இஸ்ரேலிய ராணுவத்தின் மீது அல்-கஸ்ஸாம் படையணி பல புதிய யுக்திகளை கொண்டு தாக்குதல்களை நடாத்தி வருவதை கடந்த சில நாட்களாக காணக்கூடியதாக இருக்கிறது. கடலின் அடியில் சென்று இஸ்ரேலிய படைத்தளம் மீதான தாக்குதலை நடாத்தியமை இஸ்ரேலிய இராணுவம் எதிர்பார்க்காத ஒன்று. அது போல் நேற்றும் ஒரு முயற்ச்சியில் இறங்கியிருந்தது அல்-கஸ்ஸாம் படையணி. சிறிய ரக ட்ரோன் விமானம் போன்ற ஒன்றை இஸ்ரேலின் ராடார் திரையில் கண்ட இராணுவ கட்டுப்பாட்டு மைய உத்தியோகத்தினர், உடனடியாகவே அதனை இராணுத்தின் தலைமையத்திற்கு தெரிவித்தனர்.
This blog contains so many different types of articles, downloadable PDF books and some other links
Tuesday, July 15, 2014
Saturday, July 12, 2014
பொதுபல சேனாவுக்கு தேசிய ஷூறா சபையின் பதில்
தரிக் மஹ்மூத் - தலைவர்
தேசிய மட்ட முஸ்லிம் நிறுவனங்கள், முஸ்லிம் சமுதாயத்தின் புத்திஜீவிகள் மற்றும் செயற்பாட்டாளர்களை உள்ளிட்ட நாடளாவியரீதியான ஒரு கூட்டமைப்பாகிய தேசிய ஷூறா (ஆலோசனைச்) சபையைத் தடைசெய்யுமாறு பொது பல சேனா விடுத்த வேண்டுகோளையிட்டு நாம் வியப்படையவில்லை. பொய்களை அடிப்படையாகக் கொண்ட பகைமையைப் பரப்பி இந்த நாட்டின் சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களிடையே பல நூற்றாண்டுகளாக நிலவி வந்த சமாதானத்தையும், ஒற்றுமையையும், சகவாழ்வையும் இல்லாதொழிப்பதற்கு அரும்பாடுபடும் ஒரு அமைப்பே பொது பல சேனா என்பதை அவ்வமைப்பின் இந்த வேண்டுகோள் தெளிவாகக் காட்டுகின்றது.
இலங்கை துண்டாடப்படு, “தமிழ் ஈழம்” ஒன்றை உருவாக்குவதற்குப் பெரும் முயற்சி செய்த நோர்வே நாட்டின் பூரண அனுசரனையுடன் 2011ஆம் ஆண்டில் அந்நாட்டுக்கு விஜயத்தை மேற்கொண்ட பொது பல சேனா, அங்கு புலம் பெயர்ந்த தமிழர் அமைப்புகளையும், நோர்வே நாட்டு இஸ்லாமிய வெறுப்புணர்வாளர்களையும் சந்தித்ததைத் தொடர்ந்து, இன முரண்பாடுகளின் ஊடாக இலங்கையைச் சீர்குலைப்பதை நோக்காகக் கொண்ட முஸ்லிம் விரோத விஷமத்தைப் பரப்புவதற்கான வஞ்சகமான செயற்திட்டம் ஒன்றை பொறுப்பேற்றுள்ளதாகத் தெரியவருகின்றது. இதன் மூலம் நோர்வே நாட்டின் பின்னணியில் உள்ள மேற்குலக சக்திகள் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் பயன்பெறுவர். இந்த நாட்டில் பொது பல சேனா மேற்கொள்ளும் குற்றச் செயல்களுக்கெல்லாம் வருந்தத்தக்கவாறு இலங்கை பதில் கூற வேண்டிய நிலையில் உள்ளது.
Sunday, July 6, 2014
ரமலான் மாதத்தில் உலகை உலுக்கிய ஐந்து வரலாற்று நிகழ்வுகள்.
1. பத்ர் போர் :
இன்று நாம் முஸ்லிம்களாக வாழ்வதற்கு அன்று அம்முந்நூறு சஹாபாக்கள்
தங்களின் உயிரையும் அல்லாஹ் உடைய பாதையில் தியாகம் செய்வதற்கு முன்வந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட எதிரிகளை வீழ்த்தி இஸ்லாம் என்றும் நிலைத்திருக்க வித்திட்ட அப்போரும் இப்புனிதமிகு ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு ரமலான் மாதம் பிறை 17 இல்தான்.
2. மக்கா வெற்றி :
குறைசிகளின் வசமிருந்த முஸ்லிம்களின் முதல் வணக்கஸ்தலமாகிய மஸ்ஜிதுல் ஹரம் ஷரீபை நமது முஹம்மது நபி (ஸல்) அவர்களால் மீட்கபட்டு அங்குள்ள சிலைகளை தகர்த்தெரிந்து உலக வரலாற்றின் திருப்புமுனையாக அமைந்த இம்மாபெரும் நிகழ்வு நடந்தும் ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில்தான்.
3. அன்-ஜாலித் போர்:
உலகத்தையே ஆளவேண்டும் என்ற வெறிகொண்ட எண்ணத்தோடு அப்பாஸிய கிலாபத்தையே அடித்து நொறுக்கிய மங்கோலிய படைகளை தடுத்து நிறுத்தி, அவர்களின் வெறித்தனத்தை அடக்கவேண்டும் என்று எகிப்து மம்லுக் சுல்தான் தலைமையில் அவர்களுக்கு எதிராக போர் செய்து முஸ்லிம்கள் வெற்றிகண்டதும் ஹிஜ்ரி 658 ரமலான் மாதத்தில்தான்.
4. ஹைதீன் போர்:
உலக யூத, கிறிஸ்தவர்கள் எல்லாம் திரும்பி பார்க்கவைத்த, நடுங்கவைத்த சுல்தான் சலாஹுதீன் அய்யுபி தனது பெரும் படையுடன் ஜெருசலம் நகரை (பைதுல் முகத்தஸ்) கைப்பற்ற கிறிஸ்தவர்களுக்கு எதிராக படையெடுத்து வெற்றிபெற்றதும் இப்புனிதமிகு ரமலான் (ஹிஜ்ரி 583) மாதத்தில்தான்.
இவ்வெற்றிக்கு பிறகு நமது முதல் கிப்லா இஸ்லாமியகளின் கையில் 700 ஆண்டுகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. மீண்டும் ஒரு சலாஹுதீன் அய்யுபியை போன்ற ஒரு மாவீரனை இவ்வுலகிற்கு அல்லாஹ் தந்தருள்வானாக ஆமீன்…
5. குவாடிலட் போர்:
ஸ்பெயினின் கொடுமையான ஆட்சி புரிந்த விசிகோத் மன்னனுக்கு எதிராக
மொரோக்கோவில் அடிமை வம்சத்தில் பிறந்த பெர்பர் இனத்தை சேர்ந்த தாரிக் பின் ஜியாத் தலைமையில் ஸ்பெயின் மீது மிகவும் குறைந்த வீரர்களை கொண்டு பெரும்படையை வெற்றி கண்டு ஐரோப்பிய கண்டமே நடுங்கிய வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு நடந்தது ஹிஜ்ரி 92ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில்தான். இவ்வெற்றிக்கு பிறகு சுமார் 800 ஆண்டுகள் ஸ்பெயினை (அண்டலூசியவை) முஸ்லிம்கள் ஆட்சிபுரிந்தார்கள்.
Saturday, July 5, 2014
அப்பாவி முஸ்லிம்களை தாக்கிய சிங்கள காடையர்களை விட்டு விட்டு, தாக்கப் பட்ட முஸ்லிம்களிடம் ஆயுதங்களை தேடுகிறார்கள்...!
ஆயுதங்களை கண்டுபிடிக்க அளுத்கம, பேருவளை, தர்காநகர் பகுதிகளில் தேடுதல்
Posted: 01 Jul 2014 01:20 PM PDTமேலே உள்ள செய்தி jaffnamuslim இணைய தளத்தில் வெளியானது.
அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் மறைத்து வைக்கப்பட்டு ள்ளதாக சந்தேகிக்கப்படும் ஆயுதங்களை கண்டுபிடிப்பதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையுடன் இணைந்து பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலு வலகம் தெரிவித்தது.
அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் அண்மையில் இடம்பெற்ற மோதல்களில் பல கடைகள், வீடுகள் என்பன நாசமானதோடு பலர் காயமடைந்தனர் நாசகார வேளைகளுக்கு பயன்படுத்தப்பட்ட பெற்றோல் குண்டுகள், கைக்குண்டுகள், இரும்பு தடிகள் மற்றும் ஆயுதங்களை பொலிஸ் நிலையங்களிலோ பொதுவான இடமொன்றிலோ கையளிக்குமாறு பொலிஸார் ஒலிபெருக்கி மூலம் கடந்த வாரம் அறிவித்தனர்.
உரிய காலத்தினுள் ஆயுதங்களை கையளிப்பவர்களுக்கு எதிராக எந்தவித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்ப டாது எனவும் பொலிஸார் அறிவித் திருந்தனர்.
ஆயுதங்களை கையளிக்க வழங்கப்பட் டிருந்த காலக்கெடு முடிவடைந்துள்ள நிலையில் அளுத்கம, பேருவளை, தர்காநகர் பகுதிகளில் தேடுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விநாடிக்கு பத்தாயிரம் ஜிபி டேட்டா அனுப்பும் ஷேடோ இன்டர்நெட்
அமெரிக்காவில், கூகுள் நிறுவனம், அங்குள்ள வீடுகளுக்கான இன்டர்நெட் இணைப்பில், விநாடிக்கு 10 கிகா பிட் டேட்டா பரிமாற்ற வேகத்தினைத் தர முடியும் என்று இலக்கு வைத்து முயற்சிகளை எடுத்து வருகிறது.
இது இன்றைய இணைய வேகத்தினைப் போல ஆயிரம் மடங்கு அதிகமாகும். பலர் இது அறிவியல் கதைகளில் மட்டுமே இருக்கும் என எண்ணுகின்றனர்.
ஆனால், நாசா விண்வெளி மைய விஞ்ஞானிகளுக்கு இந்த வேகம் நத்தை வேகத்திற்கு இணையானதாகும். ஏனென்றால், அவர்கள், விநாடிக்கு பத்தாயிரம் கிகா பைட்ஸ் டேட்டா பரிமாற்றத்தைத் தரக்கூடிய ஷேடோ இன் டர்நெட் என்னும் அமைப்பை உருவாக்கி வருகின்றனர்.
Subscribe to:
Posts (Atom)