Original article is from Jaffnamuslim (நாகூர் ழரீஃப்)
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தற்போதையதலைவர் அஷ் ஷைக் எம்.ஐ.எம். ரிஸ்வி முஃப்தி (பின்னூரி) அவர்கள் பற்றி,சென்ற ஷவ்வால் மாதத்துக்கானதலைப்பிறைதீர்மானத்தின் பின்னர், பலரும் முறையற்றவிதங்களில் முகநூல் போன்ற இணையத்தளங்களில் விமர்சித்துவருகின்றனர்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு ஒருயாப்பு உண்டு. அந்த யாப்பின் அடிப்படையிலேயே அதன் நிர்வாகத் தெரிவுகளும் இடம் பெறும். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர், மேற்படி யாப்பின் பிரகாரம் ஜம்இய்யாவின் மத்திய சபையில் இருந்து ஏகமனதாகத் தலைமைப் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அன்று முதல், இன்று வரை அவரது தலைமையில் ஜம்இய்யா முன்னேற்றப் பாதையை நோக்கி வேகமாக முன்னேறிச் செல்கின்றது. சமூக ஐக்கியம், இயக்க வேறுபாடுகளைக் களைதல் என்பனவே அவரது முதன்மை இலக்குகள். இயக்கச் சண்டைகள் இந்தத் தேசத்தில் இடம் பெறவே கூடாது என்று அயராது உழைப்பவர்ளூ என்றும் சமூக ஐக்கியம் பற்றியேஅதிகம் பேசிவருபவர்.
மௌலானா யூஸுஃப் (ரஹ்) அவர்களது இறுதி உபதேசம் சமூக ஐக்கியத்தின் அவசியம் பற்றியதாகவே அமந்திருந்தது. எனவே, உர்தூ மொழியில் அமைந்திருந்த அவ்வுரையை அஷ் ஷைக் எம்.எச்.எம். யஹ்யா (பலாஹி) அவர்கள் மூலம் தமிழில் பெயர்த்து விநியோகிக்கப்பட்டமை, இவரது இவ்விலக்கை உறுதிசெய்யப் போதுமான ஒரு சான்றாகும்.
சுமார் பத்து வருடங்களுக்கு முன்னர் இருந்த இயக்கச் சண்டைகளும் வழக்கு வம்புகளும் இன்றும் பலருக்கு நினைவிருக்கும். அவற்றை அடியோடு அழிக்கப் பாடுபட்டபலரில் இவர் ஒருமுக்கியஸ்தர் என்பது பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். தஃவா அமைப்புக்களது உரிமைகளை வென்று பெற்றுக் கொடுத்தவர் இவர் என்பதும் மிமையான தகவல் அல்ல என்று நினைக்கின்றேன்.
அண்மையில் ஒரு சமூக முக்கியஸ்தரான ஜம்இய்யாவின் உப தலைவர்களுள் ஒருவரான தலை சிறந்த ஆலிம் ஒருவரைக் காணச் சென்றிருந்த வேளை அவர், "ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்துக்குப் போனால், யார் எந்த அமைப்பு என்றே விளங்கிக் கொள்ளமுடியாத அளவு ஆலிம்கள், தமது இயக்க மோகங்களையும் வேற்றுமைகளையும் மறந்து சமூக ஐக்கியத்தை மையமாகவே சிந்திக்கின்றனர்" என்று குறிப்பிட்டார்.
இது ஜம்இய்யாவின் தலைவரது ஐக்கிய சமூகத்தின் இலக்கை உறுதிப்படுத்தும் ஒரு சந்தோஷமான தகவலாகும்;.
"கருத்து வேற்றுமையில் ஒற்றுமை" என்ற கருப் பொருளில் தேசம் முழுதும் மஸ்ஜித்களில் தொங்கும் மேற்படி பதாதை இவரது முயற்சின் வெளிப்பாடாகும்.
தப்லீக் ஜமாஅத்தின் முக்கியஷூரா உறுப்பினர்களில் ஒருவராக இருந்தும், எச்சந்தர்பத்திலும் ஏனைய தஃவா அமைப்புக்களை மதிப்பவர். எல்லா அமைப்புக்களையும் சார்ந்த ஆலிம்களை இணைத்து ஃபத்வாக் குழு, பிறைக் குழு போன்றவற்றை வழி நடாத்திச் செல்பவர். எல்லோரது கருத்துக்களுக்கும் ஆலோசனைகளுக்கும் இடமளித்துச் செயற்படுபவர்.
தரீக்காக்களை மையமாகக் கொண்டு இயங்கும் அறபுக் கலாசாலைகளின் மௌலவி பட்டமளிப்பு விழாக்களில், தவ்ஹீத் அமைப்பை பிரதிநிதித்துவப் படுத்தும் ஆலிம்களை உரையாற்ற வைத்த பெருமை இவரையேசாரும்.
தலைப்பிறைத் தீர்மானங்களின் போது அவ்வப்போது ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளை நீக்கி, சமூக ஐக்கியம் ஏற்படவேண்டும் என விரும்பி, கிண்ணியா நத்வதுல் புஹாரி அரபுக் கலாபீடத்தில் ஒருநாள் விஷேட கருத்தரங்கில் ஜம்இய்யாவின் பிறைக் குழுவுடனும், கொழும்பு பெரிய பள்ளி ஆலிம்களுடனும் இணைந்து, சமூக ஐக்கியத்தை மையமாகக் கொண்டு, பல முயற்சிகளை மேற்கொண்டவர்ளூ தொடர்ந்தும் மேற்கொண்டுவருபவர்.
நாட்டில் ஆங்காங்கே ஏற்பட்ட கழகச் சண்டைகளின் போது களமிறங்கிச் சமரச முயற்சிகளில் ஈடுபட்டுவருபவர்.
ஆழமான ஷரீஆவின் அறிவுடைய ஆலிம்களால் இவரது தூர நோக்கும் போக்கும் திருப்திகரமாக அமைந்துள்ளதால், மீண்டும் மீண்டும் அவரையே தம்மைப் பொறுப்பில் அமர்த்துகின்றனர்.
ஒரு பொறுப்பு வாய்ந்த சமூகத் தலைமையமாக செயற்படும் ஜம்இய்யாவின் தலைவர் என்பவர் பாரதூரமான சமூகப் பொறுப்பாளியாவார். இவரை கண்ட நிண்டவர்கள் விமர்சிக்கத் தலைப்படுவதும், தமது காரியாலத்துள் இருந்து கொண்டு மற்றொருவரை மும்மொழிவதும் சமூகத்தை ஆரோக்கியமற்ற திசைக்குத் தள்ளிவிடும். எது எப்படி இருப்பினும் விமர்சிப்பவர்களைவிட பல மடங்கு எல்லாத் துறையிலும்ளூ குறிப்பாக ஷரீஆ அறிவு, தலைமை திறன் மற்றும் ஆற்றல், நிதானம், திடகாத்திரம், விடாமுயற்சி போன்ற பல் திசைகளில் இவர் தனித்துவமானவர் என்பது நான் கூறித்தான் சமூகம் தெரிய வேண்டிய ஒரு விடயமன்று.
ஒருவரை விமர்சிக்கும் கருத்துச் சுதந்திரம் எமக்கு இருக்கிறதென்று எவராவது எண்ணினால், இணையத்திலோ, ஊடகத்திலோ அக்கருத்தை வெளிப்படுத்த முன்னர், குறித்த அமைப்புடனும், குறித்த நபரிடமும் தமது கருத்துக்களை முன் வைக்கலாமல்லவா? அதிலும் அளவுக்கு மிஞ்சிவிடாது அல்லாஹ்வைப் பயந்துகொள்ள வேண்டும்.
எனவே, தனி மரம் தோப்பாவதில்லை என்பதைப் போன்றுள நாமும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுடனும் அதன் தலைமைக்குக் கட்டுப்பட்டும் நடக்கமுற்படுவோமாயின் எமது சமூகம் இன்ஷா அல்லாஹ் எழுச்சிபெறும். இல்லையேல் இன்னும் வீழ்ச்சிப் பாதையை நோக்கியேசெல்லும்.
அல்லாஹ்வே யாவற்றையும் அறிந்தவன்.
No comments:
Post a Comment