Monday, January 6, 2014

இஸ்லாமிய கிலாபத்தின் வீழ்ச்சியும் இஸ்லாமிய இயக்கங்களின் தோற்றமும்

  • இஸ்லாமிய கிலாபத் ஏன் அவசியம்?
  • உலகத்திலிருந்து சுவனத்தை தேடப் போகிறீர்களா?
  • உலகத்தை சுவனமாக்கி மறுமையில் சுவனத்தை அடைய போகிறீர்களா?
  • உள்ளம் அமைதிப்பட வேண்டுமா?
  • மனிதம் பாதுகாப்பான வாழ்வை உலகில் பெற வேண்டுமா?
இஸ்லாமிய உம்மத்தின் பலம்
  • ஈமான்
  • சகோதரத்துவம்

சமகால இஸ்லாமிய பணி
  • தனிமனித முயற்சிகள்
  • கூட்டு முயற்சிகள்
'கூட்டமைப்பு இன்றி இஸ்லாம் இல்லை தலைமைத்துவம் இன்றி கூட்டமைப்பு இல்லை கட்டுப்பாடு இன்றி தலைமைத்துவம் இல்லை. (உமர் (ரழி)

நபியவர்கள் உருவாக்கிவிட்டுச்சென்ற இஸ்லாமிய கிலாபத் 1924ம் ஆண்டு வரை இந்த உலகில் நீடித்தது. அது இடைக்கிடை பல்வேறுவிதமான சவால்களை எதிர்கொண்டாலும் சுமார் இவ்வுலகில் 13 நூற்றாண்டுகள் முஸ்லிம் உம்மத்துக்கு தலைமைத்துவத்தை வழங்கிவந்தது.
ரோம பாரசீக சாம்ராஜ்யங்கள் இஸ்லாத்துக்கு முன்னால் தோல்வியை தழுவியதன் பின்னர் அவை அன்று முதல் இஸ்லாத்தை எதிர்க்க ஆரம்பித்தனர்
அதற்கு காரனம்
  1. ஆரசியல் ரீதியான தலைமைத்தை இழந்தமை
  2. தமது பொருளாதார மையங்களை முஸ்லிம்களிடம் பறிகொடுத்தமை
  3. தமக்கு கீழால் வாழந்ந அதிகமானோர் இஸ்லாத்தை தழுவியமை
இத்தகைய காரணங்களுக்காக மேற்குலகம் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தையும், உம்மத்தையும் வரலாறு நெடுகிலும் எதிர்த்து வந்தாலும் அவர்களை வெற்றிகொள்ள முடியவில்லை.
  • சிலுவை யுத்தங்கள்
  • தாத்தாரிய படையெடுப்புக்கள்
இத்தகைய இவர்களது முயற்சி இஸ்லாமிய உலகின் தலைமைத்துவத்தை ஏற்றிருந்ந உஸ்மானியர்களது காலத்தில் அவர்கள் வீழ்ச்சியடையத் தொடங்கியது முதல் வெற்றிபெற ஆரம்பித்தது.

உஸ்மானியர்கள் பலவீனப்பட்டு வீழ்ச்சியடை ஆரம்பித்த போது மேற்குலகம் தன்னை பலப்படுத்திக் கொண்டு இஸ்லாமிய கிலாபத்தை வீழ்த்த திட்டமிட்டு செயற்பட்டது.

மேற்குலகம் தனது அரசியல், பொருளாதார, மத நலன்களை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கத்துடனேயே இஸ்லாமிய கிலாபத்தை வீழ்த்தி துணிந்தது. 
இஸ்லாமிய சாம்ராஜயத்தின் தலைமையகமாக காணப்பட்ட துருக்கியைப் பலவீனப்படுத்தி அதன் கீழால் இருந்து அறபு நாடுகளை கைப்பற்றி காலனிததுவப்படுத்துவதில் மேற்குலக நாடுகள் ஒற்றுமைப்பட்டன.

அன்றைய காலப்பகுதியில் உஸ்மானிய சாம்ராஜயத்தின் கீழ் அறபு நாடுகளும் அதன் தலைமைத்துவத்தை ஏற்று கட்டுப்பட்டிருந்தது. சமய சிந்தனையின் அடிப்படையில் இன நிற மொழி பிரதேச வேறுபாடுகளை களைந்து ஓற்றுமைப்பட்டடிருந்தது.

இதனைப பயன்படுத்தி உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் தலைமையகமான துருக்கியிலும், அதன் கீழால் உள்ள அறபு நாடுகளிலும் திட்டமிட்டு தேசியவாத சிந்தனையை மக்கள் மத்தியில் பரப்பினர்.
விளைவாக காலப்போக்கில் தேசியவாத சிந்தனை முற்றி பிரிவனை சிந்தனை இஸ்லாமிய உலகில் தோன்ற ஆரம்பித்தது.

இவ்வாறு உஸ்மானிய சாம்ராஜயத்தின் கீழ் இருந்த நாடுகளை அதன் தலைமைத்துவத்தை விட்டும் தூரப்படுத்தும் முயற்சியில் மேற்குலக நாடுகளும் அதன் அடிவருடிகளும் வெற்றி கண்டனர். அதே நேரம் மறுபுறம் உஸ்மானிய சாம்ராஜத்தின் வீழ்ச்சிக்கு இன்னும் பல காரணங்கள் துணையாகின.
  • கொள்கை அடிப்படயிலான நேசம் குறைந்தமை
  • இபாதத் என்பது வணக்க வழ்பாடுகளோடு சுருக்கப்பட்டமை
  • ஷிர்க், பித்அத் பரவியமை
  • ஆண்மீகத் தலைமைத்துவம் இல்லாது போனமை
  • இஜ்திஹாதின் வாயில் மூடப்பட்டமை
  • ஆடம்பரம் தலைதூக்கியமை
  • கருத்துவேறுபாடுகளும், பிளவுகளும்
  • அநியாயம் பரவியமை 
 இவ்வாறு பல்வேறுபட்ட காரணிகளால் உஸ்மானிய சராம்ராஜயம் வீழ்ச்சியடைந்து உலகலாவிய இஸ்லாமிய தலைமைத்துவத்தை முஸ்லிம்கள் 1924ம் ஆண்டு முதன்முதலாக இழக்க வேண்டியேற்பட்டது.

அதனை தொடர்ந்து மீண்டும் இஸ்லாமிய கிலாபத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடனேயே உலகின் பல இடங்களிலும் இஸ்லாமிய இயக்கங்கள் தோற்றுவிக்கப்பட்டன. 
  1. 1928ம் ஆண்ட இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்கள் எகிப்தில் இஹ்வானுல் முஸ்லிமீன் என்ற பேரியக்கத்தை தோற்றுவித்தார்கள்
  2. பாகிஸ்தானில் 20ம் நூற்றாண்டின் முஜ்தஹித் என் அழைக்கப்படும் மௌலானா மௌதூதி (ரஹ்) அவர்கள் ஜமாஅதே இஸ்லாமி என்ற பேரியக்கததை தோற்றுவித்தார்கள்
அத்தகைய இயக்கங்கள் இஸ்லாத்தின் தூய செய்தியை மீண்டும் உலகுக்கு எடுத்துசொல்ல ஆரம்பித்தன. 

அவை பல நாடுகளிலும் இன்று கிளைவிட்டு அந்நதந்த நாடுகளின் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு திட்டங்கள் வகுக்கப்பட்டு அங்கு இஸ்லாமிய இலட்சியபணி மேற்கொள்ளப்படுகிறது.

அதனால் இஸ்லாமிய எழுச்சி மீண்டும் உலகில் ஏற்பட ஆரம்பித்தது. ஆந்த எழுச்சியை தடுக்கும் பாரிய முயற்சிகளாகவே இன்று முஸ்லிம் நாடகளுக்கு எதிரான போரட்டங்கள் அமைந்தள்ளன.

இமாம் ஸூயூதியின் முஜத்தித் பற்றிய பரந்த கருத்து
இஸ்லாத்தின் பரந்த முழுமையான பர்வையின் அடிப்படையில் முஜதஹித் என்பவர் மார்க்கத் துறையில் கற்ற அறிஞராக மாத்திரமாக இருக்க வேண்டும் என்பதல்ல நம்பிக்கைமிகுந்த வியாபாரி, நீதியான ஆட்சியாளர், திறமை மிக்க போராட்ட வீரர் என எவரும் முஜத்தித் ஆகலாம்.

சமகால இஸ்லாமிய உலகம் வேண்டி நிற்பது
1. புத்திஜீவிகள்
2. துறைசார் நிபுனர்கள்
3. மீடியா 
  • இஸ்லாமிய சிந்தனையை பரப்புதல் 
  • இஸ்லாம் பற்றிய பிழையான கருத்துக்களை களைதல்
  • பிற சமூகங்களுடன் நல்லுறவை பேனல்
  • அல்லாஹ் - அர்hஹ்மான்
  • இஸ்லாம் பற்றி பூரணமான சிந்தனையை முன்னெடுத்தல்
  • அடிப்படை அலகுகளில் இஸ்லாத்தை நிலைநாட்டல்
  • உம்மத்தின் ஒற்றுமையை பாதுகாத்தல் (பிளவுபட்ட பெரும்பான்மை சமூகமொன்றில் ஒற்றுமையாக வாழும் சிறுபான்மை சமூகம் பலம்மிக்கது – யூசுப் அல்கர்ழாவி)
Thanks to : முஆத் முனாஸ் 

No comments:

Post a Comment