Thursday, January 16, 2014

பிரச்சினையை எப்படி முகம் கொடுப்பது

ஆசிரியர் மாணவர்களுக்கு பிரச்சினையை எப்படி முகம் கொடுப்பது என்பது பற்றி அறிவுறுத்திக் கொண்டிருந்தார்.  மேசை மீதிருந்த கிளாசை தூக்கிப் பிடித்தவாறு, மாணவர்களிடம் கேட்டார்...

ஆசிரியர் : இது எவ்வளவு பாரமிருக்கும்?
மாணவர்கள்: 50 கிராம் 100 கிராம் இருக்கும்.

ஆசிரியர் : இதை உங்கள் யாருக்காவது தூக்க முடியுமா?
மாணவர்கள்: இத தூக்குவது எல்லாம் பெரிய விசயமா?

ஆசிரியர் : இதை நான் அப்டியே கையில பிடிச்சிருந்த என்ன ஆகும்?
மாணவர்கள்: ஒண்ணுமே ஆகாது.

ஆசிரியர் : ஆம், ஆனால் ஒரு மணி நேரம் அப்டியே பிடிச்சிருந்தால் ?
மாணவர்கள்: உங்க கை வலிக்கும்.

ஆசிரியர் : ஒரு நாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தா?
மாணவர்கள்: உங்கள் கை அப்படியே மரத்திடும். 

ஆசிரியர் : சரி, வலிதாங்க முடியாம அப்படியே மரத்துப் போறதுக்கு இதன் பாரம் கூடிட்டே போகுமா?
மாணவர்கள்: இல்ல சார்..., அது வந்து....

ஆசிரியர் : சரி இப்ப சொல்லுங்க, கை வலிக்காம மரத்திடாம இருக்க என்ன பண்ணனும்?
மாணவர்கள்: உங்க கையில உள்ள கிளாசை அப்படியே கீழ வெச்சிடணும்.

ஆசிரியர் : நிச்சயமாக அதுதான் தீர்வு. இந்த கிளாஸ் தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததென்றால் அதை அப்படியே மண்டைக்குள் போட்டு மணிக்கணக்கா வைத்திருந்தால் வலிக்க ஆரம்பிக்கும். மற்ற விடையங்களையும் செய்ய முடியாமலும் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காமலும் வேதனைகள் மட்டுமே இருக்கும்.
அதனால் உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் தூக்கி ஒரு ஓரமாக வைத்துட்டு, பிரச்சினைக்கு வெளியே நின்னு அதற்கான தீர்வை தேடிப் பாருங்கள். பிரச்சினைக்கான தீர்வு உடனே கிடைத்துவிடும்.


-படித்ததில் பிடித்தது.

No comments:

Post a Comment