Showing posts with label Racism. Show all posts
Showing posts with label Racism. Show all posts

Saturday, July 12, 2014

பொதுபல சேனாவுக்கு தேசிய ஷூறா சபை​யின் பதில்


தரிக் மஹ்மூத் - தலைவர்
​​​
தேசிய மட்ட முஸ்லிம் நிறுவனங்கள், முஸ்லிம் ​சமுதாயத்தின் புத்திஜீவிகள் மற்றும் செயற்பாட்டாளர்களை உள்ளிட்ட நாடளாவியரீதியான ஒரு கூட்டமைப்பாகிய தேசிய ஷூறா (ஆலோசனைச்) சபையைத் தடைசெய்யுமாறு பொது பல சேனா விடுத்த வேண்டுகோளையிட்டு நாம் வியப்படையவில்லை. பொய்களை அடிப்படையாகக் கொண்ட பகைமையைப் பரப்பி இந்த நாட்டின் சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களிடையே பல நூற்றாண்டுகளாக நிலவி வந்த சமாதானத்தையும், ஒற்றுமையையும், சகவாழ்வையும் இல்லாதொழிப்பதற்கு அரும்பாடுபடும் ஒரு அமைப்பே பொது பல சேனா என்பதை அவ்வமைப்பின் இந்த வேண்டுகோள் தெளிவாகக் காட்டுகின்றது.

இலங்கை துண்டாடப்படு, “தமிழ் ஈழம்” ஒன்றை உருவாக்குவதற்குப் பெரும் முயற்சி செய்த நோர்வே நாட்டின் பூரண அனுசரனையுடன் 2011ஆம் ஆண்டில் அந்நாட்டுக்கு விஜயத்தை மேற்கொண்ட பொது பல சேனா, அங்கு புலம் பெயர்ந்த தமிழர் அமைப்புகளையும், நோர்வே நாட்டு இஸ்லாமிய வெறுப்புணர்வாளர்களையும் சந்தித்ததைத் தொடர்ந்து, இன முரண்பாடுகளின் ஊடாக இலங்கையைச் சீர்குலைப்பதை நோக்காகக் கொண்ட முஸ்லிம் விரோத விஷமத்தைப் பரப்புவதற்கான வஞ்சகமான செயற்திட்டம் ஒன்றை பொறுப்பேற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. இதன் மூலம் நோர்வே நாட்டின் பின்னணியில் உள்ள மேற்குலக சக்திகள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பயன்பெறுவர். இந்த நாட்டில் பொது பல சேனா மேற்கொள்ளும் குற்றச் செயல்களுக்கெல்லாம் வருந்தத்தக்கவாறு இலங்கை பதில் கூற வேண்டிய நிலையில் உள்ளது.

Thursday, June 13, 2013

இலங்கை முஸ்லிம்கள் மாடு, ஆடுகளை அறுப்பது உயிர்வதையா..?

(இலங்கை மக்களுக்கு மத்தியில் இனத் துவேஷத்தைப் பரப்புவோர் இஸ்லாம் பற்றியும், முஸ்லிம்கள் பற்றியும் சில குற்றச் சாட்டுக்களை முன் வைத்து பரப்பி வருகின்றார்கள். அதற்குறிய பதிலை நாம் தொடராக வெளியிட்டு வருகின்றோம். அதன் அடிப்படையில் இருதின பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட முஸ்லிம் அரசியல் அப்பாவித்தனமானதா? என்ற கட்டுரைக்கான பதிலை நாம் வெளியிட்டிருந்தோம். அதன் தொடரில் குர்பானி தொடர்பாக வைக்கப்படும் குற்றச் சாட்டுக்களுக்கு இப்போது பதில் தருகின்றோம்).

இஸ்லாமியர்களின் வாழ்வியல் முறையில் குர்பானி – இறைவனுக்காக அறுத்துப் பலியிடுதல் என்பதும் ஒன்றாகும். இப்றாஹீம் – ஆப்ரஹாம் என்ற நபியின் தியாகத்தை நினைவு கூறும் விதமாக புனித ஹஜ்ஜுடைய காலத்தில் முஸ்லிம்கள் ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை அறுத்து பலியிடுவார்கள். இது இறைவனின் கட்டளையை செயல்படுத்தும் முறையாகும். நிலைமை இப்படியிருக்க தற்போதைய இலங்கையில் இது தொடர்பாக இரண்டு விதமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
குர்பானி என்ற பெயரில் முஸ்லிம்கள் பிரானிகளை உயிர் வதை செய்கின்றார்கள். குர்பானிக்காக ஒவ்வொரு வருடமும் வெளிநாட்டில் இருந்து சுமார் 30 கோடி அளவுக்கான பணம் இவர்களுக்கு கொடுக்கப்படுகின்றது.

இந்த இரண்டு விமர்சனங்களுக்கும் அறிவார்ந்த ரீதியில் நாம் பதில்களை தரவிருக்கின்றோம்.

குர்பானிக்காக பிராணிகளை அறுப்பது உயிர்வதை செய்வதாக ஆகுமா?

இந்தக் குற்றச்சாட்டுக்குறிய பதிலைப்