Thursday, September 12, 2013

கிலாஃபத்தும் இந்திய துணைக்கண்டமும் - பகுதி 3

விலாயா அம்மாவுக்கான (General Governorship) இஸ்லாமிய அனுமதி.

குலஃபாக்களால் இந்திய உபகண்டத்துக்கு விலாயா அம்மா வழங்கப்பட்டிருந்தது. இது ஷரியாவால் ஏற்றுக்கொள்ளபட்ட ஒரு நடைமுறையாகும். குலஃபாக்கள் விலாயாக்களை (மாகாணங்களை) பற்றி விசாரிக்கும் பொறுப்பில் கவனயீனமாய் இருந்தது உண்மையென்பதுடன் கவர்ணர்களை நேரடியாக தெரிவு செய்யாமல் பிராந்தியங்களில் தாமாக ஆட்சிக்கு வந்தவர்களை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். இந்த கவர்ணர்களை கலீஃபா ஏற்றுக்கொண்டதால் இவர்களுக்கு சட்டபூர்வ அதிகாரம் கலீஃபாவால் வழங்கப்பட்டது.

கிலாஃபத்தின் வீழ்ச்சிக்கு பின்னர் தலைசிறந்த உலமாக்களால் எழுதப்பட்ட (“The Ruling System of Islam”) “இஸ்லாமிய ஆட்சி முறை” என்ற புத்தகத்தில் இரு வகையான விலாயாக்களும் அவற்றுக்கான இஸ்லாமிய
ஆதாரங்களும் விவரிக்கப்பட்டிருந்தன. இந்த நூலின் கீழ்வரும் பகுதிகள் இதனை வலியுறுத்தி நிற்கின்றன.“கவர்ணர் கலீஃபாவின் உதவியாளர்: கலீஃபா வழங்கிய அதிகாரத்தின்படியே அவர் செயற்படுவார். விலாயாக்களுக்கு வரையறைகள் இல்லை. ஆகவே ஆட்சி சம்பந்தமாக கலீஃபாவால் நியமிக்கப்பட்ட எவரும் கவர்ணராகலாம். கவர்ணர் எந்த பகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ளார் என்பதை வரையறுக்குமாறு நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

விலாயாக்கள் இருவகைப்படும். ஓன்று பொதுவானது (Genaral), மற்றையது சிறப்பானது (Specific). பொது விலாயாவில் விலாயாவிற்குட்பட்ட ஆட்சி தொடர்பான அனைத்தும் உள்ளடகப்பட்டிருக்கும். விலாயாவிக்கு ஒருவர் நியமிக்கப்படுகிறார் என்றார் அந்த நாட்டின் அல்லது மாகாணத்தின் இமாரா அவருக்கு வழங்கப்படுவதாகக் கொள்ளாமல் இங்கு மக்களின் சாதாரண செயற்பாடுகள் மேற்பார்வை செய்யப்படும். இங்கு மேற்பார்வை செய்வதற்கான பொதுவான பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டிருக்கும். சிறப்பான இமாராவைப் பொருத்தவரை கவர்ணர் இராணுவத்தை நிர்வகித்தல், மக்களை நிர்வகித்தல், எல்லைகளைப் பாதுகாத்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு போன்ற விடயங்களிலேயே அதிகாரம் வழங்கப்பட்டு ஏனையவை கலிஃபாவால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். அவருக்கு நீதித்துறை தொடர்பிலோ, கரஜ் (நிலவரி) மற்றும் சதகா வசூலிப்பு போன்ற அதிகாரங்கள் இருக்காது.

ரஸ{ல் (ஸல்) அவர்கள் பொதுவான வாலியை நியதித்ததற்கு சான்றாக அமர் பின் ஹஸ்மை (ரழி) யெமனுக்கு நியமித்தமையை கொள்ளலாம். அதே போன்று அலி பின் அபுதாலிபை (ரழி) யெமனின் நீதித்துறைக்கு விசேடமாக நியமித்தமையை விசேட (விலாயா காஸ்ஸா) உதாரணமாகக்கொள்ளலாம்.
குலஃபாக்களும் இது தொடர்பில் ரஸ{ல்(ஸல்) அவர்களைப் பின்பற்றியிருந்தனர். உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் முஆவியா பின் அபு சுபியானை(ரழி) ஷாமிற்கு பொதுவான வாலியாக நியமித்திருந்ததுடன், அலி (ரழி) அவர்கள் அப்துல்லாஹ் பின் அப்பாஸை(ரழி) பஸராவுக்கான சிறப்பு வாலியாக நியமித்திருந்தார். இங்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ{க்கு(ரழி) நிதித்துறை தவிர்ந்த மற்றைய விடயங்களில் அதிகாரம் வழங்கப்பட்டிருந்ததுடன் நிதித்துறைப் பொறுப்பு சியாதிற்கு வழங்கப்பட்டிருந்தது.

இரண்டு வகையான விலாயாக்கள் முன்பு காணப்பட்டன. ஓன்று சலாஹ்வுக்கான விலாயா மற்றையது கரஜுக்கான விலாயா. இதனாலேயே வரலாற்று நூல்களில் விலாயாக்களுக்கு இரு வேறுபட்ட பெயர்கள் உபயோகிக்கப்பட்டன: ஒன்று சலாஹ்வுக்கான இமாரா, மற்றையது சலாஹ்வுக்கும் கரஜுக்குமான விலாயா. இங்கு சலாஹ் என்ற பதம் மக்களை தொழுவிப்பது என்பதை மட்டும் குறிக்காது மாறாக நிதித்துறை தவிர்ந்த சகல விடயங்கள் தொடர்பான ஆட்சியையும் குறிக்கும். சலாஹ் மற்றும் ஹராஜ் ஆகிய இரண்டு விலாயக்களும் ஒருவருக்கு வழங்கப்பட்டால் அது பொது விலாயா(விலாயா அம்மாவாக) கருதப்படும். ஒரு விலாயா சலாஹ் அல்லது கரஜுக்கு மட்டும் வரையறுக்கப்பட்டு இருந்தால் அது சிறப்பான விலாயாவாகக்கருதப்படும். விலாயாக்களை பொது விலாயா என்றோ சிறப்பு விலாயா என்றோ நீதித்துறை விலாயா என்றோ இராணுவத்திற்கான விலாயா என்றோ வரையறுப்பதற்கான அதிகாரம் கலீஃபாவுக்கு உண்டு. வாலிக்கான கடமைகளை ஷரீஆ வரையறுக்கவில்லை. இதனால் வாலிக்குரிய எல்லாக்கடமைகளையும் செய்ய வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. எனினும் பொதுவாக வாலியினுடைய கடமையை ஆட்சி புரிவது எனலாம். மேலும் அவர் கலீஃபாவின் உதவியாளராக இருப்பதுடன் குறிப்பிட்ட பகுதிக்கு அமீராகவும் இருப்பார். இவை அனைத்தும் ரஸ{ல்(ஸல்) அவர்களின் செயற்பாடுகளில் இருந்து பெறப்பட்ட முடிவுகளாகும். வாலியை பொதுவான வாலியாகவோ சிறப்பான வாலியாகவோ நியமிக்க ஷரீஆவில் இடமுண்டு.
ரஸ{ல்(ஸல்) அவர்கள் ஃபர்வா பின் மூசாயிக்கை(ரழி) முராத், சுபைர் மற்றும் மிஸ்ஹாக் கோத்திரங்களுக்கு நியமித்தமையும் அவருடன் காலித் பின் சயீத் பின் அல் ஆஸை(ரழி) சதகாவுக்கான வாலியாக அனுப்பியமையும் இப்னு ஹிஷாமின் சீராவில் காணலாம். ரஸ{ல்(ஸல்) அவர்கள் சியாத் பின் லபீத் அல் அன்சாரியை(ரழி) சதகாவுக்கான வாலியாக ஹத்ரமவ்த்துக்கு அனுப்பியமையும் அலி (ரழி) நஜ்ராவுக்கு சதகாவையும் ஜிஸ்யாவையும் வசூலிக்க அனுப்பியமையும் அவரையே யெமனுக்கு நீதிபதியாக அனுப்பியமையும் அல் ஹாக்கிமில் பார்க்கலாம்.

“ரஸ{ல்(ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபலை(ரழி) அல் ஜனதின் மக்களிற்கு குர்ஆனையும் இஸ்லாமிய சட்டதிட்டங்களையும் கற்பிப்பதற்கும் அவர்களுக்கிடையே தீர்ப்பு வழங்குவதற்கும் அனுப்பிவைத்தார்கள்” என்ற விடயம் இஸ்திஆப் என்ற புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. யெமனின் ஆமில்களிடமிருந்து சதகா வசூலிப்பதற்கான அதிகாரமும் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது. ரஸ{ல்(ஸல்) அவர்கள் உஹதுக்கு படையெடுத்தபோது போது இப்னு உம் மக்தூமை(ரழி) மதீனாவின் சலாவிற்காக நியமித்தமையை இப்னு ஹிஷாமின் சீராவில் காணலாம்.

No comments:

Post a Comment