குறிப்பாக, எதிரணியினர் தஹ்ரீர் சதுக்கத்தில் நிலைகொண்டிருந்தபோது, அதன் மேல் ஹெலிகொப்டர்களில் வலம் வந்த இராணுவம் சதிப் புரட்சிக்கு வெள்ளைக் கொடி காட்டியது.
திடீரென அவர்கள் விதித்த காலக்கெடு, ஜனாதிபதி முர்ஸி கைதுசெய்யப்பட்டமை, ஊடகங்கள் அனைத்தும் தடைசெய்யப்பட்டமை, முர்ஸியின் அரசாங்கத்திற்கு ஆதரவாகப் படை திரண்ட பல மில்லியன் மக்களின் அமைதிப் பேரணி மீது இராணுவம் மேற்கொண்ட அடக்குமுறை நடவடிக்கை என இது இராணுவ சதிப் புரட்சிதான் என்பதைத் தெளிவாகக் காட்டும் பல விடயங்கள் நடந்தேறியுள்ளன. இன்னும் நடக்கின்றன.
இந்த இராணுவ சதிப் புரட்சிக்குப் பின்னணியிலுள்ள சக்திகள் யார்?
இந்த இராணுவ சதிப் புரட்சியின் தொடக்கமாக மக்களைத் தவறாக வழிநடத்தி, தஹ்ரீர் சதுக்கத்தில் இறக்கிய சில அடிவருடிகளும் புல்லுருவிகளும் உள்ளனர். தேர்தலில் தோற்றுப் போன ஷபீக், எகிப்தின் பிரஜா உரிமையை இல்லாத அல்பராதி, முன்னாள் முபாரக்கின் அம்ரு மூஸா போன்றவர்கள் கடந்த ஒரு வருட காலமாக இந்த இளைஞர்களை வீதிக்கு இறக்கும் சூழ்ச்சியை திரைமறை விலிருந்து மேற்கொண்டு வந்தனர்.
இவர்களின் இந்த நாசகார சதிக்கு அமெரிக்க அரசாங்கமும், சியோனிஸ இஸ்ரேலும் நிதியுதவியும் சூழ்ச்சி ஆலோசனையும் வழங்கி வந்தன. ஏற்கனவே அமெரிக்காவினதும் சியோனிஸத்தினதும் கைகளில் தொங்கும் எகிப்திய இராணுவம் காட்சியின் இறுதியில் தோன்றி, தமது சதித்திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
இந்த இராணுவ சதிப் புரட்சிக்குப் பின்னணியில் உள்ள இன்னொரு சக்தி, எகிப்தில் சிறுபான்மையாக வாழும் கிப்திய கிறிஸ்தவர்கள். அவர்கள் இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்தே அதை வீழ்த்துவதற்கு கங்கணம் கட்டி வந்தனர்.
முர்ஸியின் ஆட்சிக்கு எதிராக மில்லியன் கணக்கானோர் திரண்டதாக ஊடகங்கள் தெரிவிக்கும் செய்தி எத்தகையது?
உண்மையில், தஹ்ரீர் சதுக்கத்தில் ஒன்றுகூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களில் காற் பங்கினரே கடந்த ஒரு வருட அரசாங்கத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளில் அதிருப்தியடைந்தவர்கள். குறிப்பாக வேலையில்லாப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள்.
அடுத்த அரைப் பங்கினர் எகிப்தில் இஸ்லாமிய ஆட்சியை தடுத்து வரும் கிப்திய கிறிஸ்தவ சிறுபான்மையினர். எஞ்சிய காற் பங்கினர் - ஏற்கனவே நாம் குறிப்பிட்ட ஷபீக், அமர் மூஸா, பராதி ஆகிய மும்மூர்த்திகளின் டொலர்களுக்கு மயங்கியவர்கள். அவர்களுக்கு எந்த அரசியல் குறிக்கோளும் இல்லை. தற்காலிக ஜுனை ஹுகளுக்காக (எகிப்தின் நாணயம்) பலியாகியவர்கள். இந்த உண்மையை அநேக நடுநிலையான அறபு ஊடகங்கள் வெளிப் படுத்தியுள்ளன.
எகிப்தில் இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக சதித் திட்டம் நிறைவேற்றப்பட்டது ஏன்?
எகிப்து முழு அறபு இஸ்லாமிய உலகிலும் முக்கியமான நாடு. அதன் மக்கள் தொகை 7 கோடி. நீண்ட நாகரிக வரலாற்றுப் பெருமை கொண்ட நாடு. சுதந்திரத்திற்குப் பின்னர் மாறி மாறி மதச்சார்பற்றவர்களும் இராணுவ சர்வதிகாரிகளுமே அங்கு ஆட்சியில் நீடித்தனர். நஜீப், புவாத், பாரூக், அப்துல் நாஸர், ஸாதாத், முபாரக் என அவர்களது முகங்கள் வேறுபட்டிருப்பினும் அனைவரும் போல் அமெரிக்காவின் அடிவருடிகளாகவும் இஸ்ரேலின் காப்பாளர்களாகவுமே இருந்து வந்தனர்.
இன்னொரு புறம் எகிப்தின் பூகோள அரசியல் மற்றும் பொருளாதார கேந்திர முக்கியத்துவத்தை உணர்ந்த மேலை நாடுகள் - குறிப்பாக அமெரிக்கா, இந்த வகை அதிகாரக் கும்பலின் இருப்பையே ஊக்குவித்து வருகின்றன. அதற்குப் பல காரணங்கள் உள்ளன.
எகிப்தில் ஷரீஆ அடிப்படையிலான ஆட்சி மலரும் பட்சத்தில் அது இஸ்லாமிய உலகில் பாரிய மாற்ற அலைகளை உருவாக்கும். நீண்ட காலத்தில் வழளங்கள் ஒன்றுதிரட்டப்பட்ட, ஐக்கிய அறபு இஸ்லாமிய உலகமொன்றின் தோற்றத்திற்கு இந்த மாற்ற அலைகள் வழிவகுக்கும். இவ் வளர்ச்சி மறுபுறத்தில் பிராந்தியத்தில் தாம் அடைந்து வரும் பொருளாதார நலன்களை இழக்க துணை செய்யும். எனவே இஸ்லாமிய அடிப்படையிலான ஆட்சி மாற்றம் எகிப்தில் ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் மேலைய சக்திகள் மிகவும் விழிப்பாக உள்ளன.
இஸ்ரேலைப் பாதுகாக்க வேண்டுமாயினும், இஸ்லாமியவாதிகள் அங்கு ஆட்சியில் அமர்ந்து விடக் கூடாது எனவும் இச் சக்திகள் எண்ணுகின்றன. இந்தப் பின்னணியிலேயே முர்ஸியின் ஜனநாயக ஆட்சி பீடத்தை அமெரிக்காவின் கட்டுப்பாட்டிலுள்ள எகிப்தின் இராணுவம் துப்பாக்கி முனையில் கவிழ்க்க முனைந்துள்ளது. ஒபாமாவும் அவரது சகபாடிகளும் இதற்குப் பின்புலமாக உள்ளமை மிகவும் தெளிவானது.
அமெரிக்கா பேசி வரும் ஜனநாயகத்தின் அடிப்படையில்தானே முர்ஸி ஆட்சிக்கு வந்தார். அப்படியாயின், இராணுவப் புரட்சியை ஆதரிப்பதேன்?
அமெரிக்கா ஜனநாயகத்தில் எப்போதும் இரட்டை விளையாட்டையே காட்டி வருகின்றது. எகிப்தில் மட்டுமல்ல, அறபு வசந்தத்திற்குப் பின்னர் தூனிஸியா, லிபியா, யெமன் ஆகிய பல்வேறு அறபு இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமியவாதிகளின் ஜனநாயக செயற்பாடுகளுக்கு முதல் முட்டுக்கட்டையாக இருப்பது அமெரிக்காவே. இதனை அமெரிக்க ஆய்வாளர்களே நிரூபித்துள்ளனர்.
உண்மையில் முர்சி சுதந்திர ஜனநாயகத் தேர்தல் ஒன்றின் மூலமே ஜனாதிபதியானார். எகிப்தின் வரலாற்றில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஜனாதிபதியும் அவரே. அவர் கொண்டு வந்த அரசியலமைப்புச் சட்டமும் ஜனநாயக பூர்வமானதே. நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாக்களிப் பின் மூலமே இச்சட்டம் நிறை வேற்றப்பட்டது. ஆனால், இவை எல்லாவற்றையும் ஒரு நொடியில் தூக்கி வீசிவிட்டு, இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளமை அமெரிக்காவின் ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கியுள்ளது.
No comments:
Post a Comment