Friday, April 13, 2012

Solar System

 Images of The Sun, Venus, Mercury, Earth, Mars, Asteroids, Comets, Space Travel, Saturn, Jupiter, Uranus, Neptune and Pluto.

Thursday, April 12, 2012

விண்டோஸ் 7 தரும் ட்ரைவ் மிர்ரர்

மிகச் சிறந்த பேக் அப் தீர்வின்படி, வழிகளை மேற்கொண்டு பைல்கள் அனைத்தையும் பேக் அப் எடுத்து வந்தாலும், ஹார்ட் டிஸ்க் கிராஷ் ஆனால், சில மணி நேர வேலையாவது வீணாகிப் போய்விடும். இதனையும் சரி செய்திட விண்டோஸ் 7 சிஸ்டம் ஒரு வழி காட்டுகிறது. அதன் பெயர் "ட்ரைவ் மிர்ரரிங்'.


இந்த வசதி விண்டோஸ் 7 சிஸ்டத்தின் புரபஷனல், என்டர்பிரைஸ் மற்றும் அல்டிமேட் பதிப்புகளில் கிடைக்கிறது. இது கீஅஐஈ 1 தொழில் நுட்பத்தின் செயல் பாடாகும். இதன்படி, இரண்டு அல்லது அதற்கும் மேலான டிஸ்க்குகள் ஒரே டேட்டாவினைக் கொண்டிருக்கும். பைல்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப் பட்டு இவ்வகையில் பதிவாகும். இதனால், ஒரு டிஸ்க் கிராஷ் ஆனாலும், நாம் நம் டேட்டாவினைச் சிறிது கூட இழக்க மாட்டோம்.


இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும். மிர்ரரிங் என்பது தொழில் நுட்ப ரீதியாகப் பார்த்தால், பேக் அப் தீர்வாகாது. எடுத்துக் காட்டாக, நீங்கள் உங்களை அறியாம லேயே ஒரு பைலை அழித்தால், ஹார்ட் டிஸ்க்கின் இரண்டு ட்ரைவ்களிலும் அது அழிக்கப்படும்.


( அந்த பைலை வேறு தர்ட் பார்ட்டி புரோகிராம் மூலம் திரும்பப் பெறலாம் என்றாலும், இந்த மிர்ரர் ட்ரைவ் செயல்பாட்டினால் திரும்பப் பெற முடியாது). மேலும் இது போல மிர்ரர் டிஸ்க்கில் பதிந்து வைத்தவற்றை, அண்மைக் காலத்தில் பயன்படுத்தப்படும் விண்டோஸ் இயக்கத்தின் வழி மட்டுமே மீட்டுப் பெற முடியும்.


டிஸ்க் மிர்ரரிங் மேற்கொள்ள நமக்குக் குறைந்தது ஒரு காலியான டிஸ்க் இருக்க வேண்டும். எப்படி மிர்ரர் ட்ரைவில் உள்ள டேட்டாவினை இழக்காமல், இருக்கும் டிஸ்க்கினை மிர்ரர் டிஸ்க்காக அமைப்பது குறித்து இங்கு காணலாம்.


இருக்கின்ற ட்ரைவினை மிர்ரரிங் செய்வது: ஸ்டார்ட் பட்டன் கிளிக் செய்து சர்ச் பாக்ஸில் partitions என டைப் செய்திடவும். உடன் கிடைப்பதில் Create and format hard disk partitions என்பதில் கிளிக் செய்திடவும். நீங்கள் சர்ச் பாக்ஸினை செயல்படாமல் வைத்திருந்தால், Win+R அழுத்தி ரன் விண்டோ பெற்று அதில் diskmgmt.msc என டைப் செய்திடவும்.


இப்போது Disk Management விண்டோ காட்டப்படும். நம்மிடம் OldData என்ற பெயருடன் ஒரு சிறிய டிஸ்க் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதே அளவிலான இன்னொரு டிஸ்க்கினை இதன் மிர்ரராக வைத்துக் கொள்ள விரும்புகிறோம்.


இதில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இப்போது இருக்கும் டிஸ்க்கின் மிர்ரர் ஆக அமைக்க இருக்கும் டிஸ்க், பங்கிட்டு ஒதுக்கப்படாததாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் இருந்தால், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Delete Volume என்பதில் கிளிக் செய்திடவும். இதன் மூலம் அது பங்கிட்டு ஒதுக்கப்படாததாக மாற்றப்படுகிறது. இதன் மூலம் அந்த ட்ரைவில் ஏதேனும் டேட்டா இருந்தால் அது அழிக்கப்படும்.


அடுத்து எந்த டிஸ்க்கிற்கு மிர்ரர் ஏற்படுத்த விரும்புகிறீர்களோ, அதில் ரைட் கிளிக் செய்திடவும். இதில் கிடைக்கும் மெனுவில் Add Mirror என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது ஓர் எச்சரிக்கை செய்தி கிடைக்கும்.


இந்த செயல்பாடு, இப்போது உள்ள டிஸ்க்கினை basic நிலையிலிருந்து dynamic நிலைக்கு மாற்றி விடும் என அந்த செய்தி கூறும். இந்த செயல்பாடு, அந்த டிஸ்க்கில் உள்ள டேட்டாவினை அழிக்காது என்பதனையும் நினைவில் கொள்ள வேண்டும்.


இந்த புதிய டிஸ்க் mirror என குறிக்கப்படும். இது ஏற்கனவே உள்ள ட்ரைவிலிருந்து டேட்டாவினை காப்பி செய்து வைக்கத் தொடங்கிவிடும். இந்த ட்ரைவ்கள் ஒருங்கிணைக்கப்படும். இதற்கு சிறிது நேரம் ஆகலாம். இதன் பின்னர் E: ட்ரைவில் சேர்க்கப்படும் எந்த டேட்டாவும், இரண்டு ஹார்ட் ட்ரைவ்களிலும் இருக்கும்.


இது போல ட்ரைவ் மிர்ரரிங் செய்து வைத்துக் கொள்வது நமக்கு ஹார்ட் டிஸ்க் கிராஷ் ஆகும்போது மிகவும் உதவியாக இருக்கும். ஆனால், இந்த அமைப்பை ஏற்படுத்திய பின்னரும், வழக்கம் போல பேக் அப் எடுத்து வைப்பது நல்லது.

Wednesday, April 11, 2012

பயர்பாக்ஸ் நம் வசமாக

பயர்பாக்ஸ் நம் வசமாக


அனைத்து பிரவுசர்களிலும் குரோம் மிக வேகமாகச் செயல்படுகிறது என்றாலும், பழக்கத்தின் காரணமாக, பலர் பயர்பாக்ஸ் பிரவுசரையே தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு வேறு சில காரணங்களும் உண்டு.

இந்த பிரவுசருக்கென தயாரிக்கப்பட்டு இலவசமாக வழங்கப்படும் ஆட் ஆன் தொகுப்புகள், இந்த பிரவுசரைப் பயன்படுத்துவதில் நமக்குப் பல வசதிகளை அளிக்கின்றன. இவற்றை நாம் விரும்பும்படி அமைப்பதும் மிக எளிதாக உள்ளது.

இவை மட்டுமின்றி, அடிப்படையிலேயே, பயர்பாக்ஸ் பிரவுசரை நாம் நம் விருப்பத்திற்கேற்ப அமைக்கலாம். இந்த வசதிகளைத் தரும் about:config பக்கம் பலர் செல்வதே இல்லை. இது ஏதோ மறைத்து வைக்கப்பட்டுள்ள ஒரு பக்கம் என்றே நாம் ஒதுங்கி விடுகிறோம்.

இது மறைந்திருப்பதற்குக் காரணம், இதில் ஏற்படுத்தப்படும் மாற்றங்கள், பயர்பாக்ஸ் இயக்கத்தினைப் பெரிய அளவில் மாற்றும் என்பதால் தான்.

ஆனால் இந்தப் பக்கத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதும், மீண்டும் அதனைப் பழைய நிலைக்குக் கொண்டு வருவதும் மிக எளிது. இந்தப் பக்கத்தில் கிடைக்கும் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் நாம் குறிப்பிட்ட மதிப்பினை ஒதுக்கினால், அதற்கேற்ப பயர்பாக்ஸ் பிரவுசர் செயல்படும். இந்த மதிப்பு எண்ணாகவோ, பெயராகவோ, சொல்லாகவோ இருக்கலாம். இவ்வாறு நம் வசதிகளுக்காக நாம் இதில் ஏற்படுத்தக் கூடிய சில மாற்றங்களை இங்கு காணலாம்.

முதலில் இந்த மாற்றங்களைக் கொண்டுள்ள மாறா நிலையில் உள்ள பைலுக்கு ஒரு பேக்கப் எடுத்து வைத்துக் கொள்ளலாம். அப்போதுதான், ஏதேனும் தேவைப்படாத மாறுதல் ஏற்பட்டு, பயர்பாக்ஸ் வழக்கமாக, நாம் எதிர்பார்ப்பிற்கு மாறாக இயங்கினால், பேக் அப் பைலைக் கொண்டு வருவதன் மூலம், பழைய நிலைக்குக் கொண்டு செல்லலாம்.

இந்த பைலின் பெயர் prefs.js. இந்த பைல் மூலம் பழைய நிலைக்குச் செல்ல முடியவில்லை என்றால், பிரவுசரை மீண்டும் இன்ஸ்டால் செய்து வழக்கம் போல செயல்படலாம்.

முதலில் about:config பக்கத்திற்கு எப்படிச் செல்வது? பயர்பாக்ஸ் பிரவுசரை இயக்கி, அதன் முகவரிக் கட்டத்தில் prefs.js என டைப் செய்திடவும். உடனே எச்சரிக்கை செய்தி ஒன்று கிடைக்கும். இதில் மாற்றங்களை ஏற்படுத்தினால், வாரண்டி கிடையாது; இதன் இயக்கம், பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை போய்விடும். உங்கள் செயல்பாடு குறித்து நீங்கள் உறுதியாக இருந்தால், தொடரவும் -- என்று இந்த எச்சரிக்கை சொல்லும்.

அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று மனதில் எண்ணிக் கொண்டு, கிளிக் செய்து செல்லவும். கிடைக்கும் பக்கத்தில் filter என்று ஒரு கட்டம் கிடைக்கும். இதன் மூலம் மாற்றத்தை ஏற்படுத்த தேவையான கட்டளை வரியைப் பெறலாம். இனி about:config பக்கத்தில் நாம் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்களைக் காணலாம்.


1. பிரவுசரை வேகப்படுத்த:

பிரவுசரின் வேகத்தை அதிகப்படுத்த ஒன்றுக்கு மேற்பட்டவற்றில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும். கீழே கொடுக்கப்பட்டது போல செயல்படவும்.

network.http.pipelining: இங்கே true என மாற்றவும்.

network.http.proxy.pipelining: இங்கே true என மாற்றவும்.

network.http.pipelining.maxrequests: இங்கே 8 என மாற்றவும். அடுத்து maxconnections என்பதனைத் தேடிபெறவும். இதில் network.http.maxconnections என்பதைப் பெறுவீர்கள். இதனை 96 என மாற்றவும். அடுத்து கிடைக்கும் network.http.maxconnectionsperserver என்பதில் மதிப்பை 32 என மாற்றவும்.


2. ஆண்ட்டி வைரஸ் ஸ்கேன் செய்வதை நிறுத்த:

நீங்கள் பெரிய அளவிலான பைலை டவுண் லோட் செய்கையில், அதனை ஸ்கேன் செய்வது, பயர்பாக்ஸ் இயக்கத்தினை தாமதப்படுத்தும். எப்படி இருந்தாலும், டவுண்லோட் செய்த பின்னர் தனியாக அதனை ஸ்கேன் செய்யப் போகிறீர்கள். எனவே டவுண்லோட் செய்கையில் ஸ்கேனிங் செயல்பாட்டினை நிறுத்தலாமே. இதற்கு "scan Whendone" என்பதனைத் தேடிப் பெறவும். இந்த கட்டளை வரி browser.download.manager.scanWhenDone என இருக்கும். இதன் மதிப்பை "false" என மாற்றவும்.


3. பாப் அப்களை டேப்களாக மாற்ற:

பாப் அப் விண்டோக்கள் டேப்களாக இயங்க முடியாத நிலையில் இருந்தால், பயர்பாக்ஸ் அவற்றை பாப் அப் பெட்டிகளாகவே நடத்தும். இவற்றைத் தனி டேப்களில் திறக்கும் படி செட் செய்துவிடலாம். இதற்கு newwindow எனத் தேடவும். மூன்று முடிவுகள் வரிகளாகக் கிடைக்கும். இதில் browser.link. open_newwindow.restriction என்ற வரியின் மதிப்பை 0 என மாற்றவும்.


4. ஸ்பெல் செக்:

மாறா நிலையில், பயர்பாக்ஸ் பல வரிகள் கொண்ட பாக்ஸ் களில் அமைக்கப்படும் டெக்ஸ்ட்டை மற்றுமே ஸ்பெல்லிங் செக் சோதனைக்கு உட்படுத்தும். இதனை மாற்றி அனைத்து வகை டெக்ஸ்ட் பாக்ஸ்களிலும் ஸ்பெல் செக் மேற்கொள்ள, spellcheckdefault எனக் கொடுத்து தேடவும். layout.spellcheckDefault என்ற கட்டளை வரியின் மதிப்பை 2 என அமைக்கவும்.


5. சர்ச் கட்ட முடிவுகளை புதிய டேப்பில் பெற:

நாம் சர்ச் கட்டத்தினைப் பயன்படுத்தி தேடுகையில், முடிவுகள் அதே டேப்பில் கிடைக்கும். இது நாம் விரும்பாத ஒன்று; ஏனென்றால், இந்தப் பக்கத்திலிருந்து உடனடியாக நீங்கள் தேடிய பக்கத்திற்குச் சென்றுவிடுவீர்கள். இதற்குப் பதிலாக புதிய டேப்பில் திறக்கப்பட்டால், அனைத்தும் நாம் பயன்படுத்த அப்படியே கிடைக்கும். இதற்கான செட்டிங்ஸ் அமைக்க, openintab எனக் கொடுத்துத் தேடவும். browser.search.openintab என்ற கட்டளை வரிக்கான மதிப்பை true என அமைக்கவும்.


6. தானாக புக்மார்க்குகளைக் கொண்டு வர:

பயர்பாக்ஸ் தானாகவே புக்மார்க்குகளை சேவ் செய்து, இன்னொரு புரோகிராமிற்கு மாற்றுகிறது. இந்த மாறா நிலை ஏற்பாட்டில், இவை வசதியான bookmarks.html என மாற்றப்படாமல், places.sqlite என மாற்றப்படுகிறது. எளிதாக இன்னொரு இடத்திற்கு மாற்ற, autoExportHTML என்று டெக்ஸ்ட் கொடுத்துத் தேடவும். browser. bookmarks.autoExportHTML என்ற கட்டளை வரியின் மதிப்பை true என மாற்றவும்.


7. எக்ஸ்டன்ஷன் இன்ஸ்டலேஷன் தாமதம்:

பயர்பாக்ஸ் பிரவுசர் அதன் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களுக்குப் பெயர் பெற்றவை. ஆனால் ஒவ்வொரு முறை ஒரு எக்ஸ்டன் ஷனை இன்ஸ்டால் செய்கையில், இதன் தாமதத்தினைப் பொறுத்துக் கொள்ள வேண்டியதுள்ளது. இதனை மாற்றி அமைக்கலாம். enable_delay என டைப் செய்து தேடவும். security.dialog_enable_delay என்ற கட்டளை வரி கிடைக்கும். இதன் மதிப்பை 0 என மாற்றவும்.


8. சோர்ஸ் கோட் எடிட்டரில் திறக்க:

ஓர் இணைய தளத்தின் சோர்ஸ் கோடினைப் பார்க்க விரும்பி, அதனைத் திறக்க முயற்சிக் கையில், அது பிரவுசரின் பாப் அப் விண்டோவில் காட்டப்படுகிறது. பொதுவாக இதனை ஒரு எடிட்டரில் மட்டுமே மாற்ற முடியும். எனவே இந்த பாப் அப் விண்டோவில் வருவதனைக் காப்பி செய்து, பின் எடிட்டரில் பேஸ்ட் செய்து, மாற்ற முயற்சிப்போம்.

இதற்குப் பதிலாக, இது நேரடியாக எடிட்டர் புரோகிராம் ஒன்றில் திறக்கப்பட்டால், நம் வேலை எளிதாகும் இல்லையா? இதற்கு view_source.editor என டைப் செய்து தேடினால், view_source.editor. external என்ற கட்டளை வரி கிடைக்கும். இதன் மதிப்பை true என மாற்றவும். அடுத்து கிடைக்கும் view_source.editor.path என்ற வரியில் நீங்கள் விரும்பும் எடிட்டரை அமைக்கவும்.


9. அதிக ஆட் ஆன் தொகுப்புகள்:

ஆட் ஆன் தொகுப்புகளை பிரவுசரில் தேடுகையில், ஐந்து தொகுப்புகள் அதிக பட்சமாகக் காட்டப்படும். இது இன்னும் கூடுதலாக இருக்க நாம் விரும்புவோம். இதனை செட் செய்திடலாம். getAddons என டைப் செய்து தேடவும். extension.getAddons.maxResults எனக் கிடைக்கும் கட்டளை வரியில் எத்தனை முடிவுகள் காட்டப்பட வேண்டும் என்பதை அமைக்கலாம். இதனை 10 அல்லது அதற்கும் அதிகமாக அமைக்கலாம்.


10. பேக் ஸ்பேஸ் பட்டன் இயக்க:

பயர்பாக்ஸ் பிரவுசரில் பேக் ஸ்பேஸ் பட்டனை அழுத்தி, நாம் பார்த்த இணையப் பக்கங்களில் ஒன்று முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ செல்லும்படி அமைக்கலாம். backspace என டைப் செய்தால் browser.backspace_action என்ற வரி கிடைக்கும். முன் சென்ற பக்கம் வேண்டும் என்றால் இதன் மதிப்பை 0 ஆகவும், பின் சென்ற பக்கம் வேண்டும் என்றால் இதன் மதிப்பை 1 ஆகவும் அமைக்கவும்.


You are subscribed to email updates from தெரிந்து கொள்ளலாம் வாங்க
To stop receiving these emails, you may unsubscribe now.
Email delivery powered by Google
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610

Sunday, April 8, 2012

உலாவிகள் ஒரு பார்வை

இணையத் தொடர்புக்குப் பயன்படுத்த பல உலாவிகள் நமக்குக் கிடைக்கின்றன. இவை அனைத்தும் ஒரே மாதிரியான திறனுடனோ, வசதிகளுடனோ அமைக்கப்படுவதில்லை. சில வேகமாக இயங்கும், பல உலாவிகள் தரும் வசதிகள் எண்ணற்றவையாக இருக்கும்.

1. கூகுள் குரோம் பதிப்பு 17

மொத்தத்தில் முதல் இடம் பிடித்துள்ள உலாவி. இணைய தளங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில் அவை முடங்கிப் போனால் உலாவியின் இயக்கத்திறனை நிறுத்தாமல் அவற்றை மட்டும் மூடும் சிறப்பினை கொண்டுள்ளது.

இதன் பல அடுக்கு பாதுகாப்பு(Sandbox) கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களைத் தடுக்கிறது. பயன்படுத்துவதில் எளிமை, அதிக எண்ணிக்கையில் எக்ஸ்டன்ஷன் வசதிகள், ஆட் ஆன் புரோகிராம்கள், மிகச் சிறந்த இயக்கம் ஆகியவை.

இவை அனைத்தும் தொடக்க நிலை இணையப்பயனாளருக்குத் தெரியாமலோ, தேவை இல்லாமலோ இருக்கலாம். ஆனால் அனைவரின் எதிர்பார்ப்புகளை இது நிறைவேற்றுகிறது. இணையப் பக்கங்களை அவற்றில் எத்தனை கிராபிக்ஸ் ஆப்ஜெக்ட்கள் இருந்தாலும், நான்கு விநாடிகளில் இறக்கித் தருகிறது.

பிப்ரவரியில் வெளியான இதன் பதிப்பில் இணைய முகவரியை டைப் செய்திடத் தொடங்குகையிலேயே அந்த பக்கத்தைத் தருவது இதன் அதிமுக்கிய சிறப்பாக உள்ளது.

வேறு மொழிகளில் உள்ள இணையத்தளம் இறங்குகிறது எனில், உடனே அதனை மொழி பெயர்த்துத் தரும் பணியில் குரோம் இறங்குகிறது. மொழி பெயர்ப்பு மிகச் சரியாக இல்லை என்றாலும் அப்பக்கத்தைப் பற்றி அறிந்து கொள்ள இது உதவுகிறது.


2. மொஸில்லா பயர்பாக்ஸ் பதிப்பு 10

பலவகைச் சிறப்புகளைக் கொண்ட ஓர் அருமையான உலாவி. எச்.டி.எம்.எல். 5 இயக்கம் மற்றும் ஆயிரக்கணக்கான ஆட் ஆன் புரோகிராம்கள் இதன் சிறப்புக்கு அடிப்படை.

ஆனால் தேவையற்ற அல்லது அதிகமான ஆட் ஆன் தொகுப்புகள் உலாவியின் வேகத்தை மட்டுப்படுத்துவது இதன் பலகீனமே. மார்ச் 2011 ல் பதிப்பு 4 வந்த பின்னர் இன்று வரை ஆறு பதிப்புகள் வந்துள்ளன.

மொஸில்லா வாடிக்கையாளர்களின் தேவைகளைத் தொடர்ந்து கணித்து வருவதனைக் காட்டுகிறது. இதில் டேப்களை குழுக்களாக அமைத்துப் பிரித்து வைத்து எளிதாக இயக்கலாம். பாப் அப் பில்டர், பிரைவேட் பிரவுசிங் போன்றவை இதன் மற்ற சிறப்புகள்.


3. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9

பாதுகாப்பில் இதன் தனித் தன்மையை மற்ற உலாவிகள் கொண்டிருக்கவில்லை. எச்.டி.எம்.எல். 5 இயக்கத்தில் இதுவே அதிக வேகம் கொண்டுள்ளது. இதன் டேப்களைக் கையாள்வதில் சற்று சிரமமாக உள்ளது. எளிமையில் மிகவும் பின் தங்கி உள்ளது.

ஒவ்வொரு தனி நபருக்குமாக குறிப்பிட்ட தளங்களைத் தொடர்ந்து தடுத்துவிடும் வசதி தரப்பட்டுள்ளது. இதன் புக்மார்க்குகளை மற்றவற்றில் இணைப்பதில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் எதுவும் செய்யவில்லை என்பது தீராத குறையாக உள்ளது. தீம்கள் மற்றும் ஸ்பெல்லிங் செக் செய்திடும் வசதி இல்லாதது பலருக்கு ஏமாற்றத்தைத் தரும்.

MP3 பிளேயர் தரும் ஆபத்து

வாக்மேன் மறைந்து எம்பி3 பிளேயர் வந்த போது, இசையை ரசிக்க, அனைவரும் அதற்கு மாறினர். மிகத் துல்லிதமான இசை, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தொடர்ந்து பிரச்னை இன்றி தரும் வசதி ஆகியவற்றினால், பலரும் இதன்பால் ஈர்க்கப்பட்டனர்.


ஆனால், இது வேறு சில பிரச்னைகளைத் தருவதாக, டெல் அவிவ் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து எம்பி3 பிளேயரை, ஹெட் செட் மாட்டி கேட்டு வருபவர் களுக்கு, மிக இளம் வயதிலேயே காது கேட் கும் திறன் படிப்படியாக குறையத் தொடங் குகிறது என்று கண்டறிந்துள்ளனர்.


தற்போது நால்வரில் ஒருவருக்கு இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இந்த ஆய்வினை மேற்கொண்ட விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.


எம்பி3 பிளேயர் மட்டு மின்றி, தற்போது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஐ-பாட் மியூசிக் பிளேயர் பயன் படுத்துபவர்களின் கதியும் இதே தான் என வும் கூறி உள்ளனர்.


இதனால், இன்னும் 10 அல்லது 20 ஆண்டுகள் கழித்து, ஒரு சந்ததியே செவிகளின் கேட்புத் திறன் குறைவாக உள்ளதாக அமைந்துவிடும் என்றும் எச்சரித்து உள்ளனர்.


அதிக சத்தத்தில் பாடல்களைக் கேட்பதனால், தொடர்ந்து தாங்க முடியாத அளவிற்கு ஒலி அலைகள் காதுகள் வழியாக மூளைக்குப் பயணமாகின்றன. இவை ஏற்படுத்தும் தீய விளைவுகளை, உடனடி யாக நாம் அறிய முடிவதில்லை.


படிப் படியாக அவை நம் கேட்கும் திறனைக் குறைக்கின்றன. தெரிய வரும்போது இதற்கான தீர்வு கிடைப்பதில்லை. வளரும் இந்த தீய பழக்கம் குறித்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் களுக்கு அறிவித்தால் நல்லது.

Thursday, April 5, 2012

Today's Hadeeth

He who wishes to enter paradise at the best gate, must please his Father and Mother.
-Bukhari and Muslim-

Tuesday, April 3, 2012

Today's Dua

Ya Allah, we are trying, and you know the sincerity of your slaves. please help us keep pushing . Aameen..!

Sunday, April 1, 2012

Today's Dua

Accept out tiny actions, our little smiles, our minuscule deeds, even if they weren't performed with complete heart.