Tuesday, May 13, 2014

வட்டி அடிப்படையிலான வங்கிகளில் தொழில் புரிதல்

Copied from All Ceylon Jammiyathul Ulama's website, 
பிரசுரித்த தேதி 20.04.2004ஹிஜ்ரி தேதி 29.02.1425 பதிவு இல 006/ACJU/F/2004/011 

வட்டி அடிப்படையிலான வங்கிகளில் தொழில் புரிதல் தொடர்பில் சன்மார்க்கத் தெளிவு வேண்டி தங்களால் எமக்கு அனுப்பி வைக்கப்பட்ட 2003.09.22 கடிதம் இத்தால் தொடர்புகொள்ளப்படுகின்றது.

மேற்படி விடயம் சம்பந்தமான தெளிவு பின்வருமாறு:

எல்லாப் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே. சலாத்தும், ஸலாமும் அவனின் இறுதித் தூதர் முஹம்மத் (சல்லல்லாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் மீதும், அவர்களது கிளையார்கள், தோழர்கள் மீதும் உண்டாவதாக!

தனிமனித வாழ்வு, குடும்ப வாழ்வு, சமூக வாழ்வு அனைத்திற்கும் புனித இஸ்லாத்தின் சிறப்பான வழிகாட்டல்கள் சம்பூரணமாக காணப்படுகின்றன. அல்லாஹ்வினால் படைக்கப்பட்ட மனிதன் அவனின் வழிகாட்டல்களுக்கேற்ப நடப்பது கட்டாயமாகும். அல்லாஹ்வின் சட்டங்களும், ஏவல் விலக்கல்களும் ஒரு முஃமினின் முன் மற்றெல்லாவற்றையும் விட பெரியவை, முதன்மை பெறுபவை. ஹலால் (அனுமதிக்கப்பட்டது), ஹராம் (தடுக்கப்பட்டது) ஆகிய பதங்களுடன் இறை விசுவாசி எப்பொழுதும் மிகுந்த தொடர்புடையவன்.

மனிதனை சிருஷ்டித்த அல்லாஹ் அவனின் வாழ்வாதாரத்தைத் தேடிப்பெற்றுக்கொள்ளுமாறு கட்டளையிடுகின்றான். உழைத்து வாழ்வதை அல்லாஹ் சட்டரீதியாக ஆக்கியிருக்கின்றான். பொருளீட்டலின் போது கடைபிடிக்கப்படவேண்டிய விதிகளையும், ஒழுங்குகளையும் இஸ்லாம் மிகத் துல்லியமாக எடுத்தியம்பியுள்ளது.

கொடுக்கல் வாங்கல் என்பது குறைந்தது இரு நபர்களுக்கிடையில் நடைபெறும் ஓர் அம்சமாகும். இதில் சம்பந்தப்படும் திறத்தவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும். ஒரு திறத்;தவர் கூட பாதிப்படைய இஸ்லாம் அறவே அனுமதிக்கவில்லை.

வியாபாரத்தை அனுமதித்த இஸ்லாம் வட்டியை முற்றாக தடுத்தது. வட்டியை அடிப்படையாகக் கொண்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் திறத்;தவர்களில் ஒரு திறத்தவருக்கு ஏற்படும் அநீதி, மற்றும் பல பாதிப்புக்களைக் கவனத்திற்கொண்டே இது தடுக்கப்பட்டுள்ளது.

பின்வரும் அல்-குர்ஆனிய வசனங்கள் வட்டி பற்றி பேசுகின்றன:
‘வட்டியைத் திண்பவர்கள் ஷைத்தான் தீண்டியதால் பைத்தியம் பிடித்தவன் எழுத்திருப்பது போல் அன்றி எழமாட்டார்கள். இது ஏனெனில் நிச்சயமாக அவர்கள் ‘வியாபாரமெல்லாம் வட்டியைப் போன்றதே’ எனக் கூறியதால் ஆகும். அல்லாஹ் வியாபாரத்தை ஆகுமாக்கி, வட்டியை தடைசெய்து வைத்துள்ளான்.’ (2:275)
‘விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும் நீங்கள் விசுவாசம் கொண்டவர்களாக இருப்பீர்களாயின், வட்டியில் எஞ்சியிருப்பதை விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால், அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் போர் செய்வதை அறிந்து கொள்ளுங்கள்.’ (2:278, 279)

Wednesday, May 7, 2014

இலங்கையில் முஸ்லிம் அடிப்படை வாதிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை

இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்படுவதாக கூறப்படுவதில் உண்மையில்லை. பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டம்.

இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடிய முஸ்லிம் அடிப்படைவாதிகள் இல்லை. உறுதியாகக் கூறுகிறார் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் - பிரிகேடியர் ருவான் வணிகசூரிய.

வீரகேசரி May, 6, 2014

மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள படத்தைப் பாருங்கள். 


Friday, May 2, 2014

குட்டிக்கதை


ஒரு சீடன் குருவைப் பார்த்துக் கேட்டான்,
குருவே நான் பேரிச்சம்பழங்களைச் சாப்பிட்டால் மதக்கோட்பாடுகளைப் புறக்கணித்தவன் ஆவேனா? 
இல்லையே தாராளமாகச் சாப்பிடலாம் என்றார் குரு.
உடன் சீடன் கேட்டான். கூடவே ஈஸ்ட் சேர்த்துக் கொண்டால் அது தவறா குருவே? என்றான். 
அதிலொன்றும் தவறில்லை சாப்பிடலாம்.
மறுபடியும் சீடன் கேட்டான் மேலும் சிறிது நீர் உட்கொண்டால் என்ன குருவே?
ஒரு குறையும் இல்லை என்றார் குரு. 
அவர் முடிப்பதற்குள் சீடன் கேட்டான். இம்மூன்றும் சேர்ந்ததுதான் பேரிச்சம்பழ மது. அதை மட்டும் நான் ஏன் அருந்தக்கூடாது என்கிறீர்கள் குருவே என்றான்.

குரு கேட்டர் கைப்பிடி மண்ணையள்ளி உன் தலையில் போட்டால் உனக்கு வலிக்குமா?
வலிக்காது குருவே என்றான். 
மேலும் சிறிது நீரை ஊற்றினால்... குரு கேட்டார்.
அதுவும் வலிக்காது குருவே என்றான்.
குரு அமைதியாகச் சொன்னார் இரண்டையும் சரியான வகிதத்தில் கலந்து சுட்ட செங்கல்லாக்கி உன் தலையில் போட்டால் என்ன ஆகும்? என் தலை பிளந்துவிடும் குருவே என்றான். உன் கேள்விக்கான விடை இதுவே என்றார் குரு.