Showing posts with label Muslims. Show all posts
Showing posts with label Muslims. Show all posts

Saturday, July 5, 2014

அப்பாவி முஸ்லிம்களை தாக்கிய சிங்கள காடையர்களை விட்டு விட்டு, தாக்கப் பட்ட முஸ்லிம்களிடம் ஆயுதங்களை தேடுகிறார்கள்...!

ஆயுதங்களை கண்டுபிடிக்க அளுத்கம, பேருவளை, தர்காநகர் பகுதிகளில் தேடுதல்
Posted: 01 Jul 2014 01:20 PM PDT
அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் மறைத்து வைக்கப்பட்டு ள்ளதாக சந்தேகிக்கப்படும் ஆயுதங்களை கண்டுபிடிப்பதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையுடன் இணைந்து பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலு வலகம் தெரிவித்தது.
அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் அண்மையில் இடம்பெற்ற மோதல்களில் பல கடைகள், வீடுகள் என்பன நாசமானதோடு பலர் காயமடைந்தனர் நாசகார வேளைகளுக்கு பயன்படுத்தப்பட்ட பெற்றோல் குண்டுகள், கைக்குண்டுகள், இரும்பு தடிகள் மற்றும் ஆயுதங்களை பொலிஸ் நிலையங்களிலோ பொதுவான இடமொன்றிலோ கையளிக்குமாறு பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் கடந்த வாரம் அறிவித்தனர்.
உரிய காலத்தினுள் ஆயுதங்களை கையளிப்பவர்களுக்கு எதிராக எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்ப டாது எனவும் பொலிஸார் அறிவித் திருந்தனர்.
ஆயுதங்களை கையளிக்க வழங்கப்பட் டிருந்த காலக்கெடு முடிவடைந்துள்ள நிலையில் அளுத்கம, பேருவளை, தர்காநகர் பகுதிகளில் தேடுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலே உள்ள செய்தி jaffnamuslim இணைய தளத்தில் வெளியானது.

Wednesday, May 7, 2014

இலங்கையில் முஸ்லிம் அடிப்படை வாதிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை

இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுவதாக கூறப்படுவதில் உண்மையில்லை. பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டம்.

இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய முஸ்லிம் அடிப்படைவாதிகள் இல்லை. உறுதியாகக் கூறுகிறார் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் - பிரிகேடியர் ருவான் வணிகசூரிய.

வீரகேசரி May, 6, 2014

மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள படத்தைப் பாருங்கள். 


Wednesday, April 30, 2014

இஸ்லாத்தை தழுவியதற்காக ஒருபோதும் நான் வருந்தியதில்லை

முஸ்லிம்கள் (மக்காவிலுள்ள) கஃபாவுக்கு குனிந்து வணக்கம் செலுத்துகிறார்கள் என்றும், அது தான் அவர்களுடைய பொய்யான கடவுளின் மையப்பகுதி என்றும் எங்களுக்குப் போதிக்கப்பட்டு வந்தது. அதையே நாங்களும் உண்மை என்றும் நம்பி வந்தோம். எனவே நான் முஸ்லிம்களின் பிரார்த்தனை (வணக்க முறை) என்பது இறைவனாலேயே கற்றுக் கொடுக்கப்பட்டது என்பதை அறிந்த போது மீண்டும் ஆச்சர்யத்திற்குள்ளானேன்.

மதங்களைப் பற்றிய எட்டு வருடங்கள் எனது ஆரய்ச்சிக்குப் பிறகு, அந்த வார இறுதியில் இஸ்லாம் என்பது ஒரு உண்மையான மார்க்கம் என்று நான் அறிந்துக் கொண்டேன். – Sue Watson, Professor, Pastor, Church Planter and Missionary (முன்னாள் கிறிஸ்தவ மத போதகர் மற்றும் மிசனரி)

உனக்கு என்ன ஆயிற்று? – இது தான் நான் இஸ்லாத்தை தழுவிய பிறகு என்னுடைய முன்னாள் நன்பர்களையோ அல்லது வகுப்பு தோழிகளையோ, அல்லது என்னுடன் பணி செய்த சக பாதிரியார்களையோ சந்திக்கும் போது என்னிடம் கேட்கப்பட்ட கேள்வியாகும். நான் அவர்களைக் குறை கூற முடியாது. ஏன் என்றால் நான் கூட மதமாறுவதை விரும்பாதவளாக இருந்தேன்.

முன்னதாக நான் ஒரு பேராசிரியையாகவும், கிறிஸ்தவ மதத்தைப் போதனை செய்பளாகவும், கிறிஸ்தவத்தைப் பரப்புகின்ற மிஷனரியாகவும் இருந்தேன். சுருங்கக் கூறவேண்டுமெனில், மத அடிப்படைவாதி என்று யாரையாவது கூறவேண்டுமானால் என்னைக் கூறலாம்.

நான் அப்போது ஐந்து மாதங்களுக்கு முன்பு தான் கத்தோலிக்க மத குருமார்கள் பயிற்சி பெறும் ஒரு உன்னதமான பயிற்சி நிறுவனத்திலிருந்து கடவுளைப் பற்றிய படிப்பிற்கான என்னுடைய முதுகலைப் பட்டப் படிப்பை முடித்திருந்தேன்.

Thursday, January 2, 2014

அமெரிக்காவில் முஸ்லிம்கள் – கொலம்பஸ்சுக்கு முன்னரும் பின்னரும்…I

முஸ்லிம்கள் அமெரிக்காவிற்கு வந்தது இருபதாம் நுற்றாண்டிலோ அல்லது பத்தொம்பதாம் நூற்றாண்டின் இறுதியிலோதான் என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா?
அப்படியென்றால் இன்று முதல் அதை மாற்றிக்கொள்ளுங்கள். ஆம். கொலம்பஸ் அமெரிக்காவிற்கு வருவதற்கு முன்னரே முஸ்லிம்கள் அமெரிக்காவில் இருந்துள்ளனர். வரலாற்றில் மறக்கப்பட்ட/மறைக்கப்பட்ட உண்மைகளைத்தான் இந்த பதிவில் காணவிருக்கிறோம்.

மேற்கொண்டு செல்லும் முன் ஒரு சிறு தகவல். அமெரிக்காவில் வாழ்கின்ற பெரும்பாலான முஸ்லிம்கள் தங்களை அமெரிக்க முஸ்லிம்கள் என்று கூறுவதில்லை, முஸ்லிம் அமெரிக்கர்கள் என்று தான் கூறிக்கொள்கின்றனர். அதனால் இந்த பதிவு முழுவதும் அந்த பதமே குறிப்பிடப்படுகிறது.
மேற்கொண்டு பதிவிற்கு…
முஸ்லிம் அமெரிக்கர்களின் வரலாற்றை அலசும்போது கொலம்பஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய இரண்டும் தவிர்க்க முடியாத பெயர்களாகின்றன. இந்த இரண்டும் சார்ந்த முஸ்லிம் அமெரிக்கர்களின் வரலாறு மிக விநோதமானது.

இஸ்லாம் மிகவேகமாக பரவிய காலம். ஸ்பெயினில் முஸ்லிம்களின் ஆட்சி 711 ஆம் ஆண்டு தொடங்கியது, 1492ல் அது முடிவுற்றது. முஸ்லிம்களின் கையில் இருந்த கடைசி நகரமான க்ரனடாவும் (Granada) அந்த ஆண்டில் வீழ்ச்சியடைந்தது. ராணி இசபெல்லாவிடம் ஸ்பெயினின் ஆட்சி அதிகாரம் வந்தது. ஸ்பெயின்வாழ் முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்கும் மிக மோசமான தருணம் அது.
ஆதாவது அவர்கள் கிருத்துவத்தை ஏற்றுக்கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள், ஏற்காவிடில் மிகப்பெரும் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டார்கள். இப்படி கொடுமைப்படுத்தப்பட்டு இறந்த முஸ்லிம்கள் ஏராளம். இந்த தருணத்தில் தான் வட ஆப்பிரிக்காவில் இருக்ககூடிய இமாம்களிடமிருந்து ஸ்பெயின் முஸ்லிம்களுக்கு ஒரு தகவல். அதாவது கொடுமைகளிருந்து தப்பிக்க தாங்கள் கிருத்துவத்தை ஏற்றுக்கொண்டதாக அரசாங்கத்திடம் அறிவித்துவிடுவது, ஆனால் மறைவில் முஸ்லிம்களாக தொடர்வது. முஸ்லிம்களும் அதை செய்தனர்.
இவ்வாறு செய்தவர்களும் இவர்களது சந்ததியினரும் “மொரிஸ்கோஸ்” (Moriscos) என்று அழைக்கப்பட்டார்கள்.

Sunday, March 17, 2013

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள பேரினவாதம்



(தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்)

சிங்கள பேரினவாதம் இலங்கை முஸ்லிம் களைக் காவு கொண்டு வருகின்றது. இலங்கை தேசத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான இனவாத செயல்பாடுகளை இலங்கை அரசுகளே முன்னெடுத்த போது சட்டத்தின் மீது நம்பிக்கை இழந்த இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அது பெரும் போராக வெடித்து பெரும் மனித அவலங்களுக்குப் பின்னர் ஓய்ந்துள்ளது.

இந்நிலையில் இலங்கை அரசும் பேரினவாதி களும் படிப்பினைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாற்றமாக இப்போது முஸ்லிம்களை அடக்கி ஒடுக்கும் நோக்குடன் பேரினவாதிகளும் இலங்கை அரசும் செயல் பட்டு வருவது ஆச்சரியமானதாகும்.

Sunday, January 6, 2013

இலங்கை முஸ்லிம்கள் தமது தாய்நாட்டிற்கு ஆற்றிய பங்களிப்பு - ஜும்ஆ பயானில் விளக்கம்

(கொள்ளுப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசலில்
04-01-2013 வெள்ளிக்கிழமை அன்று அஷ்ஷைக்
ரீ.ஹைதர் அலி (அல்-ஹலீமி) ஆற்றிய ஜும்ஆ
குத்தபா இது)

எம்மில் சில சகோதரர்கள் ' நாம் அந்நிய நாட்டில் வாழக் கூடியவர்கள் எனக் கூறிக் கொண்டு தம்மையே (முஸ்லிம்கள்) தாழ்த்திக் கொள்கின்றனர். இது பிழையான கூற்றாகும். நாம்
இந்தப் பூமியிலே தான் பிறந்தோம். இன்ஷா அல்லாஹ் இதிலே இறந்தால் இந்தப் பூமியிலேதான் அடக்கம் செய்யப்படுவோம். எனவே இந்தப் பூமி எமக்கும் சொந்தமானது. இது எமது தாய் நாடு. இந்நாட்டை நாம் நேசிக்க வேண்டும்' என அஷ்-ஷைக் ரீ.ஹைதர் அலி அல்- ஹலீமி தெரிவித்தார்கள். அவர் தமது பிரசங்கத்தில் மேலும் தெரிவித்ததாவது, இன்று சில தீய சக்திகள் முஸ்லிம்களின் ஒற்றுமையையும், அமைதியையும் சீர்குலைக்க முயற்சிக்கின்றனர்.
மட்டுமின்றி முஸ்லிம்களை தேசத் துரோகிகளாகவும், பயங்கரவாதிகளாகவும் சித்தரிக்க முனைகின்றனர். இதனைச் செய்வது சில
விஷமிகளே அன்றி எல்லா பௌதர்களும் அல்லர். மேலும் வரலாற்றில் ஒரு காலமும் முஸ்லிம்கள் இந்நாட்டை பிடிக்கவோ அல்லது இதனை நாம் ஆட்சி செய்ய வேண்டும் என்றோ முயற்சித்தது கிடையாது. மாறாக இந்நாட்டை பௌத்தர்கள் ஆட்சி செய்ய வேண்டுமென்றே விரும்பினர். அதற்காக தம்மாலான முயற்சிகளை முழமையாக மேற்கொண்டனர். அவைகளுக்கு கீழ்வரும் வரலாற்றுக் குறிப்புகள் சான்றாகும். 1. கண்டிய மன்னன் சார்பாக முஸ்லிம்கள் ஒல்லாந்தரின் உதவியை நாடினர் என்ற ஒரே காரணத்துக்காகவே 1642ல் மாத்தறையில் 200 முதல் 300 வரையிலான ஆண்களைக் கொலை செய்ததோடு பெண்களையும் பிள்ளைகளையும் சிறைப்படுத்தினர். 2. போர்த்துக்கீசரை துரத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காகவே அல்லது ஒரு நன்றிக்கடனாகவே மன்னன் ஸ்ரீ விக்ரம இராஜசிங்கன் அக்குரனையில் காணி வழங்கி முஸ்லிம்களைக் குடியேற்றினான். 3. கண்டி மன்னன் ஒல்லாந்தரைத் துரத்துவதற்காக உஸ்மான் லெப்பே மௌலா முஹாந்திரம் என்பவரை கர்நாடகா நவாப் முஹம்மத் அலியிடம் தூதனுப்பினார். 4. தமக்கு சுதந்திரமளிப்பதாக அளித்த வாக்குருதியை நிறைவேற்றுமாறு கோரிஅரசாங்க சபை இரண்டாம் உலக யுத்தத்தின் பின் கோரிக்கை விடுத்த போது 3 முஸ்லிம் உறுப்பினர்களும் எவ்வித நிபந்தனையும் விதிக்காது ஆதரவு நல்கினர். 5. இப்பிரேரணை பற்றி D.P. ஜாயா அரசாங்க சபையில் பின்வருமாறு உரையாற்றினார் ' இனரீதியான கோரிக்கைகளையும் இலாபங்களையும் அடைவதைவிட சுதந்திரம் பெறுவது ஒரு முஸ்லிமுக்கு மிகவும் முக்கியமானது. மக்களின் பிறப்புரிமையான சுதந்திரத்தை அனுபவிப்பதற்கு குறுக்கே நிற்க நான் விரும்பவில்லை.' 6. இதன்பின உரையாற்றிய swrd பண்டாரநாயக்கா முஸ்லிம் உறுப்பினரின் ஆதரவுக்காக தனது சமூகத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும், முஸ்லிம்களின் நியாயபூர்வமான எந்தக் கோரிக்கைகளையும் சீர்தூக்கிப் பார்க்க தான் சித்தமாக இருப்பதாகவும் கூறியமை நோக்கத்தக்கது. 7. 1939ல் நடைபெற்ற அகில இலங்கை அரசியல் மாநாட்டில் சட்டசபை உறுப்பினராகக் கடமையாற்றிய மாகான் மாகார் உரையாற்றும்போது, பெரும்பான்மைச் சமூகம் சிறுபான்மை நிலைக்குத் தள்ளப்படுவதை நான் விரும்பவில்லை.இந்நாட்டை சிங்களவர்கள் ஆட்சி செய்வதை நான் எதிர்க்கவில்லை என்பதை நான் என் மனசாட்சியை சானறாக வைத்துக் கூறுகிறேன்' எனக்கூறினார். 8. இதே கூட்டத்தில் உரையாற்றிய அப்போதைய இளம் அரசியல்வாதி பதீஉத்தீன் மஹ்மூத் 'எமது நாட்டுக்குப் பூரண சுதந்திரம் கோருவதில் சிங்கள மக்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன்.' எனக் கூறினார். சேவை அடிப்படையிலும் எம் நாட்டு சிங்கள மன்னர்களுக்கு முஸ்லிம்கள் மிக நம்பிக்கையாகவும், தமது அந்தரங்க விடயங்களை அறிந்தவர்களாகவும் இருந்திருக்கின்றனர். குறிப்பாக வைத்தியத் துறையில் முஸ்லிம்கள் ஆற்றிய பணிக்காக வேண்டி அன்றைய மன்னர்கள் முஸ்லிம்களுக்கு சன்மானங்கள் கொடுத்து கௌரவித்தனர். * கண்டியின் அரச நிர்வாகத்திலும் முஸ்லிம்கள் பங்குகொண்டிருந்தனர். கண்டியில் மக்கள் செய்த தொழில்களை அடிப்படையாகக் கொண்டு பல திணைக்களங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அவை பந்த
என அழைக்கப்பட்டன. இராஜ சிங்கனின் காலத்தில் (1747 – 1781) ஷேஹ் ஆலிம் என்பவர் மடிகே பந்த எனும் திணைக்களத்துக்குப் பொறுப்பாக இருந்தார். அவர் மடிகே பந்த நிலமே என அழைக்கப்பட்டார். * இதேபோல முகாந்தரம், லேகம், கிராமத்தலைவர் எனும் பதவிகளையும் முஸ்லிம்கள் வகித்தனர். கண்டிய அரசின் வைத்தியத் துறைத்தலைவராகவும் முஸ்லிம்கள் பணியாற்றியுள்ளனர். இவர்கள் பெஹேத்கே முகாந்திரம் நிலமே என்றழைக்கப்பட்டனர். ராஜபக்ஷ வைத்தய திலக கோபால எனும் குடும்பப் பெயர் கொண்டழைக்கப்பட்ட முஸ்லிம் வைத்தியருக்கு கண்டி மன்னன் 1747ல் உடுநுவரையில் நிலம் வழங்கி கௌரவித்தான். * மற்றொரு வைத்தியரான பூவலிகட வெதராலகே அபூபக்கர் புள்ளே என்பவருக்கு 1786ல் தஸ்கரையில் நிலங்களை வழங்கினான். * கண்டி மன்னனின் படையில் 2ம் இராஜசிங்கனின் காலத்தில் (1635 – 1687) இருந்து முஸ்லிம்கள் இராணுவ வீரர்களாகக் கடமையாற்றியுள்ளனர். 1810ல் 250 முஸ்லிம் வீரர்களும் 200 மலாய் வீரர்களும் கண்டி மன்னனின் படையில் பணியாற்றினர். நாம் ஏன் பல தசாப்த கால நிகழ்வுகளுக்குக்குச் செல்ல வேண்டும்? இன்னும் ஒரு வருடம் கூட நிறைவு பெறாத நிகழ்வுகளும் உள்ளன. அதாவது இந்நாட்டுக்கும் இந்நாட்டு இறைமைக்கு மட்டுமல்லாதுஇந்நாட்டு தலைமைக்கும் ஆபத்து வரப் போகிறது என்பதற்காக, எமது நாட்டு முஸ்லிம்களின் தலைவர்களான அ.இ.ஜ.உ வின் தலைவர் உற்பட உபதலைவரும் ஐ. நா சபை சென்று தமது நாட்டுக்கும் நாட்டுத் தலைவருக்கும்
ஆதரவு வழங்குமாறு பரிந்துரை பேசச் சென்றதை இந்நாட்டு முஸ்லிம்கள் இன்னும் மறக்கவில்லை. பெரும்பான்மை சமூகமும் மறக்க முடியாது. ஆனால் நாட்டினதும், நாட்டு மக்களினதும் முன்னேற்றத்திற்காக பாடுபடும் இந்தத் தலைவர்களை பயங்கரவாதிகள் என சித்தரித்து எழுதுவது முஸ்லிம்களின் உள்ளங்களைப் புண்படுத்தியுள்ளது எனவும் தமது பிரசங்கத்தில் குறிப்பிட்டார்.

-Thanks JaffnaMuslim-

Saturday, January 5, 2013

இஸ்ரேல் பிறந்தது எப்படி...?


அவர்கள் சிந்தித்தனர். அவர்கள் சாமானிய மனிதர்கள் அல்லர். உலகின் மிகப்பெரிய கந்து வட்டிக்காரர்கள் . மகா மகா கோடீஸ்வரர்கள் அமெரிக்க அரசிற்கே அவர்கள் கடன் கொடுப்பவர்கள், ஆம். அவர்கள் யூதர்கள். அவர்களுடைய இனத்திற்கென்று ஒரு பூமி இல்லை. இது தங்கள் தேசம் என்று சொல்லிக் கொள்ள அவர்களுக்கு ஒரு நாடு இல்லை. உலக வரைபடத்தில் முகவரி இல்லை. அவர்கள் தங்களுக்கு இனி ஒரு விலாசம் தேடிக் கொள்வது என்று அந்த சூதாட்ட விடுதியில் முடிவு கண்டனர். அவர்களின் தலைவன் தியோடர்ஹெட்நெல் என்பவன்.


அவர்கள் ‘யூததேசிய நிதி’ என்று வலிமை மிக்க ஓர் பெட்டகத்தைத் திறந்தனர். அங்கே கூடியவர்களே ஆளுக்குப் பல்லாயிரம் கோடி டாலர் என்று நிதி அளித்தனர். இது ஒரு நூற்றாண்டிற்கு முன்னரே நடந்த நிகழ்வு.


இனி அவர்கள் தங்கள் இனத்திற்கென்று ஒரு தேசத்தை உருவாக்க வேண்டும். எங்கே உருவாக்குவது? எப்படி உருவாக்குவது ?


அவர்களுடைய வேதத்திற்கு பெயர் ‘தவுராத்.’ பத்துக் கட்டளைகள் என்றும் கூறுவார்கள். தங்கள் தேசம் எங்கே இருக்கிறது என்பதை அந்த வேதம் சுட்டிக் காட்டியிருப்பதாக கற்பிதம் செய்தார்கள். இப்படித் தான் இஸ்ரேல் என்ற நாட்டிற்காக ஒரு கரு உருவாக்கப்பட்டது.


இதனை முதன் முதலாக எதிர்த்துக் குரல் எழுப்பியவர் அண்ணல் காந்தியடிகள் தான். தங்கள் தேசம் இருந்த இடம் என வேதம் வாக்களித்திருக்கிறது என்று கூறி எந்த நாட்டையும் ஆக்கிரமிக்கக் கூடாது. அப்படி இஸ்ரேல் என்று ஒரு நாடு உருவாக்கப் படுவதை எதிர்க்கிறோம். அதனையும் மீறி அப்படி ஒரு நாடு உருவாக்கப்படுமானால் அதனை உலகம் அங்கீகரிக்கக் கூடாது. கண்டிப்பாக இந்தியா அங்கீகரிக்காது என்று அண்ணல் காந்தியடிகள் தெரிவித்தார்.


ஆனாலும், வட்டிக்காக கடன் பெற்றவளின் கண்களையே கேட்கின்ற அந்த யூத மகாப்பிரபுக்கள் ஜோர்டான் எல்லையை ஓட்டிய பாலஸ்தீனப் பகுதிக்குள் காலடி பதித்தனர்.


அரபு மக்கள் ஒரு வகையினர் நமது நாடோடி மக்களைப் போல் வசிக்கும் பழங்குடி மக்கள் . அவர்களுக்கு ஜோர்டான் எல்லையோரம் பாலஸ்தீனப் பரப்பிற்குள் சொந்த நிலங்கள் இருந்தன. அவைகள் ரோஜா தோட்டங்களோ, பேரீச்சை தோட்டங்களோ அல்ல. கள்ளிச் செடி மேலும் வானம் பார்த்த பூமி.


அந்த நிலங்களை யூத மகாபிரபுக்கள் வாங்கினர். விலை என்ன தெரியுமா? யானை விலை, குதிரை விலை என்பார்களே அதற்கும் அதிகம்தான். அப்படி வாங்கப்பட்ட இடங்களில் யூதர்கள் குடியமர்த்தப்பட்டனர்.


அப்போது அண்டையிலுள்ள அரபு நாடுகளெல்லாம் அவர்களுக்கு அனுதாபமாகவே இருந்தன. யூத இனத்தையே பூண்டோடு ஒழிப்பது என்பது ஹிட்லரின் லட்சியம். அதற்காக அவன் படை கொண்டு சென்ற நாடுகளிலெல்லாம் முதன் முதலாகச் செய்த கைங்கரியம் யூத மக்களை அழித்ததுதான். தப்பித்த யூதர்கள் அடைக்கலம் தேடி உலகம் முழுமையும் ஓடிக்கொண்டிருந்தனர். 


இது அண்மைக் கால வரலாறு. ஆனால், சென்ற நூற்றாண்டின் துவக்கத்திலேயே ஷியாவும், ஐரோப்பிய நாடுகளும் யூதர் என்றாலே முகம் சுளித்தனர். அவர்களை தண்டிக்கப்பட்ட மக்களாகவே கருதினர். அப்படி சரித்திரத்தால் சபிக்கப்பட்ட மக்கள் இங்கேயாவது இளைப்பாறட்டுமே என்று உண்மையில் அரபு மக்கள் அவர்கள் மீது இரக்கம் கொண்டனர். 


அவர்கள் உருவாக்கிக் கொண்ட குடியிருப்பு நாளை தங்கள் எல்லைகளையே தீண்டப்போகும் மலைப்பாம்பு என்பதனையும் அதற்கு இரையாகப் போகும் மான்குட்டிகள்தான், அரபு நாடுகள் என்பதனையும் அப்போது அவர்கள் உணரவில்லை. அந்த மலைப்பாம்பு மெள்ள மெள்ள நெளியத் தொடங்கியது. தமது நீளத்தை காட்ட தொடங்கியது. சுற்றிலுமுள்ள அரபு நாடுகளுக்குள் தமது வாலினை நீட்டியது. அந்த நிலமெல்லாம் யூத சமுதாயத்திற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உரிமையாக இருந்தது. 


எனவே, இப்போது தங்கள் மூதாதையர் விட்டுச் சென்ற பரம்பரைச் சொத்தில் தங்களுக்குப் பாத்தியம் உண்டு என்று யூதர்கள் கோரிக்கை வைக்கவில்லை. அபகரிக்கவேத் தொடங்கினர்.


முதல் உலகப் போருக்குப் பின்னர் பாலஸ்தீனம் பிரிட்டனின் ஆளுகைக்குள் வந்தது. பாலஸ்தீனத்தில் யூதர்கள் தமது எல்லைகளை விரிவுபடுத்துவதை பிரிட்டன் ஊக்கப்படுத்தியது. காரணம் அந்த நாட்டை விட்டு வெளியேறினாலும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு மத்தியில் -அரபு நாடுகளுக்கு மத்தியில் ஒரு ஏவல் பிராணியை வளர்த்து விட வேண்டும் என்பதில் குறியாக இருந்தது. பின்னர் பிரிட்டனுக்கு துணையாக அமெரிக்காவும் வந்தது.


பாலஸ்தீனத்திற்குள்ளேயே யூதர்களின் குடியிருப்புக்கள் பெருகின. பின்னர் இணைந்தன. தங்கள் பூமிக்குள் ஓர் கள்ள தேசம் உருவாவதை அப்போதுதான் பாலஸ்தீன மக்கள் நன்றாக உணரத் தொடங்கினர். எனவே, 1920ம் ஆண்டு முதன்முதலாக பாலஸ்தீன மக்களுக்கும், யூதர்களுக்கும் இடையே நேரடி மோதல்கள் வெடித்தன. 


அடுத்த ஆண்டே இன்னொரு இனக்கலவரம். 1929 ம் ஆண்டு நடந்த மோதல் பயங்கரமானது. `ஹெப்ரான் படுகொலை’ என்று வர்ணிக்கப்பட்ட அந்த வெறித்தனமான மோதலில் ஏராளமான பாலஸ்தீனிய மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். காரணம் யூதர்கள் வலிமை வாய்ந்த ஆயுதங்களை பெற்றிருந்தனர். அத்தனையும் அமெரிக்க தயாரிப்புத் தான்.


1936ம் ஆண்டு பாலஸ்தீன மக்கள் யூத ஆதிக்கத்தை எதிர்த்து வெகுண்டெழுந்தனர். அந்த எழுச்சி 1939 ம் ஆண்டு வரை பொங்கும் எரிமலையாய் குமுறிக்கொண்டிருந்தது. அதே சமயத்தில் யூதக் குடியிருப்புக்களுக்கு உதவியாக பிரிட்டனும், அமெரிக்காவும் பெருமளவில் ஆயுத உதவிக்கள் செய்தன. கரங்களாலும், கவண் கற்களாலும் பாலஸ்தீனிய இளைஞர்கள் எவ்வளவு காலம் போராட முடியும்?


பாலஸ்தீனத்திற்குள் யூதர்களுக்கு என்ன உரிமை என்பதனை தீர்மானிக்க பல்வேறு கமிஷன்களை பிரிட்டன் அமைத்தது. கடைசியாக இந்தப் பிரச்சனையை ஐ.நா மன்றத்திற்கு கொண்டு சென்றது இப்படி. பாலஸ்தீனத்தின் இதயத்தைப் பிளந்து உருவாகிவரும் இஸ்ரேலைஒரு நாடாக அங்கீகரிப்பது என்பதுதான் தீர்வாகும். 


எப்படி நமது துணைக் கண்டத்தை இந்தியா - பாகிஸ்தான் என்று இரு நாடுகளாக உருவாக்கியதோ, அதே போல பாலஸ்தீனம் அதற்குள் இஸ்ரேல் என்ற கோட்பாட்டை ஐ.நா மன்றத்தில் பிரிட்டன் முன்மொழிந்தது.


இந்த நிலையில்தான், இன்னொரு தேசத்தைத் துண்டாடி ரத்தக்கோடுகளால் இஸ்ரேல் என்று ஒரு நாட்டை உருவாக்குவதை உலகம் ஏற்கக்கூடாது என்று அண்ணல் காந்தியடிகள் அறைகூவல் விடுத்தார்.


ஆனாலும், அரபு மக்களின் தாயகமான பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்று ஒரு நாடு உருவாக்கப்படுவதை ஐ.நா மன்றம் அங்கீகரித்தது. அந்த மன்றம் அமெரிக்கா ஆட்டி வைக்கும் பொம்மை என்பதனை எத்தனையோ முறை மெய்பிக்கவும் செய்திருக்கிறது.


1947 ம் ஆண்டிற்கு முந்தைய உலக வரை படத்தை பாருங்கள். இஸ்ரேல் என்ற நாடே இடம் பெற்றிருக்காது. அதன் பின்னர் 


வெளியிடப்பட்ட உலக வரை படத்தைப் பாருங்கள் இன்றைக்கும் ரத்தம் சொட்டிக் கொண்டிருக்கிற எல்லைகள் தெரியும். அதற்குள் இருக்கின்ற நாடுதான் இஸ்ரேல்.


‘இஸ்ரேல் என்ற நாட்டை இந்தியா அங்கீகரிக்கவில்லை. பாலஸ்தீனம் என்பது ஒரே பூமிதான். அதுதான் நாடு. அதைத்தான் அங்கீ கரிக்கிறோம்’ என்று பிரதமர் ஜவஹர்லால் நேரு முரசறைந்தார். இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலம் வரை இஸ்ரேல் அங்கீகரிக்கப்படவில்லை. பாலஸ்தீன மக்களின் தானைத் தலைவராக விளங்கிய யாசர் அராபத்தை அழைத்து இந்தியா கவுரவித்தது.


உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானி ஐன்ஸ்டீன் ஓர் யூதர். உருவாகும் இஸ்ரேல் நாட்டிற்கு அவரே முதல் பிரதமராக இருக்க வேண்டும் என்பதை யூதர்கள் மட்டுமல்ல அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளும் விரும்பின. இன்னொருவர் பூமியை ஆக்கிரமித்து உருவாக்கும் ஒரு நாட்டிற்கு தான் பிரதமராக இருக்க முடியாது என்று அறிவித்து ஐன்ஸ்டீன் விலகி விட்டார்.


ஆனாலும், 1948ம் ஆண்டு முதல் இஸ்ரேல் என்ற நாடு செயல்படத் தொடங்கியது. தேசமில்லாது அலைந்தவர்கள் ஒரு தேசத்தின் வரலாற்றை துப்பாக்கி முனையில் எழுதத் தொடங்கினர்.


1949 ம் ஆண்டு இஸ்ரேலிலிருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான பாலஸ்தீனிய மக்கள் வெளியேற்றப்பட்டனர். அப்படி வெளியேற்றப்பட்டவர்கள் இத்தனை ஆண்டுகளில் நாற்பது லட்சம் பேராக பெருகியிருக்கின்றனர். ஆனால் அவர்களெல்லாம் மீண்டும் வருவதற்கு அருகதையற்றவர்கள் என்று இஸ்ரேல் தெரிவித்துவிட்டது. அதே சமயத்தில் கொச்சியிலும், மணிப்பூரிலும் எத்தனையோ நூற்றாண்டுகளாக இருக்கும் யூதர்களை தங்கள் குடிமக்கள் என்று அழைத்துக் கொள்கிறது.


ஒரு நாடாக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே வலிமை வாய்ந்த ஆயுதச்சாலையாக இஸ்ரேல் தன்னை உருவாக்கிக் கொண்டது. இன்றைக்கு அமெரிக்காவிற்கு ஈடாக ராணுவ வல்லமை பெற்றிருக்கிறது.


பாலஸ்தீனத்திற்குள் உருவான பாம்புப் புற்றை அகற்றுவதற்கு எகிப்து, சிரியா, லெபனான், ஈராக் ஆகிய நாடுகள் கூட்டாக முயன்றன. அப்போதுதான் இஸ்ரேலின் ராணுவ வலிமை வெளிப்பட்டது. இஸ்ரேலின் கரங்கள் தான் உயர்ந்தன.


அந்த மோதலைப் பயன்படுத்தி அண்டை நாடுகளின் பரப்பளவுகளை இஸ்ரேல் கைப்பற்றிக் கொண்டது. அந்தப் பிரதேசங்களும் தங்கள் வேதம் சொல்லும் தங்களின் புனித பூமிதான் என்று வன்முறை வாதம் செய்தது. அனுமானங்கள் தான் அதற்கு அடையாளங்களாம். பாலஸ்தீனத்திலிருந்து வெளியேற்றப் பட்ட மக்கள் அண்டை நாடுகளில் குடியேறினர். 


அந்தக் குடியிருப்புகளெல்லாம் தங்கள் தேசத்திற்கு ஆபத்தானவை என்று கூறி இஸ்ரேல் ஆக்கிரமிப்பு யுத்தம் நடத்தியது. அதற்குத் துணை அமெரிக்காதான். தமது ஆயுத வியாபாரத்திற்கு இஸ்ரேல் நல்ல சந்தை என்று அந்த நாடு கருதுகிறது. இப்படி இன்று வரை பாலஸ்தீன மக்களின் ரத்தத்தில்தான் இஸ்ரேல் நீராடிக் கொண்டிருக்கிறது. 1967 ம் ஆண்டு எகிப்தின் மீது படையெடுத்த இஸ்ரேல் அதன் காசா பகுதியைக் கைப்பற்றிக் கொண்டது. ஜோர்டான் மீது படையெடுத்து மேற்குக் கரையை ஆக்கிரமித்துக் கொண்டது.


1982ம் ஆண்டு லெபனான் மீது இஸ்ரேல் படையெடுத்தது. எல்லை நெடுகிலும் அந்த நாட்டிற்குள் தங்கியிருந்த 3 ஆயிரத்து 500 பாலஸ்தீனியர்கள் படு கொலை செய்யப்பட்டனர். அவர்கள் ஆயுதங்களே இல்லாத அப்பாவி மக்கள். அந்தப் படுகொலைக்கு இஸ்ரேலிலிலேயே எதிர்ப்புக் கிளம்பியது. 


அதனால் அன்றைய பாதுகாப்பு அமைச்சர் ஓரியல் ஜரான் பதவி விலகினார். இந்த கொடுமைகள் கண்டு இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதிகளில் வசிக்கும் பாலஸ்தீனிய மக்கள் வெகுண்டெழுந்தனர். ஆங்காங்கே மூர்க்கத்தனமாக இஸ்ரேல் படைகளுடன் மோதினர். ரத்த தடாகங்களில் அவ்வப்போது வெற்றி மலர்கள் மணம் வீசவே செய்தன.


ஆனாலும் பூச்செண்டுகளைக் கொடுத்தால் இஸ்ரேல் எரிகுண்டுகளை திருப்பிக் கொடுத்தது. எனவே பாலஸ்தீனிய மக்கள் ஆக்கிரமிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் இஸ்ரேலுக்கு எதிராக போர்க்கோலம் பூண்டனர். அவர்களுடைய ஆயுதம் என்ன தெரியுமா? விளைந்த காடுகளில் பறவைகளை விரட்ட நாம் வீசும் கவண் கற்கள்தான் இஸ்ரேலின் ராட்சஷ ஆயுதங்களை வெற்றிகரமாக சந்தித்தன.


1987ம் ஆண்டு இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகளை எதிர்கொள்ள ஹமாஸ் இயக்கம் தோன்றியது. அந்த இயக்கம் இளைய தலைமுறையின் போர் பாசறை. மேற்குக் கரையிலும், காசா பகுதியிலும் அந்த இயக்கத்தின் செல்வாக்கு சிகரம் தொட்டது. உண்மையில் அந்த இரு பரப்பிலும் சமூகப்பணிகளையும் மேற்கொண்டது.


பாலஸ்தீனிய மக்களை பயங்கர ஆயுத பலத்தால் அடிபணிய வைக்க முடியாது என்பதனை இஸ்ரேலுக்கு காலம் உணர்த்தியது. எனவே பாலஸ்தீன விடுதலை இயக்கத்தை அங்கீகரிக்க முன் வந்தது. 1993ம் ஆண்டு ஓஸ்லோ நகரில் அமைதிப் பேச்சு வார்த்தை நடந்தது. அந்த மாநாடு முழு வெற்றி என்று கூற முடியாவிட்டாலும், மேற்குக் கரையிலும் காசா பகுதியிலும் சுயாதிக்க அமைப்புகளை பாலஸ்தீன மக்கள் அமைக்கலாம் என்று அந்த மாநாடு முடிவு கண்டது.


அதனைத் தொடர்ந்து பலப் பல மாநாடுகள் நடந்தன. 2000ம் ஆண்டு அமெரிக்க குடியரசுத் தலைவர் கிளிண்டன் ஓர் மாநாடு கூட்டினார். பாலஸ்தீனியத் தலைவர் யாசர் அராபத்தும், இஸ்ரேலியப் பிரதமர் எகுட்பாராக்கும் கலந்து கொண்டனர். உடன்பாடு ஏற்படவில்லை.


ஆனால் அதே சமயத்தில் இழந்த தங்கள் தேசத்தை இஸ்ரேல் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேரமும் பாலஸ்தீனிய மக்கள் போராடுகிறார்கள் அங்குலம் அங்குலமாக முன்னேறுகிறார்கள்.


மேற்குக் கரையும் காசா பகுதியும் தான் இன்றைக்கு அங்கீகரிக்கப்பட்ட பாலஸ்தீனம். அங்கே ஒருநாள் கூட மக்கள் நிம்மதியாக உறங்கியதில்லை.


2006 ம் ஆண்டு பாலஸ்தீனத்தில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. மக்கள் தீர்ப்பு அறிய அந்தத் தேர்தல் ஓர் வாய்ப்பு என்று ஐ.நா. மன்றமும் கருதியது. தேர்தலில் காசா பகுதியில் ஹமாஸ் இயக்கம் மகத்தான வெற்றி பெற்றது. மேற்கு கரைப் பகுதியில் மிதவாத அரசு அமைந்தது.


ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஹமாஸ் அரசை அங்கீகரிக்க மாட்டோம் என்று இஸ்ரேலும், அமெரிக்காவும் அறிவித்தன. அதனைத் தொடர்ந்து காசா பகுதியை கலவர பூமியாகவே வைத்திருக்க பிரியப்படுகின்றன. தங்கள் அரசை அங்கீகரிக்க மறுக்கும் இஸ்ரேலை, ஹமாஸ் இயக்கமும் அங்கீகரிக்கவில்லை. தங்கள் தாயகத்தின் இதயப்பகுதியில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் யூத ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுவோம் என்று ஹமாஸ் இயக்கம் சூளுரைத்து செயல்படுகிறது.


எனவே ஏதாவது ஒரு காரணம் கூறி காசா பகுதிக்குள் அவ்வப்போது இஸ்ரேல் படையெடுக்கிறது. ஒரு பக்கம் வான்வழித் தாக்குதல் - இன்னொரு பக்கம் கடல்வழித் தாக்குதல் - தொடர்ந்து தரைவழித் தாக்குதல் என்று சமீபத்தில் கூட மூர்க்கத்தனமாக தாக்குதலைத் தொடர்ந்தது. காசா பகுதியில் இன்னொரு ரத்த ஆறு ஊற்றெடுத்தது. ஆனாலும் பாலஸ்தீன மக்கள் அடிபணியவில்லை.


மூன்று வார அநியாய யுத்தத்திற்குப் பின்னர் போர் நிறுத்தம் என்று இஸ்ரேலே அறிவித்திருக்கிறது. ஈவிரக்கமற்ற இஸ்ரேல் படையெடுப்பை ஐ.நா. மன்றம் ஒரு மனதாகக் கண்டித்திருக்கிறது. இன்றைக்கு உலகத்தின் முன்னால் ஆக்கிரமிப்பு நாடு வெட்கித் தலைகுனிந்து நிற்கிறது.


முன்னாள் பாலஸ்தீனிய மக்களுக்கு கவண் கற்கள்தான் ஆயுதம். ஆனால் இன்றைக்கு இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் பறக்கின்றன. இன்னொரு பக்கம் தரைவழிப் போரில் பாலஸ்தீனிய மக்களை வெல்ல முடியவில்லை. எல்லைகளை முறித்துக் கொண்டு நுழையும் டாங்கிகளை அவர்கள் அப்பளங்களாக நொறுக்குகிறார்கள்.


இன்றைக்கு மத்திய கிழக்கில் ஏகாதிபத்திய சக்திகளின் பயங்கர ஆக்கிரமிப்புக்களை பார்க்கிறோம். அரசு பயங்கரவாதம் என்றால் என்ன என்பதற்கு இஸ்ரேல் இலக்கணம் வகுத்துக் கொண்டிருக்கிறது.


ஹமாஸ் இயக்கம்தான் காசா பகுதிக்கும் மேற்குக் கரைக்கும் உண்மையான அரசியல் இயக்கம். அதனை அழித்தொழிக்காது கண் துஞ்ச மாட்டோம் என்று இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் கொக்கரிக்கிறார்கள். 


ஆனால் சர்வவல்லமை படைத்த அந்த ஆக்கிரமிப்பாளர்கள் அவ்வப்போது சோர்ந்து போகிறார்கள். அதனால் போர் நிறுத்தம் என்கிறார்கள்.


பாலஸ்தீனத்தின் மேற்குக் கரையில் மிதவாத ஆட்சி அமைந்தாலும் முழு பாலஸ்தீன மக்களின் அங்கீகாரம் பெற்ற மாபெரும் இயக்கமாக ஹமாஸ் தலை நிமிர்ந்து நிற்கிறது. அதனைப் பணிய வைக்க அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் சில அரேபிய நாடுளே துணை நிற்கின்றன என்பது வேதனை தரும் செய்தி. எனினும் பாலஸ்தீனம் இமயம் போல எழுந்து நிற்கும்.


வலல ரஹ்மான் பாலஸ்தீனிய மாக்களுக்கு மென்மேலும் வெற்றியை தருவானாக என்று பிரார்த்தனை செய்தவனாக............!