Sunday, April 14, 2013

இலங்கை ஆண்களுக்கு ஏன் கத்னா (சுன்னத்) அவசியம்... !

(ஏக்கூப் பைஸல் ) 
நேர்மையற்ற மக்களின் எண்ணிக்கை அதிகமாயிருந்து வரும் நாட்டில் .மிக அதிக அளவில் சட்டங்களும் இருந்து வரும் ! 

கத்னா என்பதன் பொருள்

கத்னா என்பது ஆண்களின் ஆணுறுப்பின் முன் தோலை மட்டும் நீங்குவது எனப் பொருள்படும். கத்னாவை -சுன்னத், விருத்தசேனம் எனவும் அழைக்கப்படுகின்றது 

கத்னா செய்வது முஸ்லிம்ளுக்கு மட்டும் கடமையா.. ?

முஸ்லிம்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் கத்னா செய்து கொள்கின்றார்கள். இப்ராஹீம் (அலை) அவர்களைப் பின்பற்றியே இன்றுவரை கத்னா செய்து கொள்கின்ற வாழக்கம் இருந்து வருகின்றது. நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராக ஆவதற்கு முன்பே மக்கத்துக் குரைஷியரும் மதீனாப் பகுதிகளில் குடியேறி வாழ்ந்த யூதர்களும் கத்னா  செய்தார்கள் என்பதனை வரலாறுகள் மூலம் அறிய முடிகின்றது. 

இன்று முஸ்லிம்களைத் தவிர யூதர்கள், கிறிஸ்தர்கள் கத்னா செய்து கொள்வது ஏன் குறைந்துள்ளது..?

ஆரம்ப காலத்தில் ஆண்கள் ஆண்குறியின் முன் தோலை அகற்றிக் கொள்ளும் பழக்கம் யூத இனத்தில் சுகாதாரப் பழக்கமாக இருந்தது. இதனால் சுன்னத் செய்யாதவர்கள் அசுத்தமானவர்கள், சுன்னத் செய்தவர்கள் சுத்தமானவர்கள்; என்ற கருத்தினை யூதர்கள் வெளியிட்டார்கள். பின்னர் யூத மதப் பிரிவுகளும், கிறிஸ்தவ மதப் பிரிவுகளும், இஸ்லாம் மதமும் சுன்னத் செய்து கொள்வதை மதப் பழக்கமாக்கியது. இஸ்லாம் மதம் ஏனைய மதங்களை விட சுன்னத் செய்வதனை இஸ்லாமிய ஆண்களுக்கு கட்டாய கடமையாக்கியதனை  அறிந்த மாற்று மதத்தவர்கள் .கத்னா செய்வதனை ஒழுக்கம் சார்ந்தவை எனப் பிரச்சாரம் செய்தார்கள். ஆண்குறியில் தொற்று நோய்கள் ஏற்படாமல் இருக்க ஆண்களின் ஆண்குறியின் முன்தோலை அகற்றிக் கொள்ளும்படி சொன்ன மாற்று மதத்வர்கள் பிறகு ஆண்கள் ஆண்குறியின் முன்தோலை  அகற்றத் தேவையில்லை என்றார்கள். இதற்கு முக்கிய காரணம் சுன்னத் செய்வது பற்றி நபியவர்கள் கூறியதாகும்.

ஆண்கள் கத்னா செய்வதற்கான ஆதாரங்கள்..!

இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) அவர்கள் எண்பது வயதிற்குப் பிறகு விருத்தசேனம் செய்து கொண்டார்கள். அவர்கள் கதூம் (எனும் கூரிய ஆயுதத்தின் ) மூலமாக விருத்தசேனம் செய்து கொண்டார்கள் (புகாரி 3356,6298 அஹ்மத் )

விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக்களைந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது. அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டிக் கொள்வது. மீசையைக் கத்தரித்துக் கொள்வது ஆகிய ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும்.(புகாரி 5889,5891,6297 .முஸ்லிம் 377,378, திர்மீதி. நஸயி,ஆபூதாவூத் , இப்னுமாஜா, அஹ்மத் ,முஅத்தா மாலிக்) 

கத்னா செய்வது பற்றி அமெரிக்காவின் நவீன ஆய்வுகளின் முடிவுகள்

கத்னா பற்றி அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் டொக்டர் ஆரான் தோபியான் தலைமையில் செய்யப்பட்ட ஆய்வில் அமெரிக்காவில் 1970  ஆம் ஆண்டு 79 சதவீதமாக இருந்த கத்னா செய்வர்களின் எண்ணிக்கை தற்போது 55 சதவீதத்திற்கும்  குறைவாக இருப்பதால் எச்.ஐ.வி நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிககையும், ஆண்குறி புற்று நோயளர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகாரித்துள்ளது. இதனால் கத்னா செய்யாததினால்; ஏற்படும் பாதிப்புக்களினால் அமெரிக்காவில் ஒரு வருடத்திற்கு 4 மில்லியனுக்கும் அதிகமான டொலர்கள்; நஷ்டம் ஏற்படுகின்றது. ஆண்கள் ஆண்குறியின் முன்தோலை அகற்றுவதால் ஏற்படும் நன்மைள் அதிகமாக இருந்த போதும் அமெரிக்காவில் கத்னா செய்வோரின் எண்ணைக்கை குறைந்துள்ளது. எனவே அமெரிக்காவில் கத்னா செய்பவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தால் எச்.ஐ. வி பாதிக்கப்படுவதையும் வீண் செலவுகளையும் குறைக்கலாம் என்றும்  டொக்டர் ஆரான் தோபியான் குறிப்பிட்டார். 

கத்னா செய்வது பற்றி கனடா நாட்டின் நவீன ஆய்வுகளின் முடிவுகள்

பிராஸ் நியூஸ் ஏஜென்ஸ் பத்திரிகையில் அகில உலக எய்ட்ஸ் ஆராய்ச்சியின் முன்னோடியான டொக்டர் ஃப்ராங் பிளம்மர் குறிப்பிடும் போது ஆண்கள் கத்னா செய்து கொள்வதை உலக அளவில் நடைமுறைப்படுத்தினால் எய்ட்ஸ் நோயினை அதிக அளவில் தடுக்கலாம் என்று குறிப்பிட்டார்.

கத்னா செய்வது பற்றி பெல்ஜிய நாட்டின நவீன ஆய்வுகளின் முடிவுகள்

டொக்டர் பீட்டர் பையோர் எச்.ஐ.வி. ஆண்களுக்கு பரவுவதில் ஆண் இன உறுப்பின் முன் தோல் பாகம் முக்கிய பங்கு வகிக்கிறது.ஆண்களுக்கு மத்தியில் எச்.ஐ.வி பரவுவதில் இதுதான் மிக முக்கிய அபாயகரமான காரணியாக திகழ்கிறது என்பதனை கண்டு பிடித்ததாக கூறினார்

ஜெர்மனி நீதிமன்றம் கத்னா செய்வதற்கு தடைவிதித்தது. 

2012.ஜுன் மாதம் ஜெர்மனியின் கொலெக்னே நீதிமன்றம் இளம் வயதினருக்கு கத்னா செய்வது சட்டவிரோதமானது என தீர்ப்பு அளித்தது. எனினும் ஜெர்மனி அரசு கத்னா மத செயற்பாட்டுக்கு சட்ட அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனால் 2012.09.11 ஆம் திகதி முஸ்லிம்களும் யூதர்களும் மற்றும் 50 சமூக அமைப்புக்களும் இணைந்து நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தார்கள்.

ஜெர்மனி பாராளுமன்றம் கத்னா செய்வதற்கு சட்ட அந்தஸ்து வழங்கியது.

ஜெர்மனி நீதிமன்றம் கத்னா செய்வதற்கு தடைவிதித்த போதும் ஜெர்மன் பாராளுமன்றத்தில் கத்னா பற்றிய விவாதத்தினை பாராளுமன்றத்தில் அதிக பொரும் பன்மையான உறுப்பினர்கள் கத்னாவுக்கு சார்பாக பேசியதால் கத்னா செய்து கொள்வதற்கு சட்ட அந்தஸ்தினை வழங்கியது 

கத்னா செய்யவிட்டால் ஏற்படும் விளைவுகள் பற்றி டொக்டர் டொனல்டு 

டொக்டர் டொனால்டு குறிப்பிடும் போது எச்.ஐ.வி வைரஸ் கிருமிகள் மியூகடகஸ் மெம்ப்ரெய்ன் என்ற தோலின் மேற்பகுதி மூலமாக உடலுக்குள் செல்கின்றது. கத்னா செய்யப்படாவிட்டால் முன்தோலின் வெதுவெதுப்பும் , ஈரத்தன்மையும் வைரஸை பெருகச் செய்து. உடலுக்குள் செல்லும் வழியைத் தேடிக் கொள்ளும் வரை அந்த இடத்தில் பாதுகாப்படுகிறது.

டொக்டர் டொனால்டு குறிப்பிடும் போது கத்னா செய்து கொள்வதன் மூலம் உடல் நலத்தை அதிக அளவில் பாதுகாத்துக் கொள்ள முடியும் .கத்னா செய்து கொண்டவர்களின் சிறு நீரகப்பை ,கிட்னி பாக்டீரியா கிருமிகளால் பாதிக்கப்படும் அளவை விட ,கத்னா செய்து கொள்ளாதவர்களின் சிறு நீரகப்பை , கிட்டி 15 மடங்கு அதிகமாக பாதிக்கப்படும். 

2007 ஆண்டு பி.பி.ஸி உலக சேவை வெளியிட்ட தகவல் எச்.ஐ.வி தொற்றினைத் தடுக்க கத்னா செய்யுங்கள்

எச்.ஐ.வி எயிட்ஸ் தொடர்பாக உலகளவிலான மாநாடு ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது.ஆண்களுக்கு செய்யப்படும் கத்னாவினை அதிகரித்தால் 60 வீதமாக எய்ட்ஸ் வராமல் தடுக்க முடியும் என்பதன் ஆய்வரிக்கையினை 5000க்கும் மேற்பட்ட குழுக்கள் பெற்றுக் கொள்கின்கின்றன.  ஆபிரிக்க நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் கத்னா செய்யப்பட்டதன் காரணமாக எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்படவில்லை. என்றும் முஸ்லிமல்லாதவர்கள் மிக அதிகமான அளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும் ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டது என பி.பி.ஸி செய்தி வெளியிட்டது.

2011 ஆண்டு பி.பி.ஸி உலக சேவை வெளியிட்ட தகவல் எச் .ஐ.வி தொற்றினைத் தடுக்க கத்னா செய்யுங்கள்

உலகில் மூன்று கோடி முப்பது லட்சத்திற்கும் அதினமானவர்கள் எச்.ஐ.வியினால் பதிக்கப்பட்டு இருக்கின்றார்கள். பெண்களில் இருந்து ஆண்களுக்கு எச்.ஐ.வி தொற்றாமல் தடுப்பதாற்காக ஆண்கள் கத்னா செய்து கொண்டால் எயிட்ஸ் நோயினை 60 வீதத்தினால் குறைக்க முடியும் என்பதனை ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஜிம்பாபே அரசாங்கம்  கத்னா செய்யும் திட்டத்தினை அமுல்ப்படுத்தத் தொடங்கியுள்ளது 2025 ஆம் ஆண்டு பத்து லட்சம் ஆண்களுக்கு கத்னா செய்ய முடியும் என்று ஜிம்பாபே அரசாங்கம் தெரிவித்தது.

அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை கத்னா செய்தால் எச்.ஐ.வி. பதிப்பை தடுக்கலாம்

அமெரிக்காவின் சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி நியூயோர்க் டைம்ஸின் செய்தியாளர் டொனால்டு ஜி. மெக்நெய்ல் சுரப்பிகளிலிருந்து சுரந்து வரும் உயிரணுக்கள் ஆணுறுப்பின் நுனித் தோல் பகுதியில் தேங்குகின்றன. எச்.ஐ.வி யினால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வைரஸானது உடலுறவின் போது. ஏற்கனவே தேங்கி நிற்கும் இந்த உயிரணுத் தொகுதிக்குள் எளிதில் தொற்றி கொண்டு விடுகின்றது. அதனால் உடலுறவு கொண்ட அந்த ஆணும் எச்.ஐ.வி. வைரஸ் தாக்குதலுக்கு எளிதில் இலக்காகி விடுகின்றான்.   

இலங்கையில் அனைத்து ஆண்களுக்கும் ஏன் கத்னா செய்ய வேண்டும்

இலங்கையில் இதுவரை 250 பேர் எயிட்ஸ் நோயினால் இறந்தும் 3000 பேர் பாதிக்கப்பட்டும் இருக்கின்றார்கள் மற்றும் 1463 பேர் ஒரினச் சேர்க்கையாளர்கள் எயிட்ஸ் நோயினால்;  பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள்; இதில் 15 வயதிற்கும் 49 வயதிற்கும் இடைப்பட்டவர்கள்தான் அதிகமானவர்கள் ஆகும.; இதில் மேல் மாகணத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக காணப்படுகின்றார்கள் எனவும் இலங்கையின்  எயிட்ஸ் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் எதிரிசிங்க குறிப்பிட்டார். 

இலங்கை அபிவிருத்தி அடைந்து வருகின்ற நாடு என்பதனால் வைத்தியத் துறைக்கு அதிக செலவினை செய்ய முடியாது .இன்று கிட்னி. சிறுநீராகப் பிரச்சினை என்று பல்வோறுபட்ட நோய்கள் அதிகரித்து வருகின்றன. இன்று முஸ்லிம் ஆண்களை விட மாற்று மத ஆண்களுக்குத்தான் அதிகம் இவ்வாறான பிரச்சினைகள் எழுகின்றன எனவே நாட்டின் அபிவிருத்திக்கும். ஆரோக்கியமான நாட்டினை கட்டியொழுப்ப இலங்கை வாழ் அணைத்து ஆண்களுக்கும்; சுகாதாரத்தினை கடைபிடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இக் கட்டுரையின் நோக்கம் 

அண்மையக் காலமாக இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு எதிராக விடப்படுகின்ற ஊடக கருத்துக்களில் இஸ்லாமிய மதக் கடமைகளை தூஷித்து விடப்படுகின்றது. அந்த வகையில் அண்மையில் விடப்பட்ட சுன்னத் செய்வது மோசமான ஆபாசமாகும். மற்றும் பொருத்தமற்ற ஒன்றாகும்  என்ற கருத்துக்களை பாராளுமன்ற உறுப்பினர்களும் சில அமைப்புக்களும் சிங்கள மக்களுக்கு அறிவிக்கின்றது.  இந்த நிலையில் நாங்கள் முதலில் தெளிவுபெற வேண்டும். மற்றும் மற்றவர்களுக்கும் தெளிவாக விளங்கப்படுத்த வேண்டும. எனவே சிங்கள மொழியில் தேர்ச்சியுள்ளவர்கள் இக் கட்டுரையினை சிங்களத்தில் மொழி பெயர்ப்புச் செய்து இணையத்தில் பதிவிறக்கவும் .  

நன்றி jaffnamuslim.com