Showing posts with label Hijab. Show all posts
Showing posts with label Hijab. Show all posts

Thursday, January 10, 2013

ஏன் பெண்கள் மட்டும் பர்தா அணிய வேண்டும்...?

பர்தாவைப் பொறுத்தவரை இஸ்லாமிய மதம் மட்டும்தான் இதை வழியுறுத்துகின்றதா? அல்லது தங்கள் மதத்தின் மீது இருக்கக்கூடிய ஏவுகணைகளை எதிர்கொள்ள முடியாமல் மற்றமதத்தின் மீது சேற்றை அள்ளி கண்ணை மூடிக்கொண்டு வீசுகின்றனரா? நீங்கள் உங்கள் கண்களை மூடிக்கொண்டால் உலகம் இருட்டிவிடாது சகோதரர்களே! இதோ படியுங்கள் அல்லாஹ்வின் நாட்டம் இருந்தால் உங்களுக்கு நேர்வழி கிடைக்கட்டும்.

எனக்கு எழும் சந்தேகமெல்லாம் ஏன் பெண்கள் மட்டும் ஃபர்தா அணிய வேண்டும்?

பெண்களின் அங்க அமைப்பைக் கருத்தில் கொண்டு இஸ்லாம் பெண்களுக்கு ஹிஜாப் அணிந்து வலியுறுத்துவதுபோல், ஆண்களை வேறுவகையில் கட்டுப்பாடாக இருக்க வலியுறுத்துகிறது.

''(நபியே) முஃமினான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக! ஆண்கள் தங்கள் பார்வைகளை தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும். நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன்''. (குர்ஆன் 24:30)

இதேபோன்ற கட்டளையை அதற்கு அடுத்த வசனத்திலேயே (குர்ஆன் 24:31) பெண்களுக்கும் வலியுறுத்துகிறது. இஸ்லாம் இயற்கைக்கு உகந்த மார்க்கம். ஆண்களின் உடலமைப்பிற்கும் பெண்களின் உடலமைப்பிற்குமுள்ள இயற்கையான வித்தியாசத்தை இஸ்லாம் உணர்ந்துள்ளது. அதனால்தான் பெண்களின் உடலமைப்பைக் கருத்தில் கொண்டு அறிவுப்பூர்வமான கட்டளையை வகுத்துள்ளது. மேலும், இவ்வசனத்தில் ஆண்களுக்குச் சொல்லப்பட்டதை பெண்களுக்கும், பெண்களுக்குச் சொல்லப்பட்டதை ஆண்களுக்கும் மாற்றிச் சொல்லி இருந்தாலும் கூட விமர்சிக்கப்படுவதோடு, நடைமுறைக்கு ஒவ்வாததும் கூட என்பதை எதார்த்தமாக சிந்திக்கும் எவருக்கும் 'சந்தேகம்' வராது.

மேற்கண்ட ஸந்தேகத்தை இந்தும்த திருமணங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ள தாலி, மெட்டி விசயத்திலும் கேட்கலாம். (இதுதான் நியாயமும் கூட!) மேலும் கோவிற்சிற்பங்களில் ஆபாசங்கள் இருந்தாலும், பெண் கடவுள்களான லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, சீதை போன்றோர் சேலையுடனும், சிவன், முருகன், இராமன் போன்றோர் சட்டை இல்லாமலும் இருப்பதிலிருந்து, இந்து மதமும் பெண்களை உடல் ரீதியாக அவர்கள் கடவுளாகவே இருந்தாலும் வேறுபடுத்தியே பார்க்கிறது என்பது விளங்கும்.