இன்று நாங்கள் தகவல் தொழில்நுட்ப உலகில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நவீன தகவல் தொழில்நுட்பத்தின் அனைத்து பிரயோசனங்களையும் நுகர்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனாலும் தகவல் என்றால் என்ன என்பது பற்றி யாருமே ஆழமாக சிந்திக்க முற்படுவதில்லை. தகவல் என்றால் பத்திரிகைகளிலோ, புத்தகங்களிலோ, வானொலியிலோ அல்லது தொலைத்தொடர்பு சாதனங்களின் வாயிலாக கிடைக்கக் கூடிய செய்திகள் என்று கருதுகின்றோம். அல்லது ஒழுங்கு படுத்தப்பட்ட தரவுகளின் தொகுதி தகவல் என்று கருதுகின்றோம்.
உண்மையில் தகவல் (Information) என்றால் சடப்பொருளோ, சக்தியோ அல்ல. தகவல் என்பது ஒரு கற்பனையான விடையமும் அல்ல. அவ்வாறெனில் தகவல் என்றால் என்ன....?
இது சம்பந்தமாக விஞ்ஞானிகள் இப்போது ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறார்கள். தகவல் சம்பந்தமாக ஆராய்ச்சி செய்யும் விஞ்ஞானிகள் உலகிற்கு ஒரு புதிய விஞ்ஞானத்தை வழங்க காத்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களுடைய கருத்தின் படி இந்த உலகம் உருவாக முதலேயே அதாவது பெரு வெடிப்பு (big bang) நிகழ்வதற்கு முதலே தகவல் இருந்திருக்க வேண்டும் என்று கருதுகிறார்கள். அது எதைப் போன்றது என்றால், தற்போது தகவல் பரிமாற்றத்திற்காக அதிகளவு பயன்படுத்தும் கணனியைப் போல.