“ஸியோனிஸம் ஜனாதிபதி முர்ஸியை பதவி கவிழ்ப்பதற்காக மதச்சார்பற்ற சக்திகளை தூண்டிவிட்டு,அதற்காக உதவியும் புரிந்து வருகின்றது.ஆனால்,தற்காலிகமான வீழ்ச்சி,தொடர்ந்தேர்ச்சையான பெரும் இஸ்லாமிய அலையொன்றை தோற்றுவிக்கும் என்பதையும் அது தமது தேசத்தை அழித்துவிடக் கூடிய ஒரு போராட்டமாக மாறும் என்பதையும் அவர்கள் சரியாக புரிந்து கொள்ளத் தவறி விட்டனர்.அல்லாஹ்வின் மீதாணையாக அந்த முடிவை இறை நியதியுடாக நான் உறுதியாகவே காண்கிறேன்.அல்லாஹ் எகிப்தினுள்ளே அசத்திய சக்திகளை முழுமையாக துடைத்தழித்து விடுவான் என்பதற்கான போதிய ஆதாரங்களை நான் அதிலே காண்கிறேன்.
இதனூடாக எகிப்து நாம் எவ்வாறு அநியாயக்காரர்களிடமிருந்து எம்மை விடுவித்துக் கொள்வது என்பதற்கான ஒரு முன்மாதிரியாக அமையும்.அதனைத் தொடர்ந்து தூய்மையும் தெளிவும் கொண்ட ஒரு தலைமையின் கீழ், 'அல்லாஹு அக்பர்' என பொறிக்கப்பட்ட ஒரு பச்சைக் கொடியின் நிழலில் தெளிவான இஸ்லாமிய வழியிலமைந்த ஒரு போராட்டம் இடம் பெறும்.அதில் தெளிவான வெற்றியை இஸ்லாமிய வாதிகள் பெறுவர்.அந்த வெற்றி இப்போதிருந்து 09 அல்லது 10 வருடங்களில் 2022 இல் இடம் பெறும்.”
- முஹம்மத் அஹமத் றாஷித்-
'சுதந்திரத்திலிருந்து மதம் மாறுதல்'எகிப்தில் சட்ட புர்வமாக, ஜனநாயக ரீதியாக தெரிவு செய்யப்பட்ட ஆட்சிக் கெதிராக இடம் பெற்ற இராணுவப் புரட்சியின் ஆழ,அகலங்களை சரியாக படம் பிடித்துக் காட்டும் ஒரு நூல்.இது அறபுலகின் முக்கிய சிந்தனையாளர்களுள் ஒருவரான ஷெய்க் றாஷிதினால் புரட்சியின் ஆரம்ப நாட்களில் எழுதப்பட்டது.தஃவாவின் ஆழ்ந்த அனுபவப் பார்வையுடன் இந்தப் புரட்சியின் பின்னணி,அதன் எதிர்கால விளைவுகள்,அந்த விளைவுகளை எப்படி உருவாக்கலாம் என்பது பற்றி இந்நூல் உரையாடுகிறது.
இந்த நூலில் எதிர்வு கூறப்பட்ட ஒவ்வொரு விடயத்தையும் வரிக்கு வரி நாம் இன்று களத்திலே காண்கிறோம்.இந்தப் புரட்சியின் இலக்கு எகிப்திலே ஜனாதிபதி முர்ஸியின் ஆட்சியை கவிழ்ப்பது என்பதைப் பாரக்கிலும் இஸ்லாத்தையும் இஸ்லாமிய வாதிகளையும் புண்டோடு அழித்து ஒழிப்பதுதான் என்பதை இந்நூலின் வரிகள் சொல்வது போல் நாம் களத்தில் காணும் யதார்த்தமாகும்.
அமெரிக்காவின் இராணுவ,அரசியல் கொள்கைகளை தீர்மானிப்பதற்கு வேண்டிய ஆய்வுகளை செய்து வழங்கும் 'RAND' என்ற நிறுவனம் இந்தப் புரட்சிக்கு நான்கு மாதங்களுக்கு முன் வெளியிட்ட ஓர் ஆய்வில் இந்த இராணுவப் புரட்சிக்கான தேவையை எதிர்வு கூறியிருந்தது. “அமெரிக்கா தனது முதற்தர எதிரியாக 'அல்-காஇதா'வை கொண்டிருந்தது போல் இன்று 'அல்-இஃவானுல் முஸ்லிமூன்'அமைப்பை கொள்ள வேண்டும்.ஏனெனில் அறபு வசந்தத்தை தொடர்ந்து அது அதிகாரத் தளங்களை கைப்பற்றி வருகின்றது.அவர்கள் மிகவும் உறுதியான நிலைப்பாடுகளைக் கொண்ட ஓர் அமைப்பு.அமெரிக்க அரசியலுடன் இயைந்து செல்லும் வகையில் அவரகளை மாற்ற எடுத்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன.எனவே அவரகளது ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து,அவர்களை ஒழித்துக்கட்ட வேண்டும்.”இந்தப் பின்னணியில் இருந்துதான் எகிப்தின்,இஸ்லாமிய உலகின் இன்றைய நிகழ்வுகளை நாம் பார்க்க வேண்டியுள்ளது.மேற்கிற்கும் ஸியோனிஸத்திற்கும் உலக அரங்கில் பெரும் சவாலாக இருப்பவர்கள் இந்த இஸ்லாமிய வாதிகளே.அவர்கள் விலை கொடுத்து வாங்கப்பட முடியாதவர்கள்.இதனை ஒரு சந்தர்பபத்தில், அமெரிக்காவின் முன்னால் தலைவர்களுள் ஒருவரான கிளின்டன் ஹமாஸின் அரசியற்பிரிவுப் பொருப்பாளர் காலித் மிஷ்அலிடம் “ஹமாஸின் தலைவர்களே உங்களுக்கு விலை கிடையாது” என நேரடியாகவே குறிப்பிட்டிருந்தார்.
குறிப்பாக இன்று எகிப்தில் இடம் பெறும் கொலைகள் எமக்கு பெரும் அழிவாக தென்பட்ட போதும் எகிப்தின் சனத் தொகையுடன் ஒப்பிட்டு நோக்கும் போது தச விகிதத்திலையே அந்த இழப்புக்கள் காணப்படுகின்றன.இது ஆயுதப் போராட்டமொன்று இடம் பெறுமாயின் 50மூ ஆல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.இந்த வகையில் நோக்கும் போது இராணுவப் புரட்சிக்கெதிரான போராட்டத்தின் வெற்றி அதன் சாத்வீகத் தன்மையை பாதுகாப்பதிலேயே தங்கியுள்ளது.எனவேதான் இந்த போராட்டங்களில் கலந்து கொள்ள சிறுவர்களும் பெண்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த சாத்வீகப் போராட்டத்தை பலமாகக் கொண்டு செல்வதற்காக அனுபவ ரீதியாக வழிகாட்டுகின்ற இரு ஆய்வுகளை இந்த நூலுடன் சேர்த்து அதற்குப் புறம்பாக ஷெய்க் றாஷித் அவர்கள் தனது முக நூல் பக்கத்திலே பதிவேற்றியிருந்தார்.(சாத்வீகப் போராட்டம்50 வரையறைகள்,சரவதிகாரத்திலிருந்து ஜனநாயகத்தை நோக்கி)
எகிப்தில் இடம் பெறும் இந்தப் போராட்டம் முஸ்லிம் சமூகத்திற்கான சரியான தலைமையை இனம் காட்டியுள்ளது.அது கடந்த 85 வருடங்களாக புடம் போடப்பட்ட சக்தி.அது இன்று முஸ்லிம் உம்மத்தின் தலைமையை சுமக்கிறது.அதன் பின்னால் முஸ்லிம் உம்மத்தின் அனைத்து சக்திகளையும் இந்தப் போராட்டம் ஒன்று திரட்டிக் கொடுத்துள்ளது.இது இன்றைய உலகின் அசத்தியத்தின் தலைமையான ஸியோனிஸத்திற்கும் இஸ்லாத்திற்குமிடையிலான இறுதிப் போராட்டத்திற்கான பாதையை செப்பனிடுகிறது.
இந்தப் போராட்டம் புழைல் இப்னு இயாலோ,ஜுனைதுல் பக்தாதியோ,இமாம் கஸ்ஸாலியோ கண்டு கொள்ளாத ஒரு பெரும் திரளை ஈமானியத் தர்பியத்திற்காக ஒன்று திரட்டிக் கொடுத்துள்ளது.இந்தத் திரள் இலட்சியக் கணவு கண்ட தத்துவவியலாளர்களாலும் பெற்றுக் கொடுக்க முடியாமல் போன ஒரு முன்னுதாரணத்தை உலகிற்கு பெற்றுக் கொடுத்துள்ளது.இத்திரள் 85 வருட ஆழம் கொண்ட அத்திவாரத்தைக் கொண்டது.ஒரு நீண்ட பயிற்றுவித்தலின் விளைவு.இதனுடன் மேற்காக றபாத் முதல் கிழக்காக தெற்குப் பிலிப்பீனின் மராவா நகர் வரையும்,வடக்காக ஸைபீரியாவினருகே உள்ள தத்ரிஸ்தான் முதல் தெற்காக ஆபிரிக்காவின் மொஸாம்பிற்க் வரையும் பரந்துள்ள உலகின் பெரும் பரப்பில் வாழும் பல மில்லியன் கணக்கான உள்ளங்களும் ஒன்றிணைந்துள்ளன.எனவே றாபியாவில் இணைந்த அந்த திரளை களைத்து விடுவதில் எகிப்தின் சர்வதிகாரம் வெற்றி கண்டாலும் அதனை அழிப்பது ஒரு போதும் சாத்தியமற்றது.இந்த வகையில் இந்தப் போராட்டத்தினூடாக இஸ்லாமிய தஃவா சாதித்துக் கொள்ள முடியும் என எதிர் பார்க்கப் படுகின்ற விடயங்களை பதினைந்து அடிப்படைகளில் ஷெய்க் றாஷித் அவர்கள் இந்நூலின் இறுதியில் தொகுத்து குறிப்பிடுகிறார்.
அதே போன்று இந்நூலின் பெரும் பகுதியை பிடித்துள்ள விடயம்தான் இந்தப் புரட்சியின் பின்னணிணில் இயங்கியவர்களை அடையாளப்படுத்தல் என்ற விடயம்.அமெரிக்கா,இஸ்ரேல்,ஈரான்,வலைகுடா நாடுகள்,மதச்சார்பற்ற சக்திகள்,போலி இஸ்லாமிய வாதிகள்,கிப்திய கிறிஸ்த்தவர்கள் என எகிப்தில் இஸ்லாமிய வாதிகளின் ஆட்சியை வீழ்த்த துணை நின்ற அணைத்து சக்திகளும், அவற்றின் ஈனத்தனமான செயற்பாடுகளுடன் இங்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.இங்கு பணத்துக்கு விலை போன,விலை கொடுத்து வாங்கிய அனைவரும் அவர்களது பின்னணிகளுடன் திரை கிழிக்கப்படுகிறார்கள்.அறபு இஸ்லாமிய உலகிலும்,உலகின் ஏனைய பாகங்களிலும் அமெரிக்க,ஸியோனிஸ அரசியல் எப்படி செயற்படுகிறது என்பதற்கான ஒரு பெறும் தெளிவை எகிப்திய இராணுவப் புரட்சி வாயிலாக நாம் அறிந்து கொள்ளும் வாய்ப்பை இந்நூல் பெற்றுத் தருகின்றது.பாகிஸதானின் பிரதமராக இருந்த அலி புட்டோவின் மகள் பெனாஸிர் புட்டோவின் டயரிக் குறிப்பொன்றின் ஊடாக இந்த விடயம் மிகவும் எளிமையாக விளக்கப்படுகிறது.தனது தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து அமெரிக்காவில் வசித்த பெனாஸிரை அமெரிக்க வெளியுறவுத்துறையை சார்ந்த சில அதிகாரிகள் சந்தித்து பகிஸ்தானின் பிரதமராக பெனாஸிர் வருவது தொடர்பிலான அவரது விருப்பத்தை கோரியுள்ளனர்.இதன்போது அரசியல் அனுபவமோ கட்சியோ மக்களாதரவோ இல்லாத தான் எப்படி பிரதமராக வரலாம் என அவர் வினாத் தொடுத்துள்ளார்.அதற்கு அவ்வதிகாரிகள் தங்களது விருப்பம் மாத்திரமே எமக்குத் தேவை மற்றயதை நாம் பார்க்கிறோம் என்றிருக்கின்றனர்.பிறகு அவர் பாகிஸ்தான் போய் இறங்கும் போது அவரது பெயர் சொல்லி கோஷமெழுப்பும் பல்லாயிரக் கணக்கானோர் தன்னை விமான நிலையத்துக்கு வெளியே வரவேற்க காத்திருந்ததாக குறிப்பிடும் அவர்,அன்றுதான் உலக அரசியலை தான் சரியாக விளங்கிக் கொண்டதாக அவரது டயரிக் குறிப்பு குறிப்பிடுகிறது.இதுதான் உலக நாடுகளிலுள்ள ஜனநாயக ஆட்சியின் இரகசியம் என்பதை நாம் அறிய வரும் போது அத்தனை அரசியல் வாதிகள் மீதும் காறி உமிழ வேண்டும் போலிருக்கிறது.
மொத்தத்தில் எகிப்திய இராணுவப் புரட்சியுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு அறிக்கைகளையும் ஆய்வுகளையும் பின்னிணைப்பாகக் கொண்ட இந்நூல் 255 பக்கங்களைக் கொண்டது.இது இன்று எகிப்திலும் இஸ்லாமிய உலகிலும் நடக்கும் நிகழ்வுகளை நம்பிக்கையுடன் நோக்க வழி செய்கிறது.இஸ்லாத்திற்காக உழைப்போராலும் சமூகத்தை தலைமை தாங்கி வழி நடாத்த முற்படுவோராலும் கட்டாயம் படிக்கப்பட வேண்டிய ஒரு நூலாக இது காணப்படுகிறது.எமது நாட்டிலும் எம்மைச் சூழ நடப்பவற்றை புரிந்து கொள்வதற்கான ஒரு பின்னணியை இந்நூல் எமக்குப் பெற்றுத்தருகிறது.ஒரு முஸ்லிம் எங்கு வாழ்ந்த போதிலும் இந்தப் போராட்டத்தை நம்பிக்கையுடன் நோக்குவதும் விளக்குவதும் அதற்காக தன்னால் முடிந்த பங்களிப்பை வழங்குவதும் அவன் மீதுள்ள கடமையாகும்.உண்மையில் இது ஒரு முஸ்லிமின் கடமை மாத்திரமல்ல மனித சமூகத்திற்கு சுபீட்சத்தை விரும்பும் ஒவ் வொருவரதும் கடமை என்பதை இன்றைய நிகழ்வுகள் எமக்கு உறுதிப்படுத்திக் கொண்டுள்ளன.
அந்த வகையில் இந்நூலின் மொழி பெயர்கப்பட்டுள்ள ஆரம்பப்பகுதிகளையும் அடுத்தடுத்த பகுதிகளைம் இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்த நாட்களில் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கிறேன்.
No comments:
Post a Comment