Showing posts with label Haraam. Show all posts
Showing posts with label Haraam. Show all posts

Thursday, March 21, 2013

பொது பல சேனா நாகப் பாம்பை வாலினாலேயே பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தம்பர அமில தேரர் 

பொது பல சேனா இயக்கம் ஹலாலை ஹராம் என்றும், ஹராத்தை ஹலால் காண்பிப்பதற்காக முழு மூச்சுடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது அத்துடன் இன்னும் நல்ல நல்ல விளையாட்டுக்கள் அதிகாலையில் தான் இருக்கின்றன என்று ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்லைக் கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், ஏகாதிபத்திய விரோத மக்கள் அமைப்பின்இணைச்செயலாளருமான தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.

அவர்கள் இப்போது நாகப் பாம்பை வாலினாலேயே பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். நாகப் பாம்பைப் பிடிக்க வேண்டியது தலையினாலேயே என்றும் அவர் குறிப்பிட்டார்.

பல அரசியல் கட்சிகளும், அரசியல் கட்சிகளின் அமைப்பாளர்களும் சிவில் அமைப்புக்களின் ஒருமைப்பாட்டுடன் கொழும்பில் நடைபெற்ற தேசிய ஒற்றுமையை முன்னிட்ட கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே இதனை தெரிவித்தார்.

பொது பலசேனா என்ற அடிப்படைவாத அமைப்பு இன்னும் இரண்டு போயா தினங்களுக்குள் மரணித்துவிடப்போகிறது. எனவே, எந்தவொரு முஸ்லிமும் கலக்கமடையவோ, கவலைப்படவோ தேவையில்லை. ஏனெனில் அது அரைகுறை பெளத்தர்களைக் கொண்ட அமைப்பாகும். பெளத்த தர்மமானது பிரிவினை வாதத்தையோ, மதவாதத்தையோ போதிக்கவில்லை என்று தேசப்பற்றுள்ள தேசிய மத்திய நிலையத்தின் தலைவரும் ஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான பேராசிரியர் தம்பர அமில தேரர் தெரிவித்தார்.

Wednesday, March 20, 2013

E Code அப்படிண்டா என்ன? அது ஏன் உருவாக்கப்பட்டது? எந்த எந்த E Code ஹராம்?

இங்கிலாந்து உட்பட பல ஐரோப்பிய நாடுகளில், இறைச்சி உண்ண என்றால் முதல் இடம் பிடிப்பது பன்றி இறைச்சிதான். இறைச்சிக்காகவே ஏகப்பட்ட பன்றிப்பண்ணைகள் அங்கே உண்டு. உதாரணமாக பிரான்சில் மட்டுமே சுமார் 42,000 பன்றிப்பண்ணைகள் இருக்கின்றன சகோ..! அப்படியெனில், மொத்த ஐரோப்பாவில் எத்தனை பன்றிகள் ஒருநாளைக்கு இறைச்சிக்காக கொல்லப்படும்..?

பன்றி இறைச்சியில்தான் மிக மிக அதிக கொழுப்புகள் உள்ளன என்பதால் அவற்றை நீக்கி விட்டுத்தான் ஐரோப்பியர் இறைச்சி விற்பனை செய்வார்கள். அப்படியெனில், மொத்த ஐரோப்பாவிலும் எத்தனை டன் கொழுப்பு சேரும் ஒரு நாளைக்கு..? எனவே, இப்படி நீக்கப்பட்ட கொழுப்புகளை அப்புறப்படுத்துவது நாளடைவில் மிகக்கடினமான காரியமாக மாறியது. ஆரம்ப காலத்தில் அவற்றை தீயிட்டு எரித்தனர். அப்போது அவை எண்ணெயாக உருகி ஓடியதை கண்டபோது, சூடு ஆறியபின் இருகுவதை கண்டபோது, ஐடியா பிறந்தது. அப்படித்தான் பன்றி இறைச்சி அந்த தோட்டாக்களை பாதுகாக்கும் உறையாகவும், சோப்புக்கட்டிகள் செய்யவும், சோள எண்ணெய்க்கு மாற்றாகவும் இன்னும் பலவாறாகவும் பயன்படுத்தப்பட்டன.

பின்னாளில், ஐரோப்பியர்கள் கடும் கொலஸ்டிரால் மூலம் பாதிக்கப்பட, அது பற்றியெல்லாம் அறிவியல் வளர்ந்து, அதன் காரணமாக மருத்துவ ரீதியில் உடல்நலக்குறைபாடு பிரச்சினை பற்றி அறிய ஆரம்பிக்க, இப்போது ஐரோப்பிய நாடுகள், ஒரு சட்டம் போட்டன. அதாவது, உணவுப்பண்டங்களில் பன்றிக்கொழுப்பை சேர்த்தால் அதனை பாக்கெட்டின் மீது எழுதவேண்டும் என..! அது மட்டுமில்லாது, அந்த விற்பனைக்குறிய பண்டத்தில் வேறு என்னன்ன மூலப்பொருட்கள் எல்லாம் சேர்க்கப்பட்டு உள்ளடங்கி உள்ளன என்பதையெல்லாம் ஒரு பட்டியலாக உறைமீது எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டு போனது அந்த சட்டம். அதன்படி அப்படியே எழுதி உலகெங்கும் ஏற்றுமதி செய்ய ஆரம்பித்த ஐரோப்பிய பன்னாட்டு நிறுவனங்களின் தலையில் அப்போதுதான் அந்த இடி இறங்கியது..!

அதாவது, உலக மக்கள்தொகையில் மூன்றில் ஒருபங்கு கொண்ட முஸ்லிம்கள், அந்த பொருட்களை புறக்கணிக்க ஆரம்பிக்க, அப்படிப்பட்ட பெரிய நஷ்டத்தை அந்த நிறுவனங்கள் தாங்கிக்கொள்ள இயலவில்லை. அதற்காக, மலிவான பன்றிக்கொழுப்பை விட்டுவிட்டு, கிராக்கியான தாவர எண்ணெய் உபயோகித்து லாபத்தை இழக்கவும் மனதில்லை. புறக்கணிக்கும் அந்த எண்ணெய் வள நாடுகளின் வணிகமும் அவசியம் வேண்டும். என்ன செய்யலாம்..?