ஆசிரியர் மாணவர்களுக்கு பிரச்சினையை எப்படி முகம் கொடுப்பது என்பது பற்றி அறிவுறுத்திக் கொண்டிருந்தார். மேசை மீதிருந்த கிளாசை தூக்கிப் பிடித்தவாறு, மாணவர்களிடம் கேட்டார்...
ஆசிரியர் : இது எவ்வளவு பாரமிருக்கும்?
மாணவர்கள்: 50 கிராம் 100 கிராம் இருக்கும்.
ஆசிரியர் : இதை உங்கள் யாருக்காவது தூக்க முடியுமா?
மாணவர்கள்: இத தூக்குவது எல்லாம் பெரிய விசயமா?
ஆசிரியர் : இதை நான் அப்டியே கையில பிடிச்சிருந்த என்ன ஆகும்?
மாணவர்கள்: ஒண்ணுமே ஆகாது.
ஆசிரியர் : ஆம், ஆனால் ஒரு மணி நேரம் அப்டியே பிடிச்சிருந்தால் ?
மாணவர்கள்: உங்க கை வலிக்கும்.
ஆசிரியர் : ஒரு நாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தா?
மாணவர்கள்: உங்கள் கை அப்படியே மரத்திடும்.
ஆசிரியர் : சரி, வலிதாங்க முடியாம அப்படியே மரத்துப் போறதுக்கு இதன் பாரம் கூடிட்டே போகுமா?
மாணவர்கள்: இல்ல சார்..., அது வந்து....
