ரஜனிகாந்த் கடவுள் இருக்கிறார் என்றாலும் கைதட்டுவார்கள், கமல்ஹாசன் கடவுள் இல்லை என்றாலும் கைதட்டுவார்கள்.... இந்தக்கூத்தாடிகளின் பசப்பு வார்த்தைகளால் புனிதமிக்க கொள்கை பற்றி தீர்மானிக்கிறது நமது சமூகம்.
இல்லாமையில் இருந்து ஒரு இரசாயனம் வந்தது என்பதை அறிவியல் என்பார்கள். இரசாயனத்தை உண்டாக்கியவன் உள்ளான் என்றால் அதை மடமை என்பார்கள். ஆக்கியோன் இல்லாமல் ஆன பொருள் இல்லை என்பதை அறிவியல் என்பார்கள். அண்டசராசரங்களையும் ஆக்கியோன் இருக்கிறான் என்றால் அதை மடமை என்பார்கள்.
குண்டூசியைக்கூட உருவாக்க ஒரு சக்தி வேண்டும். ஆனால் இந்தப் பேரண்டத்தை படைக்க எதுவும் தேவையில்லை... இதற்குப்பெயர்தான் அறிவியலாம். நமக்கு மேல் ஒரு சக்தி உள்ளது, அந்த சக்தியை கடவுள் என்று ஏற்றுக்கொண்டால் மனம் போன போக்கில் வாழ முடியாது என்பதை நன்கு அறிந்த புத்தகப்பூச்சிகள் உருவாக்கிய மடமைச் சித்தாந்தமே நாத்திகவாதம்.
வேடிக்கையான விடயம் என்னவென்றால்
ஒரே கடவுள் கொள்கையினை ஏற்றுக்கொண்ட நம்மவர் கூட கமலஹாசன் போன்றோரின் அர்த்தமற்ற கொள்கைகளை அறிவியல் என்றும் தத்துவம் என்றும் போற்றுகின்றனர். பல தெய்வ கொள்கை, சிலை வழிபாடு என்பது இலகுவாக முறையடிக்கப்பட்டாலும் நாத்திகம் என்னும் அர்த்தமற்ற கொள்கை அர்த்தமுள்ள கொள்கையாகவே கொள்ளப்படுகிறது.
ஒரே கடவுள் கொள்கையினை ஏற்றுக்கொண்ட நம்மவர் கூட கமலஹாசன் போன்றோரின் அர்த்தமற்ற கொள்கைகளை அறிவியல் என்றும் தத்துவம் என்றும் போற்றுகின்றனர். பல தெய்வ கொள்கை, சிலை வழிபாடு என்பது இலகுவாக முறையடிக்கப்பட்டாலும் நாத்திகம் என்னும் அர்த்தமற்ற கொள்கை அர்த்தமுள்ள கொள்கையாகவே கொள்ளப்படுகிறது.
எது அர்த்தமற்றது எது அர்த்தமுள்ளது என்பதை பொருள் கொண்ட கருத்துக்கள் மூலம் தீர்மானிப்போம். திரைப்பட நடிகர்கள் உயிர்கொல்லிகள்... அவர்களிடம் எந்த ஆதாரமும் இல்லை.
”அவனையன்றி (வேறு) கடவுள்களை ஏற்படுத்திக் கொண்டார்களா? "உங்கள் சான்றுகளைக் கொண்டு வாருங்கள்! இதுவே என்னுடனிருப்போரின் அறிவுரையும், எனக்கு முன் சென்றோரின் அறிவுரையுமாகும்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! எனினும் அவர்களில் பெரும்பாலோர் உண்மையை அறிய மாட்டார்கள். அவர்கள் புறக்கணிப்பவர்கள்”
(அல் குர்ஆன் 21:24)
அல்லாஹு அக்பர்.
No comments:
Post a Comment