குடும்பம், வீடு என்பன முழுமையானதொரு சட்ட ஒழுங்கைக் கொண்ட நிறுவனம். அதுவே சமூக அமைப்பின் அடிப்படை, முதல் அலகு. இந்த வகையில் அந்நிறுவனத்துள்ளே செய்யப்படும் பணிகள் பாரிய பாதிப்பை குறிப்பிட்ட சமூகத்தின் மீதும் நாகரிகத்தின் மீதும் ஏற்படுத்துகின்றன.
இக்கருத்து இப்போது மறக்கப்பட்டு, குடும்பமும் வீடும் ஒரு சிறையாகவும் பெண்ணின் ஆழுமையை அழிக்கும் இடமாகவும் கருதப்படுகிறது. வீட்டுக்கு வெளியே தொழில் புரிவது தான் “தொழில்” ஆகவும் பெண்ணுக்கு கண்ணியத்தைத் தருவதாகவும் கருதப்படுகிறது. இக்கருத்து மேற்க்கத்தேய சிந்தனை ஆதிக்கத்தால் பெண்களின் மனதில் கூட ஆழப் பதிந்துள்ளது.
இங்கு "வேலை செய்தல்", "தொழில் புரிதல்" என்பது வீட்டுக்கு வெளியே பொதுவாழ்வில் உழைப்பது எனவும், கணக்கிடவும் அளவிடவும் முடியுமானதும், குறிப்பிட்டளவு கூலியாகப் பணம் பெற முயுமானதும் மட்டுமே தொழிலாக கொள்ளப்படுகிறது.
பெண் என்பவள் வீட்டிலே சிறந்த ஒழுக்க விழுமியங்கள் மிக்க குழந்தைகளை வளர்த்தெடுப்பதையும், அன்பையும் அரவணைப்பையும் கொண்டு ஆளுமை மிக்க சிறந்த இளம் சமுதாயத்தை உருவாக்கும் தொழிலையும் தொழிலாக கொள்ளப்படுவதில்லை.பெண்களின் தனிப்பட்ட வாழ்வில் அவள் மேற்கொள்ளும் ஏனைய தொழிற்பாடுகள் அனைத்தும்; மேற்கூறப்பட்டது போன்று பிள்ளைகளை வளர்த்தல், குடும்பத்தை பராமரித்தல் போன்ற மிக உயர்ந்த செயற்பாடுகள் தொழிலாக கொள்ளப்படாமைக்கு அவை வீட்டுக்குள்ளே நிகழ்பவை, அதற்கு பெண் என்பவள் எந்தக் கூலியும் பெற்றுக்கொள்வதில்லை, அதனை அளவிடவும் முடியாது, அது பொது வாழ்வோடு தொடர்பற்றது, தனிப்பட்ட வாழ்கைக்குரியது போன்றன காரணங்களாக அமையலாம்.
இங்கு ஒரு முக்கிய விடையத்தை குறிப்பிட விரும்புகிறேன், அதாவது பிரபல விஞ்ஞானியான ஆல்பர்ட ஐன்ஸ்டைன் இன் தாய் பௌலின் ஐன்ஸ்டைனும் எந்தத் தொழிலுக்கும் வெளியே சென்றதில்லை. அவள் வீட்டிலேயே பிள்ளை வளர்க்கும், பிள்ளைக்கு கற்றுக்கொடுக்கும் சிறந்த தாயாக தொழில் புரிபவளாக இருந்தாள்.
வீட்டில் பெண் உழைப்பது பெண்ணின் தனி மனித ஆளுமையை உறுதி செய்கிறது. அது மனிதப் பெறுமானங்களையும், மனித இயல்பு குறித்த சிந்தனையையும் வளர்க்கிறது.ஒரு பெண் அரசாங்க அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பதை விட வீட்டில் இருப்பதால் அவளின் பிள்ளைகள் மற்றும் அவள் சார்ந்த சமூகம் அதிகமான பிரயோசனம் பெறும்.
எனினும் தற்போதைய உலக நடைமுறைகள் அனைத்துப் பெண்களும் தொழில் புரிய வேண்டும்,அனைவரும் சந்தைகளிலும் தொழிற்ச் சங்கங்களிலும் பொது வாழ்விலும் ஓடி உழைக்க வேண்டும் என்கிறது. பெண்ணை போகப் பொருளாக பார்க்கும் நவீன உலகு, பெண் என்பவள் வீட்டில் இருந்து கொண்டு சிறந்த ஒரு தலைமுறையை உருவாக்குவதை விரும்பவில்லை போலும்.
பெண்கள் வீட்டில் தொழில் புரிவதை வெறுத்து பெண்ணடிமைத்தனத்தை பேசும் பத்திரிக்கை மறுபக்கமே ஆபாசபடங்களை போட்டு தனது பெண்ணுரிமை பேணும் விதத்தை சொல்கிறது. இதுவே இன்றைய உலகின் யதார்த்தம்.
"சிந்திப்பவர்களுக்கு நிறைய அத்தாட்சிகள் உண்டு."
No comments:
Post a Comment