Showing posts with label ACJU. Show all posts
Showing posts with label ACJU. Show all posts

Saturday, July 12, 2014

பொதுபல சேனாவுக்கு தேசிய ஷூறா சபை​யின் பதில்


தரிக் மஹ்மூத் - தலைவர்
​​​
தேசிய மட்ட முஸ்லிம் நிறுவனங்கள், முஸ்லிம் ​சமுதாயத்தின் புத்திஜீவிகள் மற்றும் செயற்பாட்டாளர்களை உள்ளிட்ட நாடளாவியரீதியான ஒரு கூட்டமைப்பாகிய தேசிய ஷூறா (ஆலோசனைச்) சபையைத் தடைசெய்யுமாறு பொது பல சேனா விடுத்த வேண்டுகோளையிட்டு நாம் வியப்படையவில்லை. பொய்களை அடிப்படையாகக் கொண்ட பகைமையைப் பரப்பி இந்த நாட்டின் சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களிடையே பல நூற்றாண்டுகளாக நிலவி வந்த சமாதானத்தையும், ஒற்றுமையையும், சகவாழ்வையும் இல்லாதொழிப்பதற்கு அரும்பாடுபடும் ஒரு அமைப்பே பொது பல சேனா என்பதை அவ்வமைப்பின் இந்த வேண்டுகோள் தெளிவாகக் காட்டுகின்றது.

இலங்கை துண்டாடப்படு, “தமிழ் ஈழம்” ஒன்றை உருவாக்குவதற்குப் பெரும் முயற்சி செய்த நோர்வே நாட்டின் பூரண அனுசரனையுடன் 2011ஆம் ஆண்டில் அந்நாட்டுக்கு விஜயத்தை மேற்கொண்ட பொது பல சேனா, அங்கு புலம் பெயர்ந்த தமிழர் அமைப்புகளையும், நோர்வே நாட்டு இஸ்லாமிய வெறுப்புணர்வாளர்களையும் சந்தித்ததைத் தொடர்ந்து, இன முரண்பாடுகளின் ஊடாக இலங்கையைச் சீர்குலைப்பதை நோக்காகக் கொண்ட முஸ்லிம் விரோத விஷமத்தைப் பரப்புவதற்கான வஞ்சகமான செயற்திட்டம் ஒன்றை பொறுப்பேற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. இதன் மூலம் நோர்வே நாட்டின் பின்னணியில் உள்ள மேற்குலக சக்திகள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பயன்பெறுவர். இந்த நாட்டில் பொது பல சேனா மேற்கொள்ளும் குற்றச் செயல்களுக்கெல்லாம் வருந்தத்தக்கவாறு இலங்கை பதில் கூற வேண்டிய நிலையில் உள்ளது.

Tuesday, August 20, 2013

ஐக்கிய சமூகத்தை காணத் துடிக்கும் தலைவர்

Original article is from Jaffnamuslim  (நாகூர் ழரீஃப்)

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தற்போதையதலைவர் அஷ் ஷைக் எம்.ஐ.எம். ரிஸ்வி முஃப்தி (பின்னூரி) அவர்கள் பற்றி,சென்ற ஷவ்வால் மாதத்துக்கானதலைப்பிறைதீர்மானத்தின் பின்னர், பலரும் முறையற்றவிதங்களில் முகநூல் போன்ற இணையத்தளங்களில் விமர்சித்துவருகின்றனர்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு ஒருயாப்பு உண்டு. அந்த யாப்பின் அடிப்படையிலேயே அதன் நிர்வாகத் தெரிவுகளும் இடம் பெறும். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர், மேற்படி யாப்பின் பிரகாரம் ஜம்இய்யாவின் மத்திய சபையில் இருந்து ஏகமனதாகத் தலைமைப் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Tuesday, March 19, 2013

நெல்னா சிக்கன் நிறுவனம் தனது ஹலால் சான்றிதழை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளது.



நெல்னா சிக்கன் நிறுவனம் தனது ஹலால் சான்றிதழை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளது. முஸ்லிம்களின் நலனிற்காக நெல்னா (Nelna) உற்பத்திகளை கொள்வனவு செய்வதை இன்றே நிறுத்துங்கள். உங்கள் பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.
ACJU Halaal Division Numbers : 0117425225 / 0817451355

Wednesday, March 13, 2013

ஹலால் இலச்சினையும் ஜம்மியத்துல் உலமாவின் புத்திசாலித்தனமான முடிவும்!!!

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரர்களே!!!
ஹலால் இலச்சினையை ஜம்மியத்துல் உலமா உள் நாட்டில் வாபஸ் பெற்றும் வெளி நாட்டு ஏற்றுமதிகளுக்கு மட்டும் ஹலால் என்ற ஒரு முடிவை அறிவித்து இருந்தது.

ஆனால் உலமா சபையின் அறிவிப்பு இலங்கை முஸ்லிம்களுக்கு பெரிய வெற்றியே என்று யோசித்து பார்க்கும் முஸ்லிம்களுக்கு புரியும் ...ஏனென்றால்--

1.ஹலால் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு கொடுப்பதனால் இன்னும் ஹலால் செயன்முறை இலங்கையில் உள்ளது..இதன் மூலம் அந்நிறுவனங்கள் இரண்டு முறையில் தயாரிப்புகளை தயாரிக்க முடியாது..இதனால் அவர்களுக்கு பொருட்செலவே அதிகரிக்கும்...ஆகவே அவர்கள் எல்லாவற்றையும் ஹலால் முறையில் தயாரித்து பின்பு பொதி செய்யும் பொழுது ஹலால் முத்திரை வெளிநாட்டினருக்கும் இலங்கைக்கு ஹலால் முத்திரை இல்லாமலும் தான் தயாரிப்பார்கள்...இதன் மூலம் எந்த நிறுவனங்கள் வெளிநாட்டுக்கு ஹலால் செய்கிறார்களோ அவர்கள் முழுமையாக ஹலால் தான் செய்கிறார்கள்....இது மிகவும் பெரிய வெற்றி..


2.ஹலால் இருப்பதால் தான் அதிக விலைக்கு பொருட்கள் விற்கப்படுகின்றன என்று கூறினார்கள்..ஆனால் இப்பொழுது ஹலால் இல்லை எனும் பொழுது எல்லா ஹலால் பொருட்களும் விலை குறைய வேண்டும்...ஆனால் அது நடக்க போகவில்லை என்று இலங்கை வர்த்தக சம்மேளனம் கூறியுள்ளது..ஏனென்றால் ஹலால் அவர்களுடைய செலவில் எந்த ஒரு தாக்கத்தையும் செலுத்தவில்லை என்பதால்....இதன் மூலம் பொது பல சேனா பெரிய பொய்யர்கள் என்பதை காட்ட

Halaal Issue Special Statement By Sheik Rizvi Mufthi (SLBC)

ஹலால் சான்றிதழ் ரத்து செய்தது தொடர்பாக அஷ்ஷேய்க் ரிஸ்வி முப்தி அவர்கள் முஸ்லிம் சேவை வானொலி மூலம் பொதுமக்களுக்கு வழங்கிய தெளிவுகள்.
காணொளி பார்ப்பதற்கு இங்கே கிளிக் செய்யுங்கள்  (காணொளி என்பதை விட ஆடியோ என்பதே பொருந்தும் )
நன்றி