(முபாஸல் மபாஸ் + முஸம்மில்) Thanks to www.jaffnamuslim.com
Original source -JaffnaMuslim
கண்டியில் 17-03-2013 நடைபெற்ற பொதுபல சேனாவின் கூட்டமுஸ்லிம்களுக்கு எதிரானது என்பது தெளிவான விடயம். இங்கு பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக சிறிது நோக்குவோம்.
ஏதிர்பார்த்தது போன்று ஹலால் சம்பந்தமாக வழமையான அவர்களின் விதண்டாவாதம் ஆரம்பித்தது. அத்துடன் இது 2007 இல் நுகர்வோர் அதிகார சபையினால் அங்கீகாரம் மறுக்கப்பட்டது அதன் பின்னால் மேற்கொள்ளப்பட்ட விடயங்கள் சட்ட விரோதமானது. இலங்கையில் மாத்திரம் தான் பணத்திற்காக இது மேற்கொள்ளப்பட்டது. இது குர்ஆனுக்கு விரோதமானது எனும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
நோலிமிட் , பெஷன் பக் ஏன் கிழக்கு மாகானங்களில் நிறுவப்படவில்லை. அத்துடன் முஸ்லிம்கள் தமது நிறுவனங்களில் சிங்கள பெண்களை இணைத்துக் கொள்வதன் நோக்கம் அவர்களை மதமாற்றம் செய்வது. இதனை கூறிவிட்டு ஏறத்தாழ 10 ஆண் மற்றும் பெண்களின் விபரங்கள் அவர்களின் முகவரி உற்பட வெளியிடப்பட்டது. ஆவர்களின் ஆரம்ப பெயர் தற்போதைய பெயர் அவர்களை மணமுடித்தோர் உள்ளடங்களாக. அத்துடன் அந்நிறுவனங்கள் அப்பெண்களை அந்தபுர தேவைகளுக்காக பயன்படுத்துகின்றனர் எனும் குற்றச்சாட்டு. இது பொய் எனின் நிறுவன முகாமையாளர்களை வந்து நிருபிக்க அழைப்பு.
கெப்பட்டி பொல இனை கோள் சொல்லி காட்டி கொடுத்தது முஸ்லிம். ஆந்த பரம்பரையில் வந்த சில அரசியல்வாதிகள் இன்று வெளிநாடுகளுக்கு சென்று நாட்டை பற்றி தப்பான கருத்துக்களை கோள் சொல்கின்றனர். ஆத்துடன் இவர்களை சுட்டி காட்டும் போது அவர்களால் பரயோ, சூனகயோ போன்ற வாசகங்கள் பயன்படுத்தப்பட்டது.
இனிவரும் காலங்களில் முஸ்லிம் நிறுவனங்களுக்கு ஆண்களை மாத்திரம் அனுப்புவோம், வெள்ளிக்கிழமைகளில் உங்களுக்கு 2 மணி நேரம் கடை மூட வேண்டும் எனின் போயா தினங்களில் எம்மவர்களை பன்சல செல்ல அனுமதிக்க வேண்டும்.
பன்சல முன் நாம் நிசப்தமாக செல்லுங்கள் என பலகைகள் தொங்க விட்டுள்ளோமா??? ஆனால் பள்ளிவாயில்கள் முன்னால் இவ்வாறான அறிவுறுத்தல்கள் தொங்க விடப்பட்டுள்ளன. எங்களுக்கு இல்லாத நீதி அவர்களுக்கு ஏன்?
முஸ்லிம்களுக்கு கட்டிடஙகளை குத்தகைக்கு கொடுக்க வேண்டாம். ஆவர்கள் மிருகங்களை பலியிட்டு பூதங்களின் உதவியுடன் அவ்விடத்தை கைபற்றி விடுவர். அவர்கள் அவ்விடத்தை வாங்க முன் நீங்களாக அவர்களிடம் போய் விற்க வேண்டிய நிலை ஏற்படும்.
முஸ்லிம்கள் தம்மை மூடிக்கொண்டு செல்வதை அனுமதிக்க முடியாது. அது பல குற்ற செயல்களுக்கு காரணமாக அமைகிறது. அதை அணிந்து கொண்டு என்னால் கூட அவர்களின் பெண்கள் தொழும் பகுதிக்கு செல்ல முடியும். ஆவ்வாறு சென்று நான் என்ன செய்வேன்??? நான் அதை இங்கு சொல்ல விரும்பவில்லை.
அடலுகம அது சிங்கள கிராமம். தற்போது முற்றாக முஸ்லிம் கிராமமாக மாறி விட்டது.
சிங்கள புது வருடத்தை உண்மையில் யார் கொண்டாடுவது என தெரியுமா?. தொப்பி அணிந்த முதலாளிமார். முஸ்லிம் கடைகளில் உணவு அருந்துகிறீர்கள். அங்கு அவர்கள் பின்பற்றும் நடை முறை உங்களுக்கு தெரியுமா? அந்நிய மதத்தினருக்கு உணவு வழங்கும் போது அதில் 3 முறை துப்பிவிட்டு தருகின்றனர். அல்லாஹ்வை தொழாத முஸ்லிம் அல்லாதவர்களுக்கு உண்ண கொடுக்கும் போது இப்படி செய்யும்படி குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. அதோ முன்னால் தெரியும் முஸ்லிம் கடையில் நானும் உணவு அருந்தியுள்ளேன். இனி அங்கு செல்ல மாட்டேன்.
பௌத்த பிக்குகளே முஸ்லிம் மேடை நிகழ்சிகளில் நீங்கள் தம்பியாக்களோடு சமமாக உட்கார உங்களுக்கு வெட்கம் இல்லையா ?
இன்று முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி பார்த்தா அணிந்து பாதைகளில் செல்கின்றார்கள். நானும்முகத்தை மூடி ஒரு பார்தா அணிந்து முஸ்லிம் பள்ளி யொன்றிட்குள்குள் நுழைந்து, லேடீஸ் பிரேயர் ரூமில் நுழைந்து............ மற்றதை நான் சொல்லமாட்டேன் நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். அப்படி செய்தால் இவர்களால் கண்டுபிடிக்க முடியுமா ?
ஜம்மியத்துல் உலமா தலைவன் ரிஸ்வி முப்தி கடந்த வெள்ளிகிழமை கஹடபிடிய பள்ளியில் முஸ்லிம்களுக்கு சொன்ன செய்தி என்ன தெரியுமா ”நான் என்னுடைய வேலையை இப்போது செய்து முடித்துவிட்டேன், அதாவது பிக்குகளுக்கு மத்தியில் பிரிவினையை உருவாக்கி விட்டேன். இனியவர்கள் பிரிந்து சண்டையிட்டு கொள்வார்கள் “ என்று முஸ்ளிம்களின் கோல் மூடும் பரம்பரை புத்தியை காட்டியுள்ளார் .(இதை சொல்லிவிட்டு ஒரு இணைய முகவரியையும் வாசித்து காட்டி அதில் இந்த விடயத்தை அறிந்து கொள்ள சொன்னார்)
இந்த நாட்டில் ஒரு சட்டம் தான் அமுலில் இருக்க வேண்டும் . முஸ்லிம்களுக்கு நான்கு திருமணம் முடிக்கமுடியும் .ஏனையவர்கள் முடித்தால் அது குற்றம். ஆகவே இந்த சட்டங்கள் ரத்து செய்யப்படவேண்டும்.
கேப்பெடி பொல அரசனை காட்டிகொடுத்தது ஒரு முஸ்லிம் தெரு வியாபாரியாகும் அதே பழக்கத்தையே முஸ்லிம்கள் இன்றும் செய்கின்றார்கள்
எங்களுடைய பாதுகாப்பு செயலாளர் இருக்கும் வரை நாங்கள் எதற்கும் அஞ்ச தேவை இல்லை. எங்கள் ஜனாதிபதி எங்களின் இனதின் நன்மைக்காக வந்துதித்தவர். அவர் நல்லவர் ஆனால் அவரின் அமைச்சரவையில் சில நாய்கள் உள்ளன அந்த நாய்களை கட்டிவைக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கிறோம்.
நாங்கள் இங்கே வந்தால் எங்களின் எலும்புகளை முறிப்பதாக சில சண்டியர்கள் சொன்னார்கள் .அந்த சண்டியர்கள் எங்கே ??? எதிர் கட்சியிலும் சில நாய்கள் உள்ளனர் என்று நான் எதிர் கட்சி தலைவரிடம் சொல்லி வைக்க விரும்புகிறேன் .
நிச்சயமாக அசாத் சாளிக்கும் எங்களுக்கும் கொடுக்கல் வாங்கல் ஒன்று உள்ளது .
இதை இந்நாட்டு முஸ்லிம்களின் அவசர கவனத்துக்கு கொண்டுவர வேண்டியதால் தமிழில் தொகுத்து வழங்க
No comments:
Post a Comment