Showing posts with label Equality. Show all posts
Showing posts with label Equality. Show all posts

Saturday, July 12, 2014

பொதுபல சேனாவுக்கு தேசிய ஷூறா சபை​யின் பதில்


தரிக் மஹ்மூத் - தலைவர்
​​​
தேசிய மட்ட முஸ்லிம் நிறுவனங்கள், முஸ்லிம் ​சமுதாயத்தின் புத்திஜீவிகள் மற்றும் செயற்பாட்டாளர்களை உள்ளிட்ட நாடளாவியரீதியான ஒரு கூட்டமைப்பாகிய தேசிய ஷூறா (ஆலோசனைச்) சபையைத் தடைசெய்யுமாறு பொது பல சேனா விடுத்த வேண்டுகோளையிட்டு நாம் வியப்படையவில்லை. பொய்களை அடிப்படையாகக் கொண்ட பகைமையைப் பரப்பி இந்த நாட்டின் சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களிடையே பல நூற்றாண்டுகளாக நிலவி வந்த சமாதானத்தையும், ஒற்றுமையையும், சகவாழ்வையும் இல்லாதொழிப்பதற்கு அரும்பாடுபடும் ஒரு அமைப்பே பொது பல சேனா என்பதை அவ்வமைப்பின் இந்த வேண்டுகோள் தெளிவாகக் காட்டுகின்றது.

இலங்கை துண்டாடப்படு, “தமிழ் ஈழம்” ஒன்றை உருவாக்குவதற்குப் பெரும் முயற்சி செய்த நோர்வே நாட்டின் பூரண அனுசரனையுடன் 2011ஆம் ஆண்டில் அந்நாட்டுக்கு விஜயத்தை மேற்கொண்ட பொது பல சேனா, அங்கு புலம் பெயர்ந்த தமிழர் அமைப்புகளையும், நோர்வே நாட்டு இஸ்லாமிய வெறுப்புணர்வாளர்களையும் சந்தித்ததைத் தொடர்ந்து, இன முரண்பாடுகளின் ஊடாக இலங்கையைச் சீர்குலைப்பதை நோக்காகக் கொண்ட முஸ்லிம் விரோத விஷமத்தைப் பரப்புவதற்கான வஞ்சகமான செயற்திட்டம் ஒன்றை பொறுப்பேற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. இதன் மூலம் நோர்வே நாட்டின் பின்னணியில் உள்ள மேற்குலக சக்திகள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பயன்பெறுவர். இந்த நாட்டில் பொது பல சேனா மேற்கொள்ளும் குற்றச் செயல்களுக்கெல்லாம் வருந்தத்தக்கவாறு இலங்கை பதில் கூற வேண்டிய நிலையில் உள்ளது.

Monday, March 18, 2013

இஸ்லாம் உடலுக்கு திரையிட சொன்னதே தவிர அறிவிற்கு திரையிட சொல்லவில்லை..

இஸ்லாம் உடலுக்கு திரையிட சொன்னதே தவிர அறிவிற்கு திரையிட சொல்லவில்லை...

• இஸ்லாத்தில் பெண்கள் வேலைக்கு செல்ல தடையில்லை.


• அப்படி வேலைக்கு சென்று சம்பாதித்தாலும் அதை குடும்பத்திற்கு செலவழிக்க வேண்டிய கடமை அவர்களுக்கு கிடையாது.

• இஸ்லாத்தில் பெண்கள் வெளியே செல்ல தடையில்லை.

• இஸ்லாத்தில் பெண்கள் கல்வி கற்க தடையில்லை.

• இஸ்லாத்தில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கு தடையில்லை.

• இஸ்லாத்தில் பெண்கள் விளையாட்டில் பங்குகொள்ள தடையில்லை.

• இஸ்லாத்தில் பெண்கள் கணவனை தேர்ந்தெடுக்க உரிமை உண்டு.

• இஸ்லாத்தில் பெண்களுக்கு சொத்துரிமை உண்டு.

இப்படி அடிக்கிக்கொண்டே போகலாம்...

இஸ்லாத்தில் பெண்களின் முன்னேற்றத்திற்கு எந்த தடையுமில்லை இஸ்லாம் சொல்வது ஒன்றே ஒன்றுதான்