கல பிராணி. இதன் மூலம் பிற உயிரனங்கள் புவியில் பல்கி பெருகின. இதனை அழகாக குரான் கூறுவதை பார்ப்போம்...

2:164. நிச்சயமாக வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமியை இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன.
 தொடரும்...

No comments:

Post a Comment