| ஆப்பரேட்டிங் சிஸ்டம் - சில அடிப்படைகள் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் நம் அன்றாடப் பணிகளில் கலந்து, நம்மோடு இணைந்த இக்காலத்தில், அதன் பல இயக்கச் சொற்களை அப்படியே ஆங்கிலத்திலேயே நாம் புழங்கி வருகிறோம். அவற்றில் சிலவற்றின் முழுச் செயல்பாட்டினை இங்கு காணலாம். 1. Abort (அபார்ட்): ஒரு புரோகிராம் அல்லது செயல்பாட்டினை, அது இயற்கையாக முடிவதற்கு முன்னரே நிறுத்துவதனை அபார்ட் என்கிறோம். இதனை நாமாகவும் நிறுத்தலாம்; தானாக கம்ப்யூட்டரில் சிக்கல் ஏற்பட்டும் நிறுத்தப்படலாம். எடுத்துக் காட்டாக, பிரிண்ட் கட்டளை கொடுத்த பின்னர், நாம் விரும்பினால், அச்சிடுவதனை அபார்ட் செய்திட, புரோகிராமே வழி கொடுக்கிறது. எதனையேனும் தேடச் சொல்லி, கட்டளை கொடுத்து, கம்ப்யூட்டர் தேடி, முடிவுகளைப் பட்டியலிடுகையில், நமக்குத் தேவையான தகவல் கிடைத்தால், செயல்பாட்டினை அபார்ட் செய்திட வழி கிடைக்கிறது. இதனை crash என்பதனுடன் ஒப்பிடலாம். கிராஷ் ஏற்படுகையில், சிஸ்டம் முழுமையும், ஆப்பரேட்டிங் சிஸ்டம் உட்பட, முடங்கிப் போய் நின்று விடுகிறது. ![]() 2. Batch File (பேட்ச் பைல்): வரிசையாக அல்லது குழுவாக அமைக்கப்பட்ட கட்டளைகளின் தொகுப்பு. இந்த கட்டளைகளை அப்படியே மொத்தமாக, இவை உள்ள பைலை இயக்கிச் செயல்படுத்தலாம். எடுத்துக் காட்டாக, டாஸ் அடிப்படையில் இயங்கும் சிஸ்டத்தில், சிஸ்டம் தானாக, AUTOEXEC.BAT என்ற பைலை இயக்கும். இதில் டாஸ் இயக்கம் தொடக்கத்தில் இயங்குவதற்குத் தேவையான கட்டளைகள் இருக்கும். சில ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள், பேட்ச் பைல் என்பதற்குப் பதிலாக command file அல்லது shell script எனப் பயன்படுத்துகின்றனர். 3. BIOS (பயாஸ்): இதனை பைஓ.எஸ். என அழைக்க வேண்டும். ஆனால் பயாஸ் என அழைக்கப்படுவதே பழக்கமாகிவிட்டது. டிஸ்க்கில் உள்ள எந்த புரோகிராமோடும் தொடர்பு கொள்ளாமல், ஒரு கம்ப்யூட்டர் என்ன செய்திட வேண்டும் என அமைக்கப்பட்டு, கம்ப்யூட்டரிலேயே பதிந்து தரப்படும் ஒரு புரோகிராம். ஒரு பெர்சனல் கம்ப்யூட்டரின் பயாஸ் புரோகிராமில், கீ போர்டு, டிஸ்பிளே ஸ்கிரீன், டிஸ்க் ட்ரைவ்கள், சீரியல் தொடர்புகள் மற்றும் இது போன்ற பல சில்லரை செயல்பாடுகளை மேற்கொள்ள இந்த புரோகிராமில் கட்டளைகள் இருக்கும். இந்த பயாஸ் புரோகிராம் ஒரு சிப்பில் பதிந்து தரப்பட்டிருக்கும். இதனால், டிஸ்க் ட்ரைவ் கெட்டுப் போனாலும், கம்ப்யூட்டருக்கு இந்த தொடக்க நிலை புரோகிராம் கிடைக்கும். இதனால் கம்ப்யூட்டர் ஒன்று, தானாக இயங்க வழி கிடைக்கிறது. மெமரி சிப்பைக் காட்டிலும், RAM வேகமாக இயங்கும் என்பதால், பல கம்ப்யூட்டர்களில், பயாஸ் ROMலிருந்து RAMக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து இயங்கும்படி அமைக்கப்படும். இதனை ஆங்கிலத்தில் shadowing என அழைக்கிறோம். இப்போது வரும் கம்ப்யூட்டர்களில் flash BIOS என அமைக்கப்பட்டுக் கிடைக்கிறது. அதாவது பயாஸ் புரோகிராம் பிளாஷ் மெமரியில் பதியப்பட்டு இயக்கப்படுகிறது. இதனால், தேவைப்படுகையில், இதனை அப்டேட் செய்து கொள்ளலாம். பொதுவாக BIOS என்பது அனைத்துக் கம்ப்யூட்டர்களிலும் இப்படித்தான் இருக்க வேண்டும் என பொதுவான வரைமுறையுடன் அமைக்கப்படுகிறது. BIOS புரோகிராமில் பல வகையான பதிப்புகள் இருந்தாலும், அடிப்படையில் அவை ஒரே கட்டமைப்பைக் கொண்டுள்ளன. கூடுதலாக ஏதேனும் டாஸ் கட்டளைகள் தரப்பட வேண்டும் என்றால், அவை சாப்ட்வேர் மூலம் இணைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டரில் இணைத்துச் செயல்படுத்தும் ப்ளக் அண்ட் ப்ளே சாதனங்களைக் கையாளும் புரோகிராம்களை PnP BIOS அல்லது PnPaware BIOS என அழைக்கின்றனர். Clean boot (கிளீன் பூட்): மிகக் குறைந்த எண்ணிக்கையிலான புரோகிராம்களுடன், ஒரு கம்ப்யூட்டரை இயக்குவதற்கு Clean boot என்று பெயர். பொதுவாக, கம்ப்யூட்டர் ஒன்றை இயக்குகையில், இயக்குபவருக்கான, கம்ப்யூட்டிங் சூழ்நிலையை உருவாக்க, பல பைல்களும், புரோகிராம்களும், ட்ரைவிலிருந்து எடுக்கப்பட்டு, இயக்கப்படும். செய்யப்படுகையில், இந்த கூடுதல் புரோகிராம்கள் அனைத்தும் இல்லாமல், ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குவதற்குத் தேவையானவை மட்டும் இயக்கப்படும். இவ்வாறு இயக்குவது, கம்ப்யூட்டர் செயல்பாட்டில் உள்ள பிரச்னைகளை அறிய உதவும். இவ்வாறு இயக்கியபின், டயாக்னாஸ்டிக் டெஸ்ட் எனப்படும் சோதனையை மேற்கொள்ளலாம். இந்த சோதனையில், வழக்கமாக கம்ப்யூட்டர் இயங்கத் தேவையான ஓட்டத்தில் எங்கே பிரச்னை உள்ளது என அறியலாம். |
This blog contains so many different types of articles, downloadable PDF books and some other links
Monday, July 23, 2012
ஆப்பரேட்டிங் சிஸ்டம் - சில அடிப்படைகள்
Friday, July 20, 2012
Saturday, July 14, 2012
அக்டோபரில் விண்டோஸ்8 வெளியீடு - மைக்ரோசாஃப்ட்
அக்டோபரில் விண்டோஸ்8 வெளியீடு - மைக்ரோசாஃப்ட்

புதிய இயங்குதளத்ததினை வருகிற அக்டோபர் மாதம் வெளியிடுவதாக மைக்ரோசாஃப்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்றைய முன் தினம் உலகளவிலான பங்குதாரர் கண்காட்சி கனடாவில் உள்ள டோரன்டோவில் நடைபெற்றது.
இந்த கண்காட்சியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது புதிய இயங்குதளமான விண்டோஸ்-8 வருகிற அக்டோபர் மாதம் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறது.
இந்த கண்காட்சி 12ஆம் தேதி வரை நடைபெறும். இந்த இயங்குதளம் கொண்ட பிசி கம்ப்யூட்டர்கள் தயாரிக்கும் வேலைகள் மும்முரமாக நடை பெற்று வருகிறது.
இந்த வேலைகள் ஓரளவு முடிந்து வெளியாகும் தருவாயில் உள்ளது. இருப்பினும் கடைசிகட்ட வேலைப்பாடுகள் நடந்து வருகிறது.
ஏனெனில் வாடிக்கையாளர்கள் இந்த புதிய விண்டோஸ்-8 இயங்குதளத்தினை பயன்படுத்தும்போது, மிக சிறப்பான பயன்பாட்டினை கொடுக்க வேண்டும்.
ஆகஸ்டு மாதம் இந்த விண்டோஸ் இயங்குதளம் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
மைக்ரோசாஃப்டின் இந்த புதிய விண்டோஸ்-8 இயங்குதளம் 2,233 டாலர் இருக்கும் என்றும், விண்டோஸ்-8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் 231 சர்வதேச சந்தைகளில் வெளியிட உள்ளதாகவும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
Some Medical Books
1. Macleod's Clinical Examination(.chm file)
2. Kumar & Clark's Clinical Medicine (Saunders, 2009) (.pdf file)
3. Hutchisons Clinical Methods
4. History_and_Examination_at_a_Glance_1st_ed_2003060632059664_JonathanG (.pdf file)
5. Medical mnemonics_2002_09_full_abr_8x11 (.pdf file)
Tuesday, June 26, 2012
Samsung S 6102 காலக்ஸி டூயோஸ்
| Samsung S 6102 காலக்ஸி டூயோஸ் ![]() தொடர்ந்து இரண்டு சிம்களில் இயங்கும் மொபைல் போன்களை பல்வேறு வசதிகள் கொண்டதாக வடிவமைத்து வழங்கி வரும் சாம்சங் நிறுவனம், அண்மையில் காலக்ஸி எஸ் 6102 என்ற பெயரில் ஒரு கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் மொபைல் ஒன்றை விற்பனைக்கு வழங்கியுள்ளது. இதன் திரை 3.12 அங்குல அகலத்தில், தொடு திரையாக உள்ளது. இதன் ரெசல்யூசன் 320x240 பிக்ஸெல் கொண்டுள்ளது. போன் மெமரி 160 எம்.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்திக் கொள்ளலாம். இது ஒரு 3ஜி போனாகவும் செயல்படுகிறது. வை-பி இணைப்பு கிடைக்கிறது. இதன் ப்ராசசர் 832 MHz திறன் கொண்டதாகத் தரப்பட்டுள்ளது. 3.15 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா இணைக்கப்பட்டுள்ளது. வீடியோ பதிவு மற்றும் இயக்கம் கிடைக்கிறது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், புஷ்மெயில் ஆகிய வசதிகள் கிடைக்கின்றன. எம்பி3 பிளேயர், ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ ஆகியவை இசைப் பிரியர்கள் விரும்பும் அம்சங்களாக உள்ளன. |
Sunday, June 24, 2012
பைலின் துணைப் பெயர் (Extension) காட்டப்பட
Friday, April 13, 2012
Thursday, April 12, 2012
விண்டோஸ் 7 தரும் ட்ரைவ் மிர்ரர்
மிகச் சிறந்த பேக் அப் தீர்வின்படி, வழிகளை மேற்கொண்டு பைல்கள் அனைத்தையும் பேக் அப் எடுத்து வந்தாலும், ஹார்ட் டிஸ்க் கிராஷ் ஆனால், சில மணி நேர வேலையாவது வீணாகிப் போய்விடும். இதனையும் சரி செய்திட விண்டோஸ் 7 சிஸ்டம் ஒரு வழி காட்டுகிறது. அதன் பெயர் "ட்ரைவ் மிர்ரரிங்'.
இந்த வசதி விண்டோஸ் 7 சிஸ்டத்தின் புரபஷனல், என்டர்பிரைஸ் மற்றும் அல்டிமேட் பதிப்புகளில் கிடைக்கிறது. இது கீஅஐஈ 1 தொழில் நுட்பத்தின் செயல் பாடாகும். இதன்படி, இரண்டு அல்லது அதற்கும் மேலான டிஸ்க்குகள் ஒரே டேட்டாவினைக் கொண்டிருக்கும். பைல்கள் அனைத்தும் ஒருங்கிணைக்கப் பட்டு இவ்வகையில் பதிவாகும். இதனால், ஒரு டிஸ்க் கிராஷ் ஆனாலும், நாம் நம் டேட்டாவினைச் சிறிது கூட இழக்க மாட்டோம்.
இங்கு ஒன்றைக் கவனிக்க வேண்டும். மிர்ரரிங் என்பது தொழில் நுட்ப ரீதியாகப் பார்த்தால், பேக் அப் தீர்வாகாது. எடுத்துக் காட்டாக, நீங்கள் உங்களை அறியாம லேயே ஒரு பைலை அழித்தால், ஹார்ட் டிஸ்க்கின் இரண்டு ட்ரைவ்களிலும் அது அழிக்கப்படும்.
( அந்த பைலை வேறு தர்ட் பார்ட்டி புரோகிராம் மூலம் திரும்பப் பெறலாம் என்றாலும், இந்த மிர்ரர் ட்ரைவ் செயல்பாட்டினால் திரும்பப் பெற முடியாது). மேலும் இது போல மிர்ரர் டிஸ்க்கில் பதிந்து வைத்தவற்றை, அண்மைக் காலத்தில் பயன்படுத்தப்படும் விண்டோஸ் இயக்கத்தின் வழி மட்டுமே மீட்டுப் பெற முடியும்.
டிஸ்க் மிர்ரரிங் மேற்கொள்ள நமக்குக் குறைந்தது ஒரு காலியான டிஸ்க் இருக்க வேண்டும். எப்படி மிர்ரர் ட்ரைவில் உள்ள டேட்டாவினை இழக்காமல், இருக்கும் டிஸ்க்கினை மிர்ரர் டிஸ்க்காக அமைப்பது குறித்து இங்கு காணலாம்.
இருக்கின்ற ட்ரைவினை மிர்ரரிங் செய்வது: ஸ்டார்ட் பட்டன் கிளிக் செய்து சர்ச் பாக்ஸில் partitions என டைப் செய்திடவும். உடன் கிடைப்பதில் Create and format hard disk partitions என்பதில் கிளிக் செய்திடவும். நீங்கள் சர்ச் பாக்ஸினை செயல்படாமல் வைத்திருந்தால், Win+R அழுத்தி ரன் விண்டோ பெற்று அதில் diskmgmt.msc என டைப் செய்திடவும்.
இப்போது Disk Management விண்டோ காட்டப்படும். நம்மிடம் OldData என்ற பெயருடன் ஒரு சிறிய டிஸ்க் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதே அளவிலான இன்னொரு டிஸ்க்கினை இதன் மிர்ரராக வைத்துக் கொள்ள விரும்புகிறோம்.
இதில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இப்போது இருக்கும் டிஸ்க்கின் மிர்ரர் ஆக அமைக்க இருக்கும் டிஸ்க், பங்கிட்டு ஒதுக்கப்படாததாக இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் இருந்தால், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில் Delete Volume என்பதில் கிளிக் செய்திடவும். இதன் மூலம் அது பங்கிட்டு ஒதுக்கப்படாததாக மாற்றப்படுகிறது. இதன் மூலம் அந்த ட்ரைவில் ஏதேனும் டேட்டா இருந்தால் அது அழிக்கப்படும்.
அடுத்து எந்த டிஸ்க்கிற்கு மிர்ரர் ஏற்படுத்த விரும்புகிறீர்களோ, அதில் ரைட் கிளிக் செய்திடவும். இதில் கிடைக்கும் மெனுவில் Add Mirror என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது ஓர் எச்சரிக்கை செய்தி கிடைக்கும்.
இந்த செயல்பாடு, இப்போது உள்ள டிஸ்க்கினை basic நிலையிலிருந்து dynamic நிலைக்கு மாற்றி விடும் என அந்த செய்தி கூறும். இந்த செயல்பாடு, அந்த டிஸ்க்கில் உள்ள டேட்டாவினை அழிக்காது என்பதனையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த புதிய டிஸ்க் mirror என குறிக்கப்படும். இது ஏற்கனவே உள்ள ட்ரைவிலிருந்து டேட்டாவினை காப்பி செய்து வைக்கத் தொடங்கிவிடும். இந்த ட்ரைவ்கள் ஒருங்கிணைக்கப்படும். இதற்கு சிறிது நேரம் ஆகலாம். இதன் பின்னர் E: ட்ரைவில் சேர்க்கப்படும் எந்த டேட்டாவும், இரண்டு ஹார்ட் ட்ரைவ்களிலும் இருக்கும்.
இது போல ட்ரைவ் மிர்ரரிங் செய்து வைத்துக் கொள்வது நமக்கு ஹார்ட் டிஸ்க் கிராஷ் ஆகும்போது மிகவும் உதவியாக இருக்கும். ஆனால், இந்த அமைப்பை ஏற்படுத்திய பின்னரும், வழக்கம் போல பேக் அப் எடுத்து வைப்பது நல்லது.

Wednesday, April 11, 2012
பயர்பாக்ஸ் நம் வசமாக
| You are subscribed to email updates from தெரிந்து கொள்ளலாம் வாங்க To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

Sunday, April 8, 2012
உலாவிகள் ஒரு பார்வை
இணையத் தொடர்புக்குப் பயன்படுத்த பல உலாவிகள் நமக்குக் கிடைக்கின்றன. இவை அனைத்தும் ஒரே மாதிரியான திறனுடனோ, வசதிகளுடனோ அமைக்கப்படுவதில்லை. சில வேகமாக இயங்கும், பல உலாவிகள் தரும் வசதிகள் எண்ணற்றவையாக இருக்கும்.
1. கூகுள் குரோம் பதிப்பு 17
மொத்தத்தில் முதல் இடம் பிடித்துள்ள உலாவி. இணைய தளங்களைப் பார்த்துக் கொண்டிருக்கையில் அவை முடங்கிப் போனால் உலாவியின் இயக்கத்திறனை நிறுத்தாமல் அவற்றை மட்டும் மூடும் சிறப்பினை கொண்டுள்ளது.
இதன் பல அடுக்கு பாதுகாப்பு(Sandbox) கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களைத் தடுக்கிறது. பயன்படுத்துவதில் எளிமை, அதிக எண்ணிக்கையில் எக்ஸ்டன்ஷன் வசதிகள், ஆட் ஆன் புரோகிராம்கள், மிகச் சிறந்த இயக்கம் ஆகியவை.
இவை அனைத்தும் தொடக்க நிலை இணையப்பயனாளருக்குத் தெரியாமலோ, தேவை இல்லாமலோ இருக்கலாம். ஆனால் அனைவரின் எதிர்பார்ப்புகளை இது நிறைவேற்றுகிறது. இணையப் பக்கங்களை அவற்றில் எத்தனை கிராபிக்ஸ் ஆப்ஜெக்ட்கள் இருந்தாலும், நான்கு விநாடிகளில் இறக்கித் தருகிறது.
பிப்ரவரியில் வெளியான இதன் பதிப்பில் இணைய முகவரியை டைப் செய்திடத் தொடங்குகையிலேயே அந்த பக்கத்தைத் தருவது இதன் அதிமுக்கிய சிறப்பாக உள்ளது.
வேறு மொழிகளில் உள்ள இணையத்தளம் இறங்குகிறது எனில், உடனே அதனை மொழி பெயர்த்துத் தரும் பணியில் குரோம் இறங்குகிறது. மொழி பெயர்ப்பு மிகச் சரியாக இல்லை என்றாலும் அப்பக்கத்தைப் பற்றி அறிந்து கொள்ள இது உதவுகிறது.
2. மொஸில்லா பயர்பாக்ஸ் பதிப்பு 10
பலவகைச் சிறப்புகளைக் கொண்ட ஓர் அருமையான உலாவி. எச்.டி.எம்.எல். 5 இயக்கம் மற்றும் ஆயிரக்கணக்கான ஆட் ஆன் புரோகிராம்கள் இதன் சிறப்புக்கு அடிப்படை.
ஆனால் தேவையற்ற அல்லது அதிகமான ஆட் ஆன் தொகுப்புகள் உலாவியின் வேகத்தை மட்டுப்படுத்துவது இதன் பலகீனமே. மார்ச் 2011 ல் பதிப்பு 4 வந்த பின்னர் இன்று வரை ஆறு பதிப்புகள் வந்துள்ளன.
மொஸில்லா வாடிக்கையாளர்களின் தேவைகளைத் தொடர்ந்து கணித்து வருவதனைக் காட்டுகிறது. இதில் டேப்களை குழுக்களாக அமைத்துப் பிரித்து வைத்து எளிதாக இயக்கலாம். பாப் அப் பில்டர், பிரைவேட் பிரவுசிங் போன்றவை இதன் மற்ற சிறப்புகள்.
3. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9
பாதுகாப்பில் இதன் தனித் தன்மையை மற்ற உலாவிகள் கொண்டிருக்கவில்லை. எச்.டி.எம்.எல். 5 இயக்கத்தில் இதுவே அதிக வேகம் கொண்டுள்ளது. இதன் டேப்களைக் கையாள்வதில் சற்று சிரமமாக உள்ளது. எளிமையில் மிகவும் பின் தங்கி உள்ளது.
ஒவ்வொரு தனி நபருக்குமாக குறிப்பிட்ட தளங்களைத் தொடர்ந்து தடுத்துவிடும் வசதி தரப்பட்டுள்ளது. இதன் புக்மார்க்குகளை மற்றவற்றில் இணைப்பதில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் எதுவும் செய்யவில்லை என்பது தீராத குறையாக உள்ளது. தீம்கள் மற்றும் ஸ்பெல்லிங் செக் செய்திடும் வசதி இல்லாதது பலருக்கு ஏமாற்றத்தைத் தரும்.
MP3 பிளேயர் தரும் ஆபத்து
வாக்மேன் மறைந்து எம்பி3 பிளேயர் வந்த போது, இசையை ரசிக்க, அனைவரும் அதற்கு மாறினர். மிகத் துல்லிதமான இசை, எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் தொடர்ந்து பிரச்னை இன்றி தரும் வசதி ஆகியவற்றினால், பலரும் இதன்பால் ஈர்க்கப்பட்டனர்.
ஆனால், இது வேறு சில பிரச்னைகளைத் தருவதாக, டெல் அவிவ் பல்கலைக் கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து எம்பி3 பிளேயரை, ஹெட் செட் மாட்டி கேட்டு வருபவர் களுக்கு, மிக இளம் வயதிலேயே காது கேட் கும் திறன் படிப்படியாக குறையத் தொடங் குகிறது என்று கண்டறிந்துள்ளனர்.
தற்போது நால்வரில் ஒருவருக்கு இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் இந்த ஆய்வினை மேற்கொண்ட விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
எம்பி3 பிளேயர் மட்டு மின்றி, தற்போது பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஐ-பாட் மியூசிக் பிளேயர் பயன் படுத்துபவர்களின் கதியும் இதே தான் என வும் கூறி உள்ளனர்.
இதனால், இன்னும் 10 அல்லது 20 ஆண்டுகள் கழித்து, ஒரு சந்ததியே செவிகளின் கேட்புத் திறன் குறைவாக உள்ளதாக அமைந்துவிடும் என்றும் எச்சரித்து உள்ளனர்.
அதிக சத்தத்தில் பாடல்களைக் கேட்பதனால், தொடர்ந்து தாங்க முடியாத அளவிற்கு ஒலி அலைகள் காதுகள் வழியாக மூளைக்குப் பயணமாகின்றன. இவை ஏற்படுத்தும் தீய விளைவுகளை, உடனடி யாக நாம் அறிய முடிவதில்லை.
படிப் படியாக அவை நம் கேட்கும் திறனைக் குறைக்கின்றன. தெரிய வரும்போது இதற்கான தீர்வு கிடைப்பதில்லை. வளரும் இந்த தீய பழக்கம் குறித்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவர் களுக்கு அறிவித்தால் நல்லது.

Thursday, April 5, 2012
Today's Hadeeth
He who wishes to enter paradise at the best gate, must please his Father and Mother.
-Bukhari and Muslim-
-Bukhari and Muslim-
Tuesday, April 3, 2012
Today's Dua
Ya Allah, we are trying, and you know the sincerity of your slaves. please help us keep pushing . Aameen..!
Subscribe to:
Posts (Atom)