This blog contains so many different types of articles, downloadable PDF books and some other links
Showing posts with label Peace. Show all posts
Showing posts with label Peace. Show all posts
Monday, December 28, 2015
Saturday, July 12, 2014
பொதுபல சேனாவுக்கு தேசிய ஷூறா சபையின் பதில்
தரிக் மஹ்மூத் - தலைவர்
தேசிய மட்ட முஸ்லிம் நிறுவனங்கள், முஸ்லிம் சமுதாயத்தின் புத்திஜீவிகள் மற்றும் செயற்பாட்டாளர்களை உள்ளிட்ட நாடளாவியரீதியான ஒரு கூட்டமைப்பாகிய தேசிய ஷூறா (ஆலோசனைச்) சபையைத் தடைசெய்யுமாறு பொது பல சேனா விடுத்த வேண்டுகோளையிட்டு நாம் வியப்படையவில்லை. பொய்களை அடிப்படையாகக் கொண்ட பகைமையைப் பரப்பி இந்த நாட்டின் சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களிடையே பல நூற்றாண்டுகளாக நிலவி வந்த சமாதானத்தையும், ஒற்றுமையையும், சகவாழ்வையும் இல்லாதொழிப்பதற்கு அரும்பாடுபடும் ஒரு அமைப்பே பொது பல சேனா என்பதை அவ்வமைப்பின் இந்த வேண்டுகோள் தெளிவாகக் காட்டுகின்றது.
இலங்கை துண்டாடப்படு, “தமிழ் ஈழம்” ஒன்றை உருவாக்குவதற்குப் பெரும் முயற்சி செய்த நோர்வே நாட்டின் பூரண அனுசரனையுடன் 2011ஆம் ஆண்டில் அந்நாட்டுக்கு விஜயத்தை மேற்கொண்ட பொது பல சேனா, அங்கு புலம் பெயர்ந்த தமிழர் அமைப்புகளையும், நோர்வே நாட்டு இஸ்லாமிய வெறுப்புணர்வாளர்களையும் சந்தித்ததைத் தொடர்ந்து, இன முரண்பாடுகளின் ஊடாக இலங்கையைச் சீர்குலைப்பதை நோக்காகக் கொண்ட முஸ்லிம் விரோத விஷமத்தைப் பரப்புவதற்கான வஞ்சகமான செயற்திட்டம் ஒன்றை பொறுப்பேற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. இதன் மூலம் நோர்வே நாட்டின் பின்னணியில் உள்ள மேற்குலக சக்திகள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பயன்பெறுவர். இந்த நாட்டில் பொது பல சேனா மேற்கொள்ளும் குற்றச் செயல்களுக்கெல்லாம் வருந்தத்தக்கவாறு இலங்கை பதில் கூற வேண்டிய நிலையில் உள்ளது.
Tuesday, August 20, 2013
ஐக்கிய சமூகத்தை காணத் துடிக்கும் தலைவர்

Original article is from Jaffnamuslim (நாகூர் ழரீஃப்)
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தற்போதையதலைவர் அஷ் ஷைக் எம்.ஐ.எம். ரிஸ்வி முஃப்தி (பின்னூரி) அவர்கள் பற்றி,சென்ற ஷவ்வால் மாதத்துக்கானதலைப்பிறைதீர்மானத்தின் பின்னர், பலரும் முறையற்றவிதங்களில் முகநூல் போன்ற இணையத்தளங்களில் விமர்சித்துவருகின்றனர்.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவுக்கு ஒருயாப்பு உண்டு. அந்த யாப்பின் அடிப்படையிலேயே அதன் நிர்வாகத் தெரிவுகளும் இடம் பெறும். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர், மேற்படி யாப்பின் பிரகாரம் ஜம்இய்யாவின் மத்திய சபையில் இருந்து ஏகமனதாகத் தலைமைப் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Saturday, March 16, 2013
Subscribe to:
Posts (Atom)

