இன்று நாங்கள் தகவல் தொழில்நுட்ப உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நவீன தகவல் தொழில்நுட்பத்தின் அனைத்து பிரயோசனங்களையும் நுகர்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனாலும் தகவல் என்றால் என்ன என்பது பற்றி யாருமே ஆழமாக சிந்திக்க முற்படுவதில்லை. தகவல் என்றால் பத்திரிகைகளிலோ, புத்தகங்களிலோ, வானொலியிலோ அல்லது தொலைத்தொடர்பு சாதனங்களின் வாயிலாக கிடைக்கக் கூடிய செய்திகள் என்று கருதுகின்றோம். அல்லது ஒழுங்கு படுத்தப்பட்ட தரவுகளின் தொகுதி தகவல் என்று கருதுகின்றோம்.
உண்மையில் தகவல் (Information) என்றால் சடப்பொருளோ, சக்தியோ அல்ல. தகவல் என்பது ஒரு கற்பனையான விடையமும் அல்ல. அவ்வாறெனில் தகவல் என்றால் என்ன....?
இது சம்பந்தமாக விஞ்ஞானிகள் இப்போது ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறார்கள். தகவல் சம்பந்தமாக ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள் உலகிற்கு ஒரு புதிய விஞ்ஞானத்தை வழங்க காத்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களுடைய கருத்தின் படி இந்த உலகம் உருவாக முதலேயே அதாவது பெரு வெடிப்பு (big bang) நிகழ்வதற்கு முதலே தகவல் இருந்திருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். அது எதைப் போன்றது என்றால், தற்போது தகவல் பரிமாற்றத்திற்காக அதிகளவு பயன்படுத்தும் கணனியைப் போல.
கணனியின் Hardware களில் Software கள் தொழிற்பட அடிப்படையான தகவல்கள் (Operating System) தேவை. எல்லாவிதமான Software களும் உருவாக்கப்படுவதற்கு முன்பு, அவை இயங்குவதற்கு தேவையான தகவல்கள் Coding களாக அல்லது program களாக எழுதப்பட வேண்டும். அவ்வாறு Coding களாக எழுதப்பட்ட தகவல்கள் தான் ஆரம்பத்தில் இருக்கின்றன (பின்பு Run என்ற ஒற்றை கட்டளை மூலம் பல Program களை நிறுவ முடியும், குன் என்ற சொல்லின் மூலம் படைப்புகள் உருவாவதைப்போல). இவ்வாறான Coding கள் பாதுக்காக்கப் பட்டதாகவும் இருக்க வேண்டும். உதாரணமாக Windows, Mac போன்ற Operating System கள் தகவல்களாக தரவிறக்கம் செய்யப் படுகின்றன. தரவிறக்கப் படுகின்ற தகவல்கள் virus களிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். இதற்காகவேதான் Anti-virus program கள் உருவாக்கப்பட்டு ஆரம்பத்தகவல்கள் பாதுகாக்கப்படுகின்றன.
மனிதன் கருவில் உருவாக்கப் படுவதற்கு முன் அவன் உருவாகத் தேவையான தகவல்களைக் கொண்ட களஞ்சியம் நுகத்தின் கருவினுள் நிறமூர்த்தங்களில் பாதுகாக்கப் படுகின்றன. மனிதன் உருவாவதற்கு முன் அவன் உருவாகத் தேவையான தகவல்களே காணப்படுகிறது.
இது போலவே இந்த பிரபஞ்சம் உருவாக தேவையான தகவல்கள் பெருவெடிப்பு நிகழ்வதற்கு முன்பே இருந்திருக்க வேண்டும். அவ்வாறு இருந்த தகவல்கள் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டும். எனவே இந்த முழு பிரபஞ்சமும் இயங்குவதற்கு தேவையான தகவல்களைக் கொண்ட தகவல் களஞ்சியம் எங்கோ இருக்க வேண்டும் என இன்றைய விஞ்ஞானிகள் யூகிக்கிறார்கள். இவ்வாறானதொரு பாதுகாக்கப்பட்ட தெளிவான ஏட்டைப் பற்றி அல்குரான் பேசுகிறது. (சங்கை மிகு அல்குரான் 11:6, 17:58, 27:75, 34:3, 35:11, 57:22, 80:16, 85:22)
நன்றி - இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவை. ஒவ்வொரு மாதமும் 3ஆம் 4காம் சனிக்கிழமைகளில் காலை 9.00 மணி முதல் 10.00 மணிவரை
No comments:
Post a Comment