நோன்பு சிறந்த பண்பாடுகளை வளர்க்கின்றது. நோன்பு என்பது வெறுமனே பசித்திருப்பதும் தாகித்திருப்பதும் மாத்திரமல்ல. மாறாக இறைவன் தடுத்த தீய நடத்தைகளை விட்டும் தவிர்ந்திருப்பதாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:- "பொய் சொல்வதையும் அதன்படி செயற்படுவதையும் யார் விட்டுவிடவில்லையோ அவர் சாப்பாட்டையோ அல்லது உணவையோ விட்டுவிடுவதில்; அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை" எனவே நோன்பு நோற்பவன் பொய் சொல்வதையும், பொய்யின் அடிப்படையில் செயற்படுவதையும் தவிர்ந்து கொள்ள வேண்டும்.
அதேபோன்று நோன்பாளி கீழ்த்தரமான வார்த்தைகளை பேசுபவனாகவோ, சண்டை பிடிப்பவனாகவோ இருக்கமாட்டான். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:-"நோன்பு ஒரு கேடயமாகும். உங்களில் ஒருவர் நோன்பு நோற்றால் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். சத்தமிட வேண்டாம். யாராவது ஏசினால் அல்லது சண்டைக்கு வந்தால் நான் ஒரு நோன்பாளி என சொல்லிவிடுங்கள்".
எனவே நோன்பாளியின் வாயிலிருந்து பண்பான சிறந்த வார்த்தைகள் வெளியாகின்றன. மிகவும் தாழ்மையாக கதைக்கிறான். அவனிடத்திலே பொறுமை காணப்படும். இத்தகைய உயர்ந்த பண்பாடுகளை நோன்பானது ஒரு முஸ்லிமிடத்திலே வளர்க்கின்றது. எனவே எமது நோன்புகளில் இத்தகைய பண்பாடுகளை கடைபிடிப்போமாக.

தொகுப்பு:
அஷ்ஷெய்க் எம்.ஜே.எம்.அரபாத் கரீம் (நளீம்)
விரிவுரையாளர்
ஜாமியா நளீமியா கலாபீடம் - பேருவளை
விரிவுரையாளர்
ஜாமியா நளீமியா கலாபீடம் - பேருவளை
No comments:
Post a Comment